அறிவு கெட்ட உமரே! முஹம்மது இஸ்லாமை வாளால் பரப்பவில்லை! ரஹீக் புத்தகமும் முஹம்மது பாஸிமும்

ஜூலை 31, 2008ம் ஆண்டு, “முஹம்மது இஸ்லாமை வாளால் பரப்பினார்”, என்பதை அவர் மற்ற அரசர்களுக்கு எழுதிய கடிதங்களே சாட்சிகள் என்று எடுத்துக்காட்டி ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன்.

அதனை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம்:

இதற்கு 2022, ஜனவரி 22ம் தேதி, "முஹம்மது பாஸிம்" என்ற சகோதரர் "அறிவு கெட்டவனே" என்று எனக்கு ஒரு புகழாரம் சூட்டி ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தார், அதனை கீழே படிக்கவும்.

mohamed baasim சொன்னது…

அறிவு கெட்டவனே

முஹம்மது நபி கடிதம் எழுதியது ஆங்கிலத்தில் அல்ல அரபியில்.

அந்த அரபியை பிழையாக மொழிபெயர்த்து இருந்தால் சொல்.

அதை விட்டு பிழையான ஆங்கில மொழி பெயர்ப்பை காட்டாதே.

12 ஜனவரி, 2022 அன்று முற்பகல் 11:11

Source: https://isakoran.blogspot.com/2008/07/blog-post_31.html

இந்த கட்டுரையில்  சகோதரர் முஹம்மது பாஸிம் அவர்களுக்கு பதிலைக் கொடுப்போம். முதலாவது மேற்கண்ட கட்டுரையை ஒரு முறை படித்துவிடவும்.

1) யார் அறிவு கெட்டவன்?

முஹம்மது பாஸின் என்பவர் தம்முடைய பின்னூட்டத்தில் "என்னை அறிவு கெட்டவன்" என்றுச் சொல்கிறார். முஹம்மது அரபியில் கடிதங்கள் எழுதினார், ஆங்கிலத்தில் இல்லை,  பிழையான ஆங்கில மொழிப்பெயர்ப்பைக் காட்டாதே என்றுச் சொல்கிறார். 

இவர் சிறிது நேரம் செலவழித்து, ஆய்வு செய்து இருந்திருந்தால், இவ்வரிகளை எழுதியிருக்கமாட்டார். தமிழ்நாட்டில் இஸ்லாமை கறைத்துகுடித்த ஜாம்பவான்க‌ள், இமாம்க‌ள், முஸ்லிம் அறிஞர்க‌ள் இதற்கு இன்றுவரை பதில் கொடுக்காமல், இருந்ததற்கு காரணம், "முஹம்மது தன் மார்க்கத்தை வாளால் பரப்பத்தான் கடிதங்கள் எழுதினார்" என்பதை அவர்கள் புரிந்துக்கொண்டு இருப்பதினால் தான்.

முஹம்மது பாஸிம் இஸ்லாமிய சரித்திரத்தை அறிந்துக்கொள்ளவேண்டும், இஸ்லாம் பற்றிய விமர்சனங்களை நிதானமாக படித்து புரிந்துக்கொள்ள முயலவேண்டும், இப்படி செய்வதை விட்டுவிட்டு, அரைகுறையாக புரிந்துக்கொண்டு 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று எழுதியிருப்பது, அவரது இஸ்லாமிய அறியாமையை வெளிப்படுத்துகிறது. 

சரி, வாருங்கள்  ‘அறிவாளியாகிய முஹமம்து பாஸிம்' அவர்களுக்கு சிறிது இஸ்லாமிய‌ அறிவை புகட்டுவோம்.

2) தமிழிலும் ஆங்கிலத்திலும் முஹம்மதுவின் கடிதங்களை மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்கள் முஸ்லிம்களே!

சகோதரர் முஹம்மது பாஸிம் அவர்கள், நான் மேற்கோள் காட்டிய தளங்களை சிறிது அலசிப்பார்த்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.  தமிழில் கடிதங்களை வெளியிட்டவர் கூட இஸ்லாமியரே, அவர் சகோதர அபூ முஹை ஆவார். ரஹீக் என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய சரித்திர புத்தகத்திலிருந்து இக்கடிதங்களை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்கள் கூட இஸ்லாமியர்களே! என்பது தான் வேதனைப்படவேண்டிய விஷயம்.

முஹம்மது அமைதிப்புறாவாக இருந்திருந்தால், அதனை மாற்றி, அவரை ஒரு சர்வாதிகாரியாகவும், தீய ஆட்சியாளராகவும் காட்டுவதற்கு இந்த முஸ்லிம்களுக்கு  எவ்வளவு தைரியம்? முஹம்மது பாஸிம் அவர்கள் இக்கேள்வியை முஸ்லிம்களிடம் கேட்கவேண்டும்.

“if you embrace Islam, you will find safety” என்று மொழியாக்கம் செய்வதற்கு எவ்வளவு தைரியம் இவர்களுக்கு? "இஸ்லாமை ஏற்றுக்கொள் அப்போது பாதுகாப்பாக இருப்பாய்", இஸ்லாமை ஏற்கவில்லையென்றால், என் இராணுவத்தால் அழிந்தாய் என்று பொருள்படும்படி எப்படி இவர்கள் மொழியாக்கம் செய்யலாம்? 

தமிழில் "நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று உள்ளது, இதன் முழு அர்த்தம் என்னவென்று சொல்லமுடியுமா?  நான் இஸ்லாமை ஏற்கவில்லை என்று அவ்வரசர்கள் சொன்னால்? முஹம்மது என்ன செய்வார்?

யமாமா நாட்டு அரசருக்கு முஹம்மது எழுதிய கடிதத்தை (5)  பாருங்கள்: 

"குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்".

சிரியா நாட்டுக்கு எழுதிய கடித வரிகள் (6):

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

சகோதரர் முஹம்மது பாஸிம் அவர்களே! மேற்கண்ட கடிதத்தின் பொருள் அரபியில் ஒரு மாதிரியும், தமிழிலும் ஆங்கிலத்திலும் வேறு மாதிரியாக உள்ளது என்று உங்களால் சொல்லமுடியுமா? இதில் உள்ள வேடிக்கையைப் பாருங்கள். முஹம்மது ஒரு நாட்டுக்கு கடிதம் எழுதுவாராம்! அவர் இஸ்லாமை ஏற்றால், அவரது நாட்டை அவருக்கே கொடுப்பாராம்(எவன் சொத்தை எவன் கொடுப்பது?)? இஸ்லாமை ஏற்கவில்லையென்றால், "முஹம்மதுவின் இராணுவம் அந்த அரசரின் நாட்டை எடுத்துக்கொள்ளுமாம்! என்ன அடாவடித்தனம் இது!". 

சகோதரர் முஹம்மது பாஸிமே, உங்கள் அறிவுக்குள் இஸ்லாம் ஏறுகின்றதா? தமிழிலும் ஆங்கிலத்திலும் அரபியிலிருந்து மொழியாக்கம் செய்த முஸ்லிம்களுக்கு 'அரபி மொழி ஞானமில்லையா'? என்ற சந்தேகம் உங்களுக்கு வருகின்றதா?

இன்னும் நீங்கள் "முஹம்மது இப்படி கடிதங்கள் எழுதியிருக்கமாட்டார் என்று நம்பினால், உங்கள் இமாம்களிடம் சென்று, அறிஞர்களிடம் சென்று, இது உண்மைதானா? என்று கேட்டுப்பாருங்கள்".

இந்த கீழ்கண்ட வரிகளாவது உங்களுக்கு புரிகின்றதா? முஹம்மது பாஸிம் அவர்களே!

ஓமன் நாட்டு அரசருக்கு (7) முஹம்மது எழுதிய கடிதம்:

நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

இன்றைய தேதியன்று (27 பிப்ரவரி 2022), ரஷ்ஷியா உக்ரைன் மீது தொடுத்திருக்கின்ற போர் மாதிரி தெரிகின்றதா மேற்கண்ட கடிதம்? ரஷ்ஷியாவின் அதிபர் போன்று முஹம்மது செயல்பட்டுள்ளார் என்று தெரிகின்றதா?

3) ரஹீக் புத்தகம் எழுதி, முதல் பரிசு வென்ற ஆசிரியர், அறிவு கெட்டவர்:

எதை எழுதுவதற்கு முன்பும் ஒரு சிறிய ஆய்வு செய்யுங்கள், நன்றாக படியுங்கள், புரிந்துக்கொள்ளுங்கள், அதன் பிறகு எழுதுங்கள் என்று நான் ஆரம்பத்திலிருந்து முஸ்லிம்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஆனால், பிடிவாதமாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள், இப்படிப்பட்டவர்களில் "முஹம்மது பாஸிமும்" ஒருவர். 

ரஹீக் என்ற சிறந்த முஹம்மதுவின் சரித்திர புத்தகத்தை எழுதி, முதல் பரிசை தட்டிச் சென்ற இதன் ஆசிரியர் ஒரு "அறிவு கெட்டவன்" என்று சொல்கிறார் முஹம்மது பாஸிம்.  இப்புத்தகத்தை எழுதிய ஸபிய்யுர் ரஹ்மான் அவர்களுக்கு, அரபியிலிருந்து உருதுவில் மொழியாக்கம் செய்யத்தெரியவில்லை என்றுச் சொல்வது, சரியான கூற்றாக இருக்காது. உருதுவிலிருந்து தமிழில் இப்புத்தகத்தை மொழியாக்கம் செய்தவருக்கும் இஸ்லாமிய அறிவு இல்லை என்று சொல்கிறார் முஹம்மது பாஸிம்.

இனி முஹம்மது பாஸிமும், ரஹீக் புத்தகத்தை ஆதரிக்கின்ற முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளட்டும்! யாருக்கு அரபி அறிவு இல்லை என்று இவர்களே முடிவு செய்யட்டும்.

இந்த புத்தகத்தைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு சிறு குறிப்பை இங்கு தருகிறேன்.

ரஹீக் புத்தகம் (ரஹீக், ஸஃபிய்யுர் ரஹ்மான் (மொழிபெயர்ப்பு: ஏ. ஓமர் ஷெரீஃப், தாருல் ஹுதா, சென்னை 1 வெளியீடு.)

இப்புத்தகத்தின் சிறப்பு என்ன? 

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு ஹதீஸ்களில் முழுவதுமாக இல்லை. குர்-ஆனில் முஹம்மதுவின் வரலாறு 1% கூட இல்லை என்றுச் சொல்லலாம். ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு கோர்வையாக எழுதினார்கள், அதில் முக்கியமானவர் இப்னு இஷாக் என்பவர் ஆவார். இவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் இப்போது நம்மிடம் இல்லை, ஆனால், இவரைத் தொடர்ந்து இப்னு இஷாம், மற்றும் தபரி போன்றவர்கள், இவருடைய புத்தகத்திலிருந்து முழுவதுமாக மேற்கோள் காட்டியுள்ளார்கள். அதாவது, அழிந்துவிட்ட இப்னு இஷாக்கின் சரித்திரம் முழுவதும் இவ்விருவரின் புத்தகங்களில் கிடைத்துவிடும். தமிழ் முஸ்லிம்களின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், இந்த சரித்திரங்கள் அனைத்தும் இதுவரை தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதாகும் [ஆங்கிலத்தில் உண்டு]. இப்னு இஷாக்கின் “ஸீரத் ரஸூலல்லாஹ்” புத்தகத்தை தமிழில் மொழிப்பெயர்க்கலாம் என்று கிறிஸ்தவ நண்பர்கள் 2010ம் ஆண்டுக்கு முன்பு பேசிக்கொண்டார்கள், அதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், எங்களுக்கு அடித்தது ஜாக்பாட். 

”அர்ரஹீக்குல்  மக்தூம்” அல்லது ரஹீக் என்ற பெயரில் ஒரு புத்தகம் தமிழில் முஸ்லிம்களால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு முஹம்மதுவின் சரித்திரம் ஒரு கோர்வையாக எழுதப்பட்டுள்ளது. 

இப்புத்தகத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. ”உலக இஸ்லாமிய லீக்” என்ற இயக்கம் மக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.  1976ம் ஆண்டு, முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய சரித்திரத்தின் அடிப்படையில் சிறப்பாக எழுதுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் (மொத்தம் 1,50,000 சௌதி ரியால்கள்) என்று அறிவித்தது. உலகமனைத்திலும் இருந்து 1182 ஆய்வுகள் பல மொழிகளில் பல இஸ்லாமிய அறிஞர்கள் எழுதி அனுப்பினார்கள். அதில் கடைசியாக 183 ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முடிவாக 5 ஆய்வுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசை தட்டிச்சென்றது இந்த “ரஹீக்” என்ற புத்தகம். இதனை தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்கள். முஹம்மதுவைப் பற்றிய விவரங்களை கோர்வையாக படிக்க இந்த புத்தகம் பேருதவியாக உள்ளது. 

ஆக, பாகிஸ்தானும், சௌதியும் (உலக முஸ்லிம் தலைவர்கள்) ஒன்றாக சேர்ந்து ஆய்வு செய்து, இது தான் உண்மையான ஆதார பூர்வமான முஹம்மதுவின் சரித்திரம் என்று பாராட்டி, பரிசுகள் வழங்கிய புத்தகம் தான் ரஹீக் (அர்ரஹீக்குல் மக்தூம் என்றால், முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம் என்று பொருள்). இதன் இன்னொரு சிறப்பு, இப்புத்தகத்தின் ஆசிரியர் ஒரு இந்தியர் (உத்திர பிரதேசம்) என்பதாகும்.

சகோதரர் முஹம்மது பாஸின் அவர்கள், இந்த முந்தைய என்னுடைய கட்டுரைக்குத் தான், "அறிவு கெட்டவனே" என்றுச் சொல்லி பின்னூட்டமிட்டிருந்தார். அதனை இங்கு தருகிறேன்.

முந்தைய கட்டுரையிலிருந்து கடிதங்கள்:

Link: https://muhammad.net/index.php/biographies/20-letters-of-the-prophet-saaw

 

வரிசை எண்எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டதுதமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து)இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1.அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......

Source
…. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source: A Deputation to Abyssinia (Ethiopia)
2.எகிப்து மன்னருக்குநான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். 

Source
… I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam. 

Source: Letter to the Vicegerent of Egypt, called Muqawqas
3.பாரசீக மன்னருக்குநீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். 

Source
…… Accept Islam as your religion so that you may live in security,…. 

Source: A Letter to Chosroes, Emperor of Persia
4.ரோம் நாட்டு மன்னருக்கு….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்…. 

Source
……I invite you to embrace Islam so that you may live in security

Source: The Envoy to Caesar, King of Rome
5.யமாமா நாட்டு அரசருக்கு….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன். 

Source
… Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours.” 

Source: A Letter to Haudha bin ‘Ali, Governor of Yamama
6.சிரியா நாட்டு மன்னருக்குஅல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.'

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source
From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours.” 

Shuja‘ bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: “Who dares to disposs me of my country, I’ll fight him (the Prophet),” and arrogantly rejected the Prophet’s invitation to the fold of Islam. 

Source:A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus
7.ஓமன் நாட்டு அரசருக்குநீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.' 

Source
If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you’ve got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship.” 

Source: Letter to the King of ‘Oman, Jaifer, and his Brother ‘Abd Al-Jalandi

 

தேதி: 27-Feb-2022


அபூ முஹை அவர்களுக்கு பதில்கள்

உமர் பக்கம்