அபூமுஹை & மத்தேயு 10:14 - அடாவடி செய்யாமல் மார்க்கம் பரப்புங்கள்

முன்னுரை: "ஓமன் நாட்டுக்கு முகமது அனுப்பிய கடிதம்" பற்றிய கட்டுரையின் கடைசியில் நான் சில பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டியிருந்தேன். அதற்கு அபூமுஹை அவர்கள் சில விளக்கம் கொடுத்து இருந்தார்கள் (http://abumuhai.blogspot.com/2008/07/blog-post_16.html) . “இக்கட்டுரை விமர்சனம் இல்லை, நல்லவர்கள் சமுதாயத்தில் நடக்கும் தீமையையும் தடுக்கலாம் அல்லவா” என்று மென்மையாக கேள்வி எழுப்பி இருந்தார்கள். இஸ்லாம் இப்படித்தான் சமுதாயத்தில் நடக்கும் தீமையை தடுத்துவிடுங்கள் என்றுச் சொல்கிறது என்று சொன்னார்கள், நல்ல விஷயம் தான். ஆனால், நான் மேற்கோள் காட்டியிருந்த வசனங்களை அவர் தவறாக புரிந்துக்கொண்டு, விளக்கம் அளித்துள்ளார். எனவே, இந்த என் பதில், மேற்கண்ட பைபிள் வசனங்களைப் பற்றிய ஒரு சிறு விளக்கமாகும். 

1) நான் மேற்கோள் காட்டியிருந்த வசனங்கள் இவைகள்:

கீழ் கண்ட வசங்களை சொன்னது யார் என்றுத் தெரியுமா உங்களுக்கு? 

மத்தேயு 10:14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். 

லூக்கா 9:5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார். 

அப்போஸ்தல நடபடிகள் 13:51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.

2) நான் ஏன் இந்த வசனங்களை முன்வைத்தேன், மற்றும் இவ்வசனங்களுக்கும் இஸ்லாமுக்கும் என்ன சம்மந்தம்? 

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர்களின் நபி இஸ்லாமை வாளால் மட்டுமே பரப்ப விரும்பினார், பரப்பினாரும் கூட. இதற்கு அவர் எழுதிய கடிதங்களே சாட்சிகள்.

படிக்க: 

ஓமன் நாட்டுக்கு மன்னருக்கு முகமது எழுதிய கடிதம் 

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم) : அபூமுஹையும் மறைத்த விவரங்களும்

மேற்கண்ட பைபிள் வசனங்கள் நான் மேற்கோள் காட்டியதற்கு முக்கிய காரணம், இயேசு தன் செய்தியை மக்களிடம் எவ்விதம் கொண்டுச் சென்றார், அதே போல முகமது தன் செய்தியை எவ்விதம் கொண்டுச் சென்றார் என்பதின் வித்தியாசத்தை காட்டுவதற்காக ஆகும். 

முகமதுவின் வழி: தன் செய்தியை ஏற்று தான் ஒரு நபி என்பதை நம்பவில்லையானால், அவர்களின் நாட்டில் இரத்த ஆறு ஓடும், அதாவது போர் புரிந்து நாட்டை பிடித்துவிடுவேன் என்று பயப்படவைத்து பரப்பினார். 

இயேசுவின் வழி: ஆனால், இயேசு தன் சீடர்களை பல ஊர்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு தன் நற்செய்தியைச் சொல்லி, மக்களின் வியாதிகளைச் சுகப்படுத்தி, சீடராக்குங்கள், அப்படி உங்களை ஏற்றுக் கொள்ளவில்லையானால், அவர்களை தாக்காமல், அவர்கள் ஊரை விட்டு வந்து விடுங்கள் என்றுச் சொல்லி அமைதியான முறையில் தன் செய்தியை பரப்பினார். 

இஸ்லாமியர்களே, இந்த இரண்டு வழிமுறைகளில் எது சரியான அமைதியான முறையில் மார்க்கத்தை பரப்புவது என்று நீங்கள் நம்புகிறீர்கள்? வன்முறை மூலமாக இஸ்லாம் பரப்பப்பட்டு இருக்கும் போது கிறிஸ்தவர்களோ அல்லது மற்றவர்களோ எப்படி இஸ்லாம் ஒரு அமைதியான மதம் என்று நம்பி அதனை அங்கீகரிக்கமுடியும்? 

ஆக, நான் மேற்கோள் காட்டிய வசனங்கள், ஒரு மார்க்கத்தை பரப்ப அல்லது இயேசுவின் நற்செய்தியை மக்களுக்குச் சொல்லும் போது, அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லையானால், அந்த இடத்தை விட்டு வந்துவிடுங்கள் என்று இயேசு சொன்னதை தெளிவுப்படுத்துவதற்கு ஆகும்.

அதாவது ஒருவர் தன் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லும் போது, முக்கியமாக அதுவும் இறைவன்,பக்தி போன்ற விவரங்கள் சொல்லும் போது, கத்தியைக் காட்டி, துப்பாக்கியைக் காட்டி, பயப்படவைத்து சொல்லமுடியுமா? 

அப்படிச் சொன்னால் அது நியாயமான முறையாகுமா?

அப்படி மக்கள் பயந்து அந்த இறைவனை வணங்கினால், இதனால், அந்த இறைவனுக்கு என்ன மகிமை சொல்லுங்கள்?

எனவே தான், “பக்தி, நம்பிக்கை” என்று வந்துவிட்டால், அது மனிதனின் மனதில் ஏற்படவேண்டிய மாற்றம் மற்றும் விருப்பத்தோடு செய்யப்படவேண்டும், இஸ்லாமைப் போல, பயப்படவைத்து செய்யக்கூடாது. முஸ்லீம்களே! பக்தி, நம்பிக்கை என்பதை கட்டாயத்தின் பெயரில் ஒரு மனிதனின் மனதில் பதிக்க முடியும் என்று நம்புகிறீர்களா? அப்படி சிலர் பயந்து நம்பிக்கைக் கொண்டாலும், அந்த குறிப்பிட்ட இறைவனுக்கு அதனால் மகிமை சிறப்பு உண்டாகுமா? மனிதனை படைத்த இறைவனுக்கு அவன் மனதில் ஓடும் சிந்தனைகளை அறிய முடியாது என்று நினைக்கிறீர்களா?

இந்த வித்தியாசத்தை காட்டவே, நான் அந்த வசனங்களை மேற்கோள் காட்டினேன். ஆனால், அபூமுஹை அவர்கள் அந்த வசனங்களை எப்படி பொருள் கொண்டுள்ளார் என்பதை இனி கவனிப்போம்.

3) மத்தேயு 10:14, லூக்கா 9:5 போன்ற வசனங்கள் இறைப்பணிக்காக செல்பவர்களுக்கான கட்டளைகள் ஆகும். அரசாங்கத்திற்கு தீமையை தடுக்க கொடுக்கப்பட்ட‌ கட்டளைகள் அல்ல‌ 

இவ்வசனங்களின் பின்னனியை கவனித்தால், இயேசு தன் சீடர்களை நற்செய்தியைச் சொல்ல அனுப்பும்போது சொன்ன அறிவுரைகள். ஆனால், அபூமுஹை அவர்கள் இந்த வசனங்களின் பின்னனியை தெரிந்துக்கொள்ளாமல், “இவ்வசனங்கள் தீமை நடக்கும் போது அதை தடுக்கக் கூடாது” என்று கிறிஸ்தவர்களுக்கு இயேசு சொன்னதாக புரிந்துக் கொண்டுள்ளார். 

அபூமுஹை அவர்கள் எழுதியவைகளில் சில விவரங்கள்:

நன்மைகளைச் செய்வதோடு தீமைகளையும் களைந்து, களைய முன் வர வேண்டும். தான் மட்டும் நல்லவனாக வாழ்ந்தால் போதும் மற்றவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? என்றிருப்பவர் தீமையைத் தடுத்தவராகமாட்டார். 

Source: abumuhai.blogspot.com/2008/07/blog-post_16.html

இயேசு சொன்னதற்கும், நம் அபூமுஹை அவர்கள் சொன்னதற்கும் ஏதாவது ஒற்றுமையுண்டா பாருங்கள். அதாவது, இயேசு சொன்னது, தனி மனிதனுக்கு தன் அனுதின‌ வாழ்வில் இப்படி செய் என்றுச் சொல்லவில்லை, அல்லது ஒரு அரசாங்கம் தீமையைத் தடுக்கக்கூடாது என்று கூட சொல்லவில்லை, அதற்கு பதிலாக, மார்க்கத்தை பரப்பும் போது, “அடாவடி செய்யாமல், பயமுறுத்தாமல் செய்யுங்கள்” என்று தான் சொல்லியுள்ளார். 

அப்படியானால், ஒரு சராசரி கிறிஸ்தவன் தன் கண்களுக்கு முன்பாக‌ தீமைகள் நடக்கும்போது என்ன செய்யவேண்டும், ஒதுங்கி விடவேண்டுமா?

4. கிறிஸ்தவர்கள் தீமையை ஏன் தடுக்கக்கூடாது, நன்மை செய்யக்கூடாது? 

இதுவரை நாம் பார்த்தவிவரங்களைக் கொண்டு, இயேசு சொன்ன மேற்கண்ட வசனங்கள், நற்செய்தி சொல்லும் நபர்களுக்கு அறிவுரைகளாகும் என்பதை அறிந்தோம். 

தீமையை தடுக்கும் படி பைபிள் சொல்கிறது. ஆனால், இன்று இஸ்லாமியர்கள் தீமையை தடுக்கிறோம் என்றுச் சொல்லும் விதத்தில் அல்ல.

ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும். யாக்கோபு 4:17 

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதிமொழிகள் 3:27

அதாவது ஒரு கிறிஸ்தவனுக்கு நன்மை செய்ய திராணி இருந்தும், அதை அவன் செய்யவில்லையானால், அது அவனுக்கு பாவமாக கருதப்படும். உதாரணமாக, ஒரு ஊரில் ஒரு கிறிஸ்தவன் இருந்து, அவனுக்கு பணம் பதவி என்று நல்ல அதிகாரங்கள் இருந்தும், அந்த ஊரில் ஒரு ஏழைக்கு வேறு ஒருவன் தீங்கு செய்யும்போது, இவன் சென்று அவனுக்கு நன்மை செய்யவேண்டும்,அதாவது, அந்த ஏழையை காப்பாற்றவேண்டும். இதைத் தான் "நன்மை செய்ய அறிந்திருந்தும், திராணியிருந்தும்" என்று வாசிக்கிறோம்.

ஓய்வு நாளில் நன்மை செய்யக்கூடாது, சுகம் தரக்கூடாது என்றுச் சொல்லி, கேள்வி கேட்ட யூதர்களிடம் இயேசு கேட்ட கேள்வி "உங்களுக்கு சொந்தமான ஒரு கழுதை ஓய்வு நாளில் குழியில் விழுந்தால், அதை தூக்கிவிடமாட்டீர்களா?" அது போல, இத்தனை ஆண்டுகள் துன்பப்பட்ட மக்களுக்கு ஓய்வு நாளில் சுகப்படுத்துவது தவறில்லை என்றுச் சொன்னார், சுகப்படுத்தினாரும் கூட. ஓய்வு நாளில் நன்மை செய்ததினால் யூதர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டார். அவரை பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கு நன்மைச் செய்ய நன்றாகவே தெரியும். எனவே, முகமதுவின் வன்முறை மதப்பிரச்சார எடுத்துக்காட்டை இப்படி நன்மைக்கு சம்மந்தப்படுத்தி நியாயப்படுத்த முயற்சி எடுக்கவேண்டாம்.

ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணம்படிக்குப் போயிருந்தார். அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார். (லூக்கா 14:1-5 மற்றும் இந்த வசனங்களையும் பார்க்கவும் லூக்கா 13:10-17 )

5. அபூமுஹை அவர்களே, வசனத்தின் உண்மை பொருளை மாற்றாதீர்கள் 

இயேசு கூறிய வசனங்கள் "தன் நற்செய்தியை உலகத்திற்கு கொண்டுச் செல்பவர்கள், வன்முறையை பின்பற்றாமல், கட்டாயப்படுத்தாமல் சொல்லவேண்டும்" என்பதை விளக்குகின்றன. ஆனால், அதை மாற்றி "ஏன் தீமையை தடுக்கக்கூடாது" என்ற தோரணையில் நீங்கள் பொருள் கூறுகிறீர்கள். தன் ஊழியர்களுக்கு அறிவுரை இயேசு கூறியதை மாற்றி "ஒரு அரசாங்கம்" அப்படிச் செய்யக்கூடாது, இஸ்லாமிய அரசாங்கம் அப்படிச் செய்யாது என்றுச் சொல்கிறீர்கள். 

இயேசு சொன்ன வசனத்தில் அரசாங்கம் எங்கே வந்தது? நாட்டின் சட்டத்துறை எங்கு வந்தது

இயேசுவின் சீடர்கள் ஒன்றும் முகமதுவின் தோழர்களைப்போல, முகமது எப்படி வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தி பரப்பினாரோ அப்படி அவர்கள் பரப்பவில்லை. தங்கள் உயிரை கொடுத்து நற்செய்தி ஊழியம் செய்தனர். உங்கள் முகமதுவைப்போல மற்றவர்களின் உயிரை எடுப்பேன் என்றுச் சொல்லி பரப்பவில்லை. 

எனவே, தன் ஊழியக்காரர்களுக்கு இயேசு கொடுத்த கட்டளைகளை, முகமது தன் இராணுவ தோழர்களுக்கு கற்பித்த மார்க்க பரப்பும் விதத்துடன் சம்மந்தப்படுத்தாதீர்கள், அபூமுஹை அவர்களே. 

தீமையை தடுப்பது பற்றி கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் சொல்லித் தான் தெரிந்தாக‌வேண்டும் என்ற நிலையில் கிறிஸ்தவர்கள் இல்லை. அதே நேரத்தில் நன்மையை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப் பற்றியும், முகமதுவைக் கண்டுத் தான் நாங்கள் கற்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் நாங்கள் இல்லை. 

சமுதாயத்தில் தீமையை தடுக்கிறோம் என்றுச் சொல்லி, இஸ்லாமிய நாடுகளில் உங்கள் இமாம்கள் வாலிபர்களின் மனதை குழப்பி, அரசாங்கம், சட்டம் செய்யும் வேலையை, தனி மனிதன் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சமுதாயத்திற்கே தீமையை புரியும் உங்கள் இமாம்களைப்போல அல்லாமல், கிறிஸ்தவர்களுக்கு எப்போது நன்மையைச் செய்யவேண்டும், தீமையை எப்படி தட்டிக் கேட்கவேண்டும் என்றுத் தெரியும்.

பாகிஸ்தானில் தீவிரவாத குழு ஒன்று விபச்சாரம் செய்கிறவர்கள் என்றுச் சொல்லி, பெண்களை கொன்று போட்டு உள்ளார்கள். இது தான் தீமையை தடுக்கும் முறையா? சட்டம் செய்யும் வேலையை தன் கையில் ஏந்திக்கொண்டு கொலை செய்வது தான் தீமையை தடுக்கும் முறையா? சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது சரியானது என்று நான் சொல்லவில்லை, ஆனால், அப்படிப்பட்ட தீய செயல்களை முறியடிக்க தனி மனிதன் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்றுச் சொல்லவருகிறேன்.

Pakistan 'prostitutes' beheaded : Suspected Islamic militants in north-western Pakistan have beheaded two women they accused of being prostitutes, police say. 

Soruce: news.bbc.co.uk/2/hi/south_asia/6983692.stm

நாட்டின் குடிமக்கள் சட்டத்திற்கு உதவி செய்து சட்டத்துறையோடு ஒத்துழைத்து, தீமையை தடுக்க முயற்சி எடுக்கவேண்டுமே ஒழிய, சட்டத்தை மதிக்காமல் தானே இராஜா, தான் சொன்னது தான் சட்டம் என்றுச் சொல்லி செய்யும் செயல்கள் அனைத்தும் "தீமையை தடுக்கும் சரியான முறைகள்" அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

முடிவாக, இயேசு தன் சீடர்களுக்கு அமைதியான முறையில் நற்செய்தியை சொல்லச்சொன்ன வசனத்தை பொருள் மாற்றி திசை திருப்பி, நல்லவர்கள் தீமையை தடுக்கட்டும் என்ற முறையில், உங்கள் முகமதுவின் வன்முறை வழிகளோடு ஒப்பிட்டு, ஒப்பிட்டதோடு மட்டுமல்ல, அதுவே சரியானது என்ற தோரணையில் எழுதுவதை இனி விட்டுவிடுங்கள்.

அபூமுஹை அவர்கள் எழுதியது:

"சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் படிந்த தூசியைத் தட்டிவிட்டு வெளியேறுங்கள்" இந்த அறவுரை தனி மனிதனுக்கு வேண்டுமானால் பொருந்தாலாம். ஓர் அரசுக்குப் பொருந்தாது. அநீதி எங்கு நடந்தாலும் வலிமைப் பெற்ற அரசு அதைத் தட்டிக்கேட்க வேண்டும். அதுவும் தீர்க்கத்தரிசிகள் தலைமையில் அமைந்த அரசு அநீதியை எதிர்த்துப் போரிட தயக்கம் காட்டக்கூடாது.

இயேசு இந்த அறிவுரையை அரசாங்கத்திற்கு சொன்னார் என்று உங்களிடம் யாராவது சொன்னார்களா? இஸ்லாம் அரசுக்கு எது தான் பொருந்தும் சொல்லுங்கள்? தன் மக்கள் மற்ற மார்க்கங்களை பின்பற்றினால் இஸ்லாமிய அரசுக்கு பொருக்காது? கொன்றுவிடும். தான் மட்டும் தான் வாழனும், தன் மதம் மட்டும் தான் வாழனும் என்றுச் சொல்லும் இஸ்லாம் மதத்திற்கு எது பொருந்தும் சொல்லுங்கள்? முகமது தன் நாட்டை ஆளுகிறார் என்றால் ஆண்டுக்கொண்டு போகவேண்டியது தானே, அதை விட்டுவிட்டு, பக்கத்து நாட்டுக்கு கடிதம் எழுதி, இஸ்லாமுக்கு மாறிவிடு, இல்லையானால் போர் மூளும் என்றுச் சொல்வது தான் அல்லாவின் நபியின் தலையில் இருக்கும் அரசுக்கு அழகோ! இது இஸ்லாமிய அரசுக்கு பொருந்துமோ? 

பக்கத்து நாட்டுக்காரன் தன் நாட்டை ஆண்டுக்கொண்டு இருந்தால், நீ தப்பு செய்தாய் என்று தட்டிக்கேட்பாரா உங்கள் நபி? அதே வேலையை அந்த பக்கத்து நாட்டுக்காரன் இவருக்கு கடிதம் அனுப்பி கேட்டு இருந்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு? தன்னைத் தானே நபி என்றுச் சொல்லிக்கொள்வது, தானே நல்ல ஆட்சியாளர் என்றுச் சொல்லிக்கொள்வது, தன் மார்க்கமே சரியானது என்றுச் சொல்லிக்கொள்வது, அதோடு நிறுத்தாமல், மற்றவனையும் தன் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளும்படி கட்டளை போட்டு, பயப்படவைப்பது இது உங்கள் நபி செய்தார். அநீதி உங்கள் நாட்டில் நடந்தால் தட்டிக்கேட்பது சரியானது தான், பக்கத்து நாட்டில் தப்பே நடக்காமல், நீ மாறனும் என்றுச் சொன்னால் எப்படி நியாயமாக இருக்கும்?

அபூமுஹை அவர்கள் எழுதியது: 

சமுதாயத்தில் விளையும் தீமைகளை, ஒவ்வொரு தனி மனிதனும் தனது சக்திக்கு ஏற்றவாறு தடுத்திட வேண்டும். இது குறித்து நாளை அவன் விசாரிக்கப்படுவான்.

இதை நீங்கள் சொல்லித்தான் எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதில்லை, தன் சக்திக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தட்டிக்கேட்பார்கள். இதற்கு ஒரு மதத்தில் அதாவது இஸ்லாமிலோ, கிறிஸ்தவத்திலோ அல்லது இந்துத்துவத்திலோ ஒரு மனிதன் இருந்தால் தான் தட்டிக்கேட்கவேண்டும் என்பதில்லை, நாத்தீகன் கூட சமுதாயத்திற்கு நன்மைகள் செய்கிறான், தவறுகளை தட்டிக்கேட்கிறான்.

அபூமுஹை அவர்கள் எழுதியது: 

மார்க்கத்தை நிறைவேற்ற முடியாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற கருத்தில் இஸ்லாமும் அறவுரை வழங்கியுள்ளது. நபியவர்களும் முஸ்லிம்களும் மக்காவை விட்டு வெளியேறிய சம்பவம் இதற்கு முன்னுதாரணமாக உள்ளது. 

"சொல்வதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் படிந்த தூசியைத் தட்டிவிட்டு வெளியேறுங்கள்" இந்த அறவுரை தனி மனிதனுக்கு வேண்டுமானால் பொருந்தாலாம். ஓர் அரசுக்குப் பொருந்தாது. அநீதி எங்கு நடந்தாலும் வலிமைப் பெற்ற அரசு அதைத் தட்டிக்கேட்க வேண்டும். அதுவும் தீர்க்கத்தரிசிகள் தலைமையில் அமைந்த அரசு அநீதியை எதிர்த்துப் போரிட தயக்கம் காட்டக்கூடாது.

ஆமாம், இஸ்லாமியர்கள் குறைவாக இருக்கும் பொது, தனக்கும் தன் சேனைக்கும் அதிகமாக வலிமை இல்லாத போது, மக்கா மக்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தானே மதினாவிற்குப் போனார்கள். அதே குழு சக்தியுள்ளதாக மாறினவுடன், மற்ற அரசர்களுக்கு வலிய சண்டைக்கு அழைப்பு விடுத்தது போல, கடிதம் எழுதி, இஸ்லாமுக்கு மாறு இல்லையானால் சாகு என்ற தோரணையில் இஸ்லாமை பரப்பினாரே இந்த நியாயத்தை எங்கு சென்றுச் சொல்வது. 

மக்கா மக்கள் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்ற முடியாமல் செய்ததால், மதினாவிற்கு வந்தவர்கள். மற்ற நாட்டுக்காரர்கள் தங்கள் மார்க்கத்தை பின்பற்ற ஏன் அவர்களை விடவில்லை. கடிதம் எழுதியது தவறு என்றுச் சொல்லவில்லை, ஆனால், வன்முறையை அதற்கு ஆதாரமாகக் கொண்டது தான் தவறானது என்றுச் சொல்கிறேன். நான் ஒரு நபி, இது தான் மார்க்கம், இது தான் நல்லவழி, உங்களுக்கு விருப்பமானால் பின்பற்றுங்கள் என்று கடிதம் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இப்படி எழுதினாரா உங்கள் நபி?

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றவர்களின் வாழ்க்கைக்கு ரோமானியர்கள் நெருக்கடி கொடுத்து வந்தனர். தங்களுக்கு கீழுள்ளவர்கள் யாராவது இஸ்லாத்தை ஏற்றால் அவரைக் கொன்றனர். ரோமர்களின் அடக்கு முறைகளையும், அத்து மீறல்களையும் கண்டித்து, அவர்களுடன் போர் தொடுக்குமுன் விடுக்கப்படும் இஸ்லாத்தின் அழைப்பும் எச்சரிக்கையும் முறையாக மன்னர்களுக்குக் கடிதம் வழியாக எழுதப்பட்டது. எழுதியவர்: ஆன்மீகத் தலைவர், ஆட்சியின் தலைவரான - இஸ்லாமியப் பேரரசின் மாமன்னர் நபி (ஸல்) அவர்கள். 

எல்லா மன்னருக்கும் எழுதப்பட்ட அழைப்பும் எச்சரிக்கையும் ஓமன் நாட்டு அரசருக்கும் எழுதப்பட்டது. அது குறித்து பிற மத நண்பர்களின் விமர்சனம் அடுத்த பகுதியில், நன்றி! 

அன்புடன்,

அபூ முஹை

நீங்கள் எழுதிய வரிகளை ஒரு முஸ்லீம் படித்தால் அப்படியே புரிப்பு அடைவார். அதே வரிகளில் இஸ்லாம் உள்ள இடத்தில் கிறிஸ்தவம் என்று மாற்றி படித்துப்பாருங்கள், இன்று இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் பாடுகள் உங்களுக்குப் புரியும்.

பைபிளையும் இயேசுவையும் நம்பிக்கை கொண்டு கிறிஸ்தவத்தை ஏற்றவர்களின் வாழ்க்கைக்கு ஈரான், ஈராக், இதர இஸ்லாமிய நாடுகள் நெருக்கடி கொடுத்து வந்தனர். தங்களுக்கு கீழுள்ளவர்கள் யாராவது கிறிஸ்தவத்தை ஏற்றால் அவரைக் கொன்றனர். ஷரியா சட்டம் நடைமுறையில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் அடக்கு முறைகளையும், அத்து மீறல்களையும் கண்டித்து, அவர்களுடன் போர் தொடுக்குமுன் விடுக்கப்படும் கிறிஸ்தவத்தின் அழைப்பும் எச்சரிக்கையும் முறையாக இஸ்லாமிய நாட்டு அரசர்களுக்கு கடிதம் வழியாக எழுதப்பட்டது.

மேலே உள்ள வரிகளில் உள்ள கருத்து நீங்கள் இஸ்லாமை நியாயப்டுத்த கொடுத்த கருத்து தான். இன்று உலகத்தில் ஒரு கிறிஸ்த நாடு உருவாகி, அந்த நாடு அதிக சக்தியுள்ளதாக மாறி, உங்கள் முகமதுவின் வழியை பின் பற்றி அவரைப்போல கிறிஸ்தவர்களை கொல்லும் இஸ்லாமிய நாடுகளுக்கு கடிதம் எழுதினால், அதை நீங்கள் அங்கீகரிப்பீர்களா? சிந்திக்கவேண்டும் முஸ்லீம்களே சிந்திக்கவேண்டும். உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? 

சரி போகட்டும் உங்கள் வழிக்கே வருகிறேன், ரோமானியர்கள் முஸ்லீம்களை கொடுமை படுத்தினார்கள் என்றுச் சொல்கிறீர்களே, அதனால் தான் அவர் கடிதம் எழுதி எச்சரித்தார் என்றுச் சொல்கிறீர்கள், அப்படியானால், மற்ற நாட்டு மன்னர்களுக்கு ஏன் கடிதம் எழுதி போருக்கு எச்சரித்தார்? மற்ற நாடுகளுக்கு அமைதியான முறையில் கடிதம் எழுதியிருக்கலாம் அல்லவா? இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் என்றுச் சொன்னால், ஏன் அவர் எல்லா நாடுகளுக்கும் ஒரே வகையான செய்தியை அதாவது, இஸ்லாமை ஏற்றுக்கொள் பாதுகாப்பாக இருப்பாய் மறுத்தால் போர் மூளும் என்று ஏன் எழுதினார்? 

கடைசியாக, உங்கள் குர்‍ஆன் வசனங்களுக்கு காலத்திற்கு ஏற்ப நீங்கள் பொருள் கூறுவது போல பைபிள் வசனங்களுக்கு பொருள் கூற உங்களுக்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால், குர்‍ஆன் வசனங்கள் போல நிகழ்ச்சிகளுக்கு தலையும் இல்லாமல், காலும் இல்லாமல் பைபிள் வசனங்கள் இல்லை, பைபிளில் வசனங்கள் சொல்லப்பட்ட சூழ்நிலை மற்றும் இதர விவரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். குர்‍ஆனை புரிந்துக்கொள்ள ஹதீஸ்களின் துணை தேவைப்படுவது போல, எங்களுக்கு எந்த ஹதீஸ்களும் தேவையில்லை. எனவே, கொஞ்சம் நிதானமாக சிந்தித்து, படித்துப்பார்த்து எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன். 

இயேசு தன் சீடர்களை ஊழியத்திற்கு அனுப்பும் போது கொடுத்த கட்டளையை, உங்கள் இஸ்லாமிய அரசாங்கத்தின் கொடுமைகளை நியாயப்படுத்த முயலாதீர்கள்.


அபூ முஹைக்கு கொடுத்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்