கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது?

அல்லது

கிறிஸ்தவம் மேற்கு...கிழக்கு...வடக்கு ம‌ற்றும் தெற்கத்திய மார்க்கமாகும்!

Why Christianity is Western
Or
Christianity is Western ... And Eastern and Southern, and Northern!

உங்கள் மனதின் சிந்தனையை கிளறி, சிந்திக்க‌த் தூண்டும் சில‌ வரிக‌ளை நான் சொல்ல‌ட்டும்.

எல்லா யூதர்களும் பணக்காரர்கள்

எல்லா கருப்பின மக்களும் நல்ல விளையாட்டு வீரர்கள்

எல்லா பிரன்சுக்காரர்களும் க‌ரடுமுரடானவர்கள்

எல்லா மெக்ஸிக்கோகாரர்களும் சோம்பலானவர்கள்

எல்லா அரபியர்களும் தீவிரவாதிகள்


இப்படிப்பட்ட சுருக்கமான, சுலபமான வார்த்தைகளைத் தான் மக்கள் கலாச்சாரத்தை விவரிக்க பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவைகள் தவறானவைகளாக இருக்கின்றது. எனக்குத் தெரியும், பல பணக்கார யூதர்கள் இருப்பது உண்மை தான், பிரன்சுக்காரர்களில் சிலர் கரடுமுரடானவர்கள் இருப்பதும் உண்மை தான், மற்றும் சோம்பளுள்ள மெக்ஸிக்கோகாரகள் இருப்பதும் உண்மை தான். அதே போல, கருப்பர்களில் மிகவும் திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள், மற்றும் சில அரபியர்கள் தீவிரவாதிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஒரு சிலரை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் நாட்டிற்கும், இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் பொதுவான பெயரைத் தருவது சரியானதல்ல. பல‌வித்தியாசமான கலாச்சாரத்தைப் பற்றி தெரியாதவர்களும், தெரியாத விவரங்களைப் பற்றி தெரிந்தவர்கள் போல காட்டிக்கொள்கிறவர்கள் சொல்லும் வார்த்தைக‌ள் தான் இந்த‌ வ‌ரிக‌ளாகும். உண்மையில் அவ‌ர்க‌ள் த‌வறாக‌ புரிந்துக் கொண்டுள்ளார்க‌ள். இன்னொரு முக்கிய‌மான‌ வ‌ரியைச் சொல்கிறேன்.

 

எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்கள்.

நான் ஒரு அமெரிக்க பிரஜையாகவும், அதே நேரத்தில் ஒரு கிறிஸ்தவளாக‌னாகவும் இருப்பதினால், மேலே சொல்லப்பட்ட வரியும் உண்மைக்கு முரணாக உள்ளதென்பதை நான் நிச்சயமாக சொல்லமுடியும். நான் சொல்வதை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால், "கிறிஸ்தவன்" என்றால் என்ன பொருள் என்று அமெரிக்காவிற்கு தெரியவில்லை என்பது தான் உண்மை.

ஐரோப்பிய நாடுகளில் இருந்த மக்கள் மத கொடுமைகளிலிருந்து தப்பித்து இந்த அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்கள் என்றும் இப்படிப்பட்ட மக்களால் தான் இந்த அமெரிக்க நாடு உருவாக்கப்பட்டது என்றும் நம் எல்லாருக்கும் தெரியும். (இதே "கிறிஸ்தவ" மனப்பான்மை தான் குருசேடர்கள் என்ற பெயரில் முஸ்லீம்களை கொன்றது, ஆனால், தங்களுக்கு இதே பிரச்சனை வரும்போது, அதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை - the same "Christian" mentality that slaughtered Muslims during the Crusades turned its attention to others of which it didn't approve!), நம்முடைய சுதந்திரமும் மற்றும் சட்டங்களும் பைபிளில் அவர்கள் கண்ட சத்தியத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட சுதந்திரத்தில் ஒரு சுதந்திரம் தான், நம் சமய கோட்பாடுகளுக்கேற்ப நமக்கு விருப்பமான இறைவனை நாம் வணங்கவும் அல்லது வணங்காமல் இருக்கவும் கொடுக்கபப்டும் சுதந்திரம். இக்காரணங்களை முன்னிட்டு, மக்கள் பாதுகாப்பாகவும் மற்றும் சுயஅதிகாரம் உடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக‌, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசாங்கம் குறைவான அதிகாரங்களை தன்னிடம் கொண்டுள்ளது, அதே சமயத்தில் தேவைப்படும் போது சட்டம் மீறப்படும் சமயங்களில், அதே அரசாங்கம் தன் நீதித்துறையின் அதிகாரத்தின் மூலமாக மக்களை பாதுகாக்கிறது.

இன்னுமுள்ள சுதந்திரங்களில் குறிப்பிடத்தக்கது, அரசாங்கம் மக்களை அநியாயமாக கொடுமைபடுத்தக் கூடாது என்ற சுதந்திரமாகும்.

இந்த சுதந்திரங்கள் மிகவும் முக்கியமான மற்றும் சரித்திர பூர்வமாக உள்ள ஒரு கலவை உருவாக உதவுகின்றன, அது என்னவென்றால், வித்தியாசமான பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒருமித்து வாழ கற்றுக்கொண்டு ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக வாழும் கலவையாகும். ஒருவன் நீங்கள் நம்புவதை நம்பாமல் வேறு ஒன்றை நம்புகின்றார் என்பதற்காக சட்டத்தை பயன்படுத்தி அவனை கொடுமைப்படுத்தக்கூடாது. இந்த சுதந்திரத்தை மக்கள் சரியாக பின்பற்றவில்லையானாலும், இந்த சுதந்திரத்தின் அடித்தளம் நேரடியாக தேவனின் யோசனையிலிருந்து வந்ததாகும், "யூதனென்றும் கிரேக்கன் என்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனன் என்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை” நீங்கள் எல்லாரும் அவருடைய பார்வையில் சமமாயிருக்கிறீர்கள் (கலாத்தியர் 3:28).

எப்ப‌டியாயினும், அமெரிக்க‌ ஐக்கிய‌ நாடுக‌ள் உருவான‌ நாட்க‌ள் முத‌ற் கொண்டு, ப‌ல‌ ஆண்டுக‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌, ம‌ற்றும் ந‌ம் சுத‌ந்திர‌ங்க‌ளின் அடிப்ப‌டை த‌த்துவ‌ங்க‌ள் சிறிது சிறிதாக‌ ம‌ற‌க்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌ ம‌ற்றும் அல‌ட்சிய‌ம் செய்ய‌ப்பட்டுள்ள‌ன‌. ந‌ம்முடைய‌ நாடு கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுக‌ளின் மீது உருவாக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை கூட‌ ம‌க்க‌ள் ச‌ரியாக‌ தெரிந்துக் கொள்ளாம‌ல் இருக்கிறார்க‌ள். இது ம‌ட்டுமா, குறைந்த‌ ப‌ட்ச‌மாக‌ "கிறிஸ்த‌வ‌ அடிப்ப‌டை கோட்பாடுக‌ள்" என்றால் என்ன‌ என்ப‌தையும் தெரிந்துக் கொள்ளாம‌ல், "கிறிஸ்த‌வ‌ன்" என்றால் ஒரு கலாச்சார‌ம் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌ வார்த்தையாக‌ க‌ருதிக்கொண்டு இருக்கிறார்க‌ள். ஒருவ‌னின் பெற்றோர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தால், அவ‌ன் கூட ஒரு கிறிஸ்த‌வ‌ன், ச‌ரியா? என்று கேட்டால், பதில் தவறு என்பதாகும்.

இந்நாட்டை தோற்றுவித்த நம் முன்னோர்கள், கிறிஸ்தவத்தை நாட்டின் அங்கீகரிக்கபப்ட்ட மதமாக ஆக்கியிருந்தாலும், நாம் குழப்பமடையத் தேவையில்லை. கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு முக்கியமான அடிப்படை கோட்பாடு என்னவென்றால், இறைவனை நம்பும் படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதாகும். தேவன் அவருடைய அன்பு மற்றும் இரக்கத்தின் பக்கம் நீங்கள் உங்கள் சுய விருப்பத்தின் படி திரும்ப வேண்டும் அல்லது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இந்நாட்டை தோற்றுவித்த நம் முன்னோர்கள் அவர்களால் முடிந்த ஒன்றை செய்து விட்டு சென்றுள்ளார்கள், அது என்னவென்றால், இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை என்றால் என்ன? என்ற கேள்விக்கு எதிர் காலத்தில் வரும் ஒவ்வொரு சந்ததியும் பதில் அளிக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள் (So our founders did the only thing they could—they left the question of faith to be answered by each succeeding generation).

ஆகையால், நம் நம்பிக்கைகள் மற்றும் செயல்களுக்கு நாமே பொறுப்பு வகிப்பதையே சுதந்திரம் என்கின்றோம். துரதிஷ்டமாக, மக்கள் இயேசுவின் போதனைகளை நம்புவதைக் காட்டிலும், எதையும் நம்பாமல் இருப்பது மிகவும் சுலபம் என்று எண்ணி விடுகின்றனர். இதைவிட மிகவும் கொடூரமானது என்னவென்றால், மக்கள் தங்களுக்கு மிகவும் கவர்ச்சியாக உள்ள போதகத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆனால், தங்கள் மனதிற்கு சஞ்சலத்தை கொடுத்தும் போதகத்தை தள்ளி விடுகின்றனர். இப்படிப்பட்ட மனப்பான்மைத் தான் "கிறிஸ்தவன்" என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தை மறைக்கச் செய்கிறது. "கிறிஸ்தவன்" என்ற வார்த்தைக்கு பொருள் என்னவென்றால், அவன் "கிறிஸ்தவ" பெற்றோருக்கு பிறந்தவனாக இருக்கலாம், அல்லது “சரியான ஒன்றைச் செய்கிறவனாக” இருக்கவேண்டும் . நீங்கள் மற்றவர்களை சரியாக நேர்மையாக நடத்தவிரும்பினால், அவர்களை சபிக்காதீர்கள், அல்லது அவர்களை மது அருந்தச் செய்யாதீர்கள், இப்படி நீங்கள் செய்வீர்களானால், நீங்கள் கிறிஸ்தவராக நடந்துக்கொள்கிறீர்கள் என்று பொருள். இன்று நாம் பொதுவாக‌ “கிறிஸ்தவம்” என்ற வார்த்தைக்கு கொடுக்கும் பொருளில், அன்று இயேசு வாழவில்லை. இன்றுள்ள கிறிஸ்தவம் என்ற வார்த்தையின் பொருளுக்குள் அவரை நாம் அடைக்க முடியாது.

இயேசுவின் வார்த்தைகளை மிகவும் ஆர்வத்துடன் நம்புகின்ற எங்களைப் பற்றி இப்போது நீங்கள் கற்பனை செய்துப் பார்க்க முடியும். நாம் நம் அயலகத்தாருடன் நம் நம்பிக்கைப் பற்றி பேசுவதற்கு முன்பாக சில பழக்கப்பட்ட வார்த்தைகளின் உண்மை பொருள் என்ன என்பதை வகையறுக்க வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால், "சர்ச் அல்லது கிறிஸ்தவ சபை" என்ற வார்த்தையும் தன் முழு அர்த்தத்தை இழந்து விட்டது எனலாம். இப்போது இவ்வார்த்தைக்கு "இயேசுவின் சரீரம்" என்று பொருள் இல்லை, இதற்கு பதிலாக சர்ச் என்பது ஒரு கட்டிடம், அங்கே மத சம்மந்தப்பட்ட மக்கள் கூடுவார்கள் அல்லது ஆன்மீக உற்சாகம் உள்ளவர்கள் கூடும் ஒரு இடம் என்று பொருளாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட குழப்பம் நம்முடைய எல்லைக்குள் உள்ளவர்களிடையே இருக்கிறது, அப்படியானால், வேறு ஒரு கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் புரிந்துக் கொள்ளவிலலை என்றுச் சொல்வதில் ஆச்சரியமில்லை.

[கீழ் கண்ட பத்தியை படிப்பதற்கு முன்பாக ஒரு சிறு தமிழாக்க‌ குறிப்பு: அமெரிக்காவில் சோப் ஆபுரா என்று ஒரு நாடகத்தை (மெகா சீரியல்) தொலைக் காட்சிகளில், வானொலிகளில் ஒளி(லி)பரப்புகிறார்கள். இந்த நாடகங்கள் பெரும்பான்மையாக உயர்மட்ட பணக்கார பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்க்கையைப் பற்றிய கற்பனைக் கதை அல்லது நாவலாக தயாரித்து ஒளி(லி)பரப்புவார்கள். இந்நாடகங்களில் பெரும்பான்மையாக செக்ஸ் அல்லது உடலுறவு, மற்றும் கள்ளத் தொடர்புகளுள்ள உறவுகள்  பற்றிய கதைகள் தான் மேலோங்கி இருக்கும். இந்நாடகங்களைக் காணும் அமெரிக்கர் அல்லாத நாட்டு மக்கள், அமெரிக்காவின் வாழும் மக்களின் உண்மை வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நம்பிவிடுகின்றனர். மேலும் அறிய இங்கே Soap-Opera  சொடுக்கவும்.]

இப்படி மக்கள் கிறிஸ்தவத்தை தவறாக புரிந்துக் கொள்வதினால், பல திடுக்கிடும் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு இது காரணமாகிவிடுகிறது. ஒரு முறை நான் துருக்கியில் இருக்கும் போது இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு முறை நானும் என் சிநேகிதியும் துருக்கி நாட்டுக்கு பிரயாணப்பட்டு இருந்தோம், துருக்கியில் சந்திக்கும் நபர்களிடம் நம் குடும்ப நபர்களின் புகைப்படங்களை கொண்டுச்சென்று காட்டும் படி எங்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. என்னோடு வந்த அந்த சிநேகிதி, தன் வீட்டில் விட்டுவந்த தன் நான்கு பிள்ளைகளின் புகைப் படங்களை தன்னோடு கூட கொண்டு வந்தாள், மற்றும் அவைகளை மற்றவர்களிடம் காட்டும் போது மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டே காட்டினாள். துருக்கியில் எங்களோடு வந்த வழிகாட்டி (மொழி பெயர்ப்பாளர்) எங்களிடம் "துருக்கி மக்களாகிய நாங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு எத்தனை தந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்" என்றுச் சொன்னபோது, நாங்கள் இருவரும் அதிர்ந்து போனோம்! இவர்கள் இப்படி கேட்பதற்கு, "சோப் ஆபுரா – Soap Opera" என்ற வானோலி மற்றும் தொலைக்காட்சி மெகா சீரியல் தான் காரணம். இந்த Soap Opera என்ற நாடகங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் அமெரிக்காவில் உள்ள வாழ்க்கைப் பற்றி எதிர்மறையாக உலகமனைத்திற்கும் சொல்கின்ற பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இவர்களின் நாடகங்களை உலக மக்கள் கண்டு, இப்படித் தான் ஒவ்வொரு அமெரிக்கனின் வாழ்க்கையும் கீழ் தரமாக‌ இருக்கும் என்று நம்பிவிடுகின்றனர். என்னுடைய சிநேகிதி, துருக்கியிலுள்ள மற்ற புதிய சிநேகிதிகளுக்கு "என் பிள்ளைகள் அனைவருக்கும் ஒரு தந்தை தான் இருக்கிறார் என்று" எடுத்துக்கூறினாள். ஆனால், எங்கள் உள்ளங்களில்  அந்த உரையாடல் ஒரு பெரிய பாதிப்பை உண்டாக்கி விட்டது. அதாவது, சோப் ஆபுரா = அமெரிக்கர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் = அமெரிக்கர்கள் என்றுச் சொன்னால், சோப் ஆபுராக்கள் = கிறிஸ்தவர்கள் என்று பொருளா! அப்படியானால், இவ்வுலத்திற்கு இயேசு கொண்டு வந்த சுவிசேஷத்தின் நற்செய்தி என்ன ஆவது?

அப்படியானால், இயேசு என்பவர் யார்? அவர் ஒரு வெள்ளைத் தோலோடு, நீல கண்களோடு கூடிய ஒரு மேற்கத்திய நாட்டவரா? ஆனால், என் பைபிள் சொல்கிறது, அவர் ஒரு யூதனாக பிறந்தார், அதனால், வெள்ளைத் தோலையும், நீலகண்களையும் மறந்து விடுங்கள். அவர் ஒரு மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் அவர் அந்த இடங்களில் வாழ்கிற மக்களைப் போலவே இருந்திருப்பார், இதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் ஒரு யூத குடும்பத்தில் வளர்க்கப்பட்டார் மற்றும் தன் முழு வாழ்க்கையையும்  இஸ்ரவேல் என்ற நாட்டிலேயே கழித்தார். அப்படியானால், மத்திய கிழக்கு யூத நாட்டை மையமாகக் கொண்ட‌ ஒரு மதம், எப்படி ஒரு மேற்கத்திய மார்க்கமாக கருதப்படுகிறது? (How could the religion that is centered on a Middle Eastern Jew came to be regarded as Western?)

இயேசுவின் போதனைகளில் முத்துக்களால் பதிக்கப்படவேண்டிய ஒரு போதனை என்னவென்றால், "இறைவனை நாம் உண்மையோடும், ஆவியோடும் தொழுதுக் கொள்ள வேண்டும்" என்பதாகும். அவருடைய இரட்சிப்பின் செய்தியானது நாடு மற்றும் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது. உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும், எல்லைகளைத் தாண்டி இறைவனிடம் திரும்பும் வாய்ப்பை பெறவேண்டும் என்ற நோக்கில் இறைவன் தன் இரட்சிப்பு திட்டத்தை உருவாக்கினார். முழு உலகமும் அவரை தொழுதுக் கொள்ள ஏற்ற இடமாகும் (இந்த இடத்தில் தான் தொழுதுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை); எல்லா மொழிகளும் தேவ ஆட்டுக் குட்டியாகிய இயேசுவை புகழ மற்றும் ஆராதிக்க தகுதியுடையது. நாம் வித்தியாசமான நாடுகளில், வித்தியாசமான கலாச்சார மொழிகள் உள்ள சமுதாயங்களில் வாழுகின்றோம் என்று அவருக்குத் தெரியும், மற்றும் அவருடைய கிருபையின் சிங்காசனத்தை நெருங்க நம்மால் முடியும். ஆகையால், தேவன் ஒருவர் மட்டுமே, மனித வர்க்கம் இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பதால் மீட்பு அடைய முடியும் என்ற மிகவும் சுலபமான வழிமுறையை உருவாக்க முடியும்.

தற்போது, உலகத்தின் மற்ற பாகங்களை விட, மேற்கத்திய நாடுகளில் அதிக சதவிகித கிறிஸ்தவர்கள் இருப்பதாக நாம் காண முடியும். ஆனால், எப்போதும் இது போல‌ இருந்த‌தில்லை, எதிர் கால‌த்தில் இப்ப‌டியே இருக்க‌ப் போவ‌துமில்லை என்பது மிகவும் தெளிவாக உள்ளது. நம்மில் ஒவ்வொருவரும் இப்படியே இருக்கப் போவதுமில்லை, மற்றும் சரித்திரமும் இன்று போலவே இருக்கப் போவதுமில்லை. கிறிஸ்தவம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கிற்கு பரவியதும், இறைவனின் திட்டங்களில் ஒன்று தான். இன்று அனேக ஆப்ரிக்க மக்கள் இயேசுவின் பெயரை பறைசாற்றுகிறார்கள். ஆசியாவில் இயேசுவின் சபை செழித் தோங்கிக் கொண்டு இருக்கின்றது (கொரியா தன் மிஷனரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி க்கொண்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!). இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் உருவம் என்று இதுவரைஅச்சடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் உருவமானது கருப்பாக மாறும் மற்றும் அவருடைய கண்கள் பாதாம் கொட்டைகள் போல வண்ணத்தில் அச்சடிக்கப்படும். இப்படி இயேசுவின் உருவப் படத்தை மாற்றுவதினால், நற்செய்தியின் சாராம்சம் மாறாது, அது அப்படியே இருக்கும்:

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16

ஆங்கில மூலம்: American = Christian?


முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்