சுய கற்று புரட்சிக்காரர்கள் – தங்களைத் தாங்களே செதுக்கிக்கொள்ளும் சிற்பிகள்

(The Self-Taught Revolution)

ஜிஹாத் அமெரிக்காவை 9/11 அன்று உளுக்கிய‌ நேரத்தில் நமக்கு (அமெரிக்காவினருக்கு) இஸ்லாம் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. இஸ்லாம் மக்கா என்ற நகரில் தோன்றியது என்ற புவியியல் விவரம் தவிர,  நம் பேராசிரியர்களுக்கும், சட்ட நிபுனர்களுக்கும், ஊடகத்திற்கும் மற்றும் இராணுவத்துக்கும் இஸ்லாமிய கோட்பாடுகள் பற்றி அடிப்படை அறிவு அப்போது இல்லாமல் இருந்தது.

நம்முடைய நாட்டின் மற்றும் நாகரீகத்தின் படித்த தூண்கள் என்று கருதப்பட்ட, பேராசிரியர்கள் மற்றும் படித்த மேன்மக்கள் நம்மிடம் "இஸ்லாம் ஒரு அமைதியான மார்க்கம், பிரச்சனையெல்லாம் நம்மிடம் தான் உள்ளது" என்று  கூறினார்கள்.  நம்முடைய பழமையவாய்ந்த ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்கள் அனைவரும் ஒருவகையாக இஸ்லாமுக்காக தாவா பணியைச் செய்தவர்கள் தான், தங்களை அறியாமலேயே இஸ்லாமுக்காக வக்காளத்து வாங்கியவர்கள் தான்.

அந்த 9/11 நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு புரட்சி வெடித்தது. சுயமாக படித்து இஸ்லாமிய அறிவில் உயர்த்திக்கொண்டவர்கள் எழுந்து நிற்க ஆரம்பித்தார்கள், புத்தகங்களையும், இணைய தளங்களிலும் எழுத ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்டவர்கள் செய்த ஒரு சுவாரசியாமான புரட்சி என்ன தெரியுமா? சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள சாதாரண மனிதனுக்கும் புரியும் வகையில் இவர்கள் புத்தகங்களை எழுத ஆரம்பித்தது தான். இதற்கு முன்பு அறிஞர்களால் எழுதப்பட்ட‌ இஸ்லாமிய புத்தகங்கள், நன்கு படித்த மற்ற அறிஞர்களுக்கு மட்டுமே புரியும் படி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுய கற்றுப் புரட்சிக்காரகள் இன்னொரு புதிய சாதனையும் புரிந்தார்கள். அதாவது குர்‍ஆன் மற்றும் முஹம்மதுவின்  வாழ்க்கையின் (சுன்னாவின்) அடிப்படையில் இஸ்லாமின் அஸ்திபாரத்தை தோண்டி எடுத்தார்கள், புத்தகங்களாகவும், இணைய தளங்களிலும் பதித்தார்கள்.  இஸ்லாம் பற்றி தொன்று தொட்டு ஆய்வு செய்யும் அறிஞர்கள், பல குழப்பமான விவரங்களை பல இஸ்லாமிய  மேதாவிகளின் கருத்துக்களிலிருந்து சேகரித்து 'இது தான் இஸ்லாம்' என்றுச் சொல்லி, புத்தகங்கள் எழுதினார்கள். இப்புத்தகங்களைப் படித்து, இவர்கள் சொல்லும் இஸ்லாமை புரிந்துக்கொள்ள முடியாமல் சாதாரண மனிதன் குழம்பினான், மேலும் அவனுக்கு அவ்விவரங்கள் படிப்பதற்கு சுவாரசியாமாகவும் இருந்ததில்லை.

இந்த‌ சுய கற்று புரட்சியாளர்களின் சாதனை, முந்தைய கால சுய கற்று புரட்சியாளர்களை ஞாபகப்படுத்தியது, அதாவது இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் சாதனைகளைப் புரிந்த‌ முந்தைய விஞ்ஞானிகளின் முயற்சிகளுக்கு ஒத்ததாக இருந்தது. நியூட்டன் என்ற விஞ்ஞானி 'கால்குலஸ் (calculus)' மற்றும் 'க்ளாசிகல் மெகானிக்ஸ் (classical mechanics)' போன்றவற்றை பள்ளிக்கூடங்களில் படித்து கற்றுக்கொள்ளவில்லை. அவர் சுயமாக இக்கோட்பாடுகளை உருவாக்கினார். அவர் ஒரு 'சுய கற்று புரட்சிக்காரராக இருந்தார்'. கடந்த காலத்தை திரும்பி பார்க்கும் போது,  கண்டுபிடிப்புக்கள் அனைத்தும், புதியவைகளை கற்றுக்கொண்டு சுயமாக  கண்டுபிடிக்கப்பட்டவைகளாகவே இருக்கும். பென்சமின் பிராங்கிளிங் என்ற விஞ்ஞானிக்கு 'மின்னல்'  என்பது ஒரு 'மின்சாரம்' என்று  யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. பல ஆய்வுகளைச் செய்து  அவராகவே அதனை கண்டுபிடித்தார், இவரும் ஒரு சுய கற்று புரட்சியாளராக திகழ்ந்தார்.

இதுபோலவே, இஸ்லாமின் இன்னொரு பக்கமாகிய 'அரசியல் இஸ்லாம்' பற்றி அறிந்துக்கொள்ளும் விருப்பம் எனக்கு வந்தது கூட சுயமாக வந்தது தான், இவைகளை எந்த ஒரு இஸ்லாமிய பேராசியரின்  மூலமாக கற்றதில்லை. இந்த சுய கற்று புரட்சியாளர்களை இன்னொரு வகையில் ஒப்பிடவேண்டுமென்றால், அவர்கள் படித்த கொரில்லா போராளிகள் என்றுச் சொல்லலாம்.

இன்று டொனால்ட் டிரம்ப் ஷரியாவிற்கு எதிராக நடந்துக்கொண்டு இருக்கும் சுய கற்று புரட்சியை சரியாக‌ புரிந்துக்கொள்வாரானால்,  முஸ்லிம் பிரதர்ஹுட் என்றுச் சொல்லக்கூடிய தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களுக்கு உதவி செய்வார். இதனை சிறிது சிந்தித்துப்பாருங்கள். ஒருவேளை ராபர்ட் ஸ்பென்சர், மற்றும் இதர இஸ்லாமிய சுய கற்று புரட்சியாளர்களுக்கு, அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள், இராணுவ மற்றும் இதர பாதுகாப்பு அமைச்சகம் கண்டுபிடித்த இஸ்லாமிய தீவிரவாத புள்ளிவிவரங்களை ஆய்வு செய்வதற்கு வாய்ப்பு கொடுத்தால்? தீவிரவாதங்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துப்பாருங்கள், மெய் சிலிர்த்துவிடும், பொய் சிந்தைந்துவிடும்.

ஆசிரியர்: பில் வார்னர் (Bill Warner)

மூலம்: https://www.politicalislam.com/self-taught-revolution/

ஆசிரியர் இந்த தலைப்பு பற்றி பேசும் வீடியோவை இங்கு காணலாம் (ஆங்கிலம்  - 6:20 நிமிடங்கள்): https://www.youtube.com/watch?v=1GPXyBwmuxI


ஆசிரியர் பில் வார்னர் அவர்களின் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்