சவக்கடல் குகைகள் 1-3ல் கிடைத்த சுருள்கள்

முந்தைய கட்டுரைகள்: 

சவக்கடல் சுருள்கள் பதினோறு குகைகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. ஒவ்வொரு குகையிலும் என்னென்ன சுருள்கள் கிடைத்தன என்பதை இப்போது சுருக்கமாக காண்போம்.

குகை 1

கும்ரான் பகுதி மேய்ப்பர்களால் 1947ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது குகை இதுவாகும். இந்த குகையில் பெரிய மண் ஜாடிகளில் கிடைத்த சுருள்கள் நல்ல நிலையில் இருந்தன. இந்த குகையில் கிடைத்த சுருள்களில் மிகவும் முக்கியமானவைகள்:

  1. ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம் (Isaiah) – இரண்டு பிரதிகள் கிடைத்தன.
  2. போர் சுருள் (The War scroll) – ஒளியின் பிள்ளைகளுக்கும், இருளின் பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும் போர் பற்றிய விவரங்கள் பற்றியது.
  3. சமுதாய சட்டங்கள் (The Rule of the Community) – கும்ரானில் வாழ்ந்த யூத சமுதாயம் பின்பற்றும் சட்டங்கள் பற்றிய விவரங்கள்.

குகை 1ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):

எண் சுருள் பெயர் சுருள் விவரம்  பைபிளின் புத்தகமா? (ஆம் / இல்லை)
1 1Q1 Genesis (ஆதியாகமம்) ஆம்
2 1Q2 Exodus (யாத்திராகமம்) ஆம்
3 1Q3  Paleo-Leviticus (லேவியராகமம்)  ஆம் (பாலியோ ஹீப்ரு (Paleo-Hebrew Font) எழுத்துக்களில் எழுதப்பட்ட சுருள்)
4 1Q4 Deuteronomy (உபாகமம்) ஆம்
5 1Q5 Deuteronomy (உபாகமம்) ஆம்
6 1Q6 Judges (நியாயாதிபதிகள்) ஆம்
7 1Q7 Samuel (சாமுவேல்) ஆம்
8 1Q8 Isaiah (ஏசாயா) ஆம்
9 1Q9 Ezekial (எசேக்கியேல்) ஆம்
10 1Q10 Psalms (சங்கீதம்) ஆம்
11 1Q11 Psalms (சங்கீதம்) ஆம்
12 1Q12 Psalms (சங்கீதம்) ஆம்
13 1Q13 Phylactery (A small leather box containing Hebrew texts on vellum, worn by Jewish men at morning prayer as a reminder to keep the law.) ஒரு சிறிய பெட்டியில் தோராவின் வசனங்கள் எழுதி, அதனை யூத ஆண்கள் அணிந்துக்கொண்டு, ஜெபிப்பார்கள்.
14 1Q14 Pesher Micah (மீகா புத்தகத்தின் விளக்கவுரை) இது பைபிள் புத்தகத்தின் விளக்கவுரை.
15 1Q15 Pesher Zephaniah (செப்பனியா புத்தகத்தின் விளக்கவுரை) இது பைபிள் புத்தகத்தின் விளக்கவுரை
16 1Q16 Pesher Psalms (சங்கீதம் புத்தகத்தின் விளக்கவுரை) இது பைபிள் புத்தகத்தின் விளக்கவுரை
17 1Q17 Jubliees (ஜூபிலீஸ்) இல்லை
18 1Q18 Jubilees (ஜூபிலீஸ்) இல்லை
19 1Q19 Noah (நோவா) இல்லை
20 1Q20 Genesis Apocryphon (ஆதி இரகசிய எழுத்துக்கள்) இல்லை
21 1Q21 Levi (Aramaic) லேவி (அராமிக் மொழியில்) ஆம்
22 1Q22 Moses (மோசே) இல்லை
23 1Q23 Enoch (ஏனோக்கு) இல்லை
24 1Q24 Enoch (ஏனோக்கு) இல்லை
25 1Q25 Apocryphal Prophecy (இரகசிய தீர்க்கதரிசனம்) இல்லை
26 1Q26 Wisdom Apocryphon (ஞான இரகசிய எழுத்துக்கள்) இல்லை
27 1Q27 Mysteries (இரகசியங்கள்) இல்லை
28 1Q28 Community Rule (சமுதாய சட்டங்கள்) இல்லை
29 1Q28 Congregation Rule (மக்கள் கூடுகை சட்டங்கள்) இல்லை
30 1Q28 Rule of the Blessings (ஆசீர்வாதாத்தின் சட்டங்கள்) இல்லை
31 1Q29 Liturgy of 3 Tongues of Fire (பொது ஜெபங்களின் 3 நெருப்புத்தழல்கள்) இல்லை
32 1Q30 liturgical text (பொது ஜெபங்கள்) இல்லை
33 1Q31 liturgical text  (பொது ஜெபங்கள்) இல்லை
34 1Q32 New Jerusalem (புதிய ஜெருசலேம்) இல்லை
35 1Q33 War Scroll (போர் சுருள்) இல்லை
36 1Q34 liturgical prayers (பொது ஜெபங்கள்) இல்லை
37 1QH Hodayot – Thanksgiving Scroll (நன்றி செலுத்தும் பாடல்கள்) இல்லை
38 1Q35 Hodayot – Thanksgiving Scroll  (நன்றி செலுத்தும் பாடல்கள்) இல்லை
39 1Q36 hymns? (பாடல்கள்?) இல்லை
40 1Q37 hymns? (பாடல்கள்?) இல்லை
41 1Q38 hymns? (பாடல்கள்?) இல்லை
42 1Q39 hymns? (பாடல்கள்?) இல்லை
43 1Q40 hymns? (பாடல்கள்?) இல்லை
44 1Q41-70 Unclassified வகைபடுத்த முடியாத சுருள்
45 1Q71 Daniel (தானியேல் புத்தகம்) ஆம்
46 1Q72 Daniel (தானியேல் புத்தகம்) ஆம்

குகை 2:

தொல்பொருள் ஆய்வாளர்கள் கும்ரான் பகுதியை ஆய்வு செய்யும் போது, பிப்ரவரி 1952ம் ஆண்டு இந்த இரண்டாவது குகை கண்டுபிடிக்கப்பட்டது. இக்குகையில் மோசேயின் ஐந்தாகமங்கள் அனைத்தும் கிடைத்தன, இன்னும் எரேமியா தீர்க்கதரிசன புத்தகமும், சங்கீதமும் கிடைத்தன.  இவைகள் தவிர தள்ளுபடி புத்தகமாகிய ஏனோக்கின் புத்தகமும் கிடைத்தது.

குகை 2ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):

எண்

 

சுருள் பெயர்

 

சுருள் விவரம்

 

 

பைபிளின் புத்தகமா?

(ஆம்/இல்லை)

1

2Q1

Genesis (ஆதியாகமம்)

ஆம்

2

2Q2

Exodus (யாத்திராகமம்)

ஆம்

3

2Q3

Exodus (யாத்திராகமம்)

ஆம்

4

2Q4

Exodus (யாத்திராகமம்)

ஆம்

5

2Q5

Paleo-Leviticus (லேவியராகமம்)

ஆம்

6

2Q6

Numbers (எண்ணாகமம்)

ஆம்

7

2Q7

Numbers (எண்ணாகமம்)

ஆம்

8

2Q8

Numbers (எண்ணாகமம்)

ஆம்

9

2Q9

Numbers (எண்ணாகமம்)

ஆம்

10

2Q10

Deuteronomy (உபாகமம்)

ஆம்

11

2Q11

Deuteronomy (உபாகமம்)

ஆம்

12

2Q12

Deuteronomy (உபாகமம்)

ஆம்

13

2Q13

Jeremiah (எரேமியா)

ஆம்

14

2Q14

Psalms (சங்கீதம்)

ஆம்

15

2Q15

Job (யோபு)

ஆம்

16

2Q16

Ruth (ரூத்)

ஆம்

17

2Q17

Ruth (ரூத்)

ஆம்

18

2Q18

Sirach (ஸிரக்)

இல்லை

19

2Q19

Jubilees (ஜூபிலீஸ்)

இல்லை

20

2Q20

Jubilees (ஜூபிலீஸ்)

இல்லை

21

2Q21

Apocryphon of Moses (மோசேயின் இரகசிய நூல்)

இல்லை

22

2Q22

Aprocyrphon of David (தாவீதீன் இரகசிய நூல்)

இல்லை

23

2Q23

Apocyrphal prophecy (இரகசிய தீர்க்கதரிசனம்)

இல்லை

24

2Q24

New Jerusalem (புதிய எருசலேம்)

இல்லை

25

2Q25

Legal documents (சட்ட நூல்கள்)

இல்லை

26

2Q26

Enoch Giants (ஏனோக்கின் இராட்சதர்கள்)

இல்லை

27

2Q27-33

Unclassified

 

வகைபடுத்த முடியாத சுருள்

குகை 3:

இந்த  மூன்றாம் குகையை ஆய்வாளர்கள் மார்ச் 1952ம் ஆண்டு கண்டுபிடித்தார்கள்.  இந்த குகையில் எசேக்கியேல், சங்கீதம், புலம்பல் மற்றும் ஏசாயா புத்தகத்தின் விளக்கவுரையும் கிடைத்தது. இக்குகையின் விசேஷம் என்னவென்றால், ‘ஒரு நீண்ட வெண்கலத்தால் ஆன தகடு இந்த குகையில் கிடைத்தது’, மேலும் அந்த தகட்டில், ஆலயத்தின் பொக்கிஷங்கள் எங்கேயெல்லாம் மறைக்கப்பட்டு இருக்கிறது என்ற விவரம் வரைபடமாக வரையப்பட்டு இருந்தது. ஆய்வாளர்கள் அந்த தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த வரைபடத்தின் படி தேடிப்பார்த்தும் அவர்களுக்கு எந்த ஒரு பொக்கிஷமும் கிடைக்கவில்லை.

குகை 3ல் கிடைத்த சுருள்கள் (கையெழுத்துப் பிரதிகள்):

எண்

சுருள் பெயர்

சுருள் விவரம்

 

பைபிளின் புத்தகமா?

(ஆம்/இல்லை)

1

3Q1

Ezekial (எசேக்கியேல்)

ஆம்

2

3Q2

Psalms (சங்கீதம்)

ஆம்

3

3Q3

Lamentations (புலம்பல்)

ஆம்

4

3Q4

Pesher Isaiah (ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தின் விளக்கவுரை)

ஆம்

5

3Q5

Jubilees (ஜூபிலீஸ்)

இல்லை

6

3Q6

Hymn (பாடல்கள்)

இல்லை

7

3Q7

Testament of Judah (யூதாவின் உடன்படிக்கை)

இல்லை

8

3Q8

unclassified, mentions Angel of Peace (வகைபடுத்த முடியாத சுருள், அமைதியின் தேவதூதன் என்ற பெயர் இருக்கிறது)

இல்லை

9

3Q9

sectarian text? (குழு பற்றிய சுருள்)

இல்லை

10

3Q10-14

Unclassified (வகைபடுத்த முடியாத சுருள்)

இல்லை

குகை நான்கில் மிகப்பெரிய அளவில் சுருள்கள் கிடைத்தன, எனவே அதனை தனிக் கட்டுரையாக கண்போம்.

தேதி: 31st Oct 2016

மூலம்: http://www.biblicalarchaeology.org/daily/biblical-artifacts/dead-sea-scrolls/caves-and-contents/


’சவக்கடல் சுருள்கள்’ பொருளடக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்