இயேசுவைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

முஸ்லிம்கள் இயேசுவை நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள், அவருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்வதை பலமுறை நான் கேட்டிருக்கிறேன். இது உண்மையான கூற்றா?

முஸ்லிம்களுக்கு எனது கேள்வி என்னவென்றால், நீங்கள் உண்மையில் இயேசுவை அறிவீர்களா?  அவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

அவர் எங்கு பிறந்தார்? அவர் எங்கே வளர்ந்தார்? அவருக்கு சகோதர சகோதரிகள் இருந்தார்களா? அவர்களின் பெயர்கள் என்ன? அவருடைய நெருங்கிய‌ நண்பர்கள் யார்? தம்முடைய சீடர்களுக்கு அவர் எவைகளை போதித்தார்?  ஜெபத்தைப் பற்றி அவர் என்ன கற்பித்தார்? நோன்பு என்ற உபவாசம் பற்றி அவர் என்ன கற்பித்தார்? அவர் செய்த அற்புதங்கள் என்ன? மூஸா  மற்றும் இப்றாஹீம் மற்றும் இதர தீர்க்கதரிசிகள் பற்றி அவர் என்ன சொன்னார்?

முந்தைய‌ வேதங்களைப் பற்றி அவர் என்ன சொன்னார்? சொர்க்கம் மற்றும் நரகத்தைப் பற்றி அவர் என்ன கற்பித்தார்? எதிர்காலத்தைப் பற்றி அவர் என்ன சொன்னார்? அன்பைப் பற்றி அவர் என்ன கற்பித்தார்? பணத்தைப் பற்றி? குடும்பத்தைப் பற்றி? மரணம் பற்றி? இப்படி பல தலைப்புக்கள் பற்றி அவர் பேசியுள்ளாரே, அவைகளை நீங்கள் அறிவீர்களா?

முஸ்லிம் நண்பர்களே! இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அவைகளை அறிந்துக்கொள்ளாமலேயே அவர் “எங்கள் தூதர் மற்றும் எங்கள் தீர்க்கதரிசி” என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையுள்ளவராக இருந்தால், இயேசுவின் வாழ்க்கையையும் அவருடைய வார்த்தைகளையும் அவருடைய செயல்களையும் பற்றி மேலும் நீங்கள் அறிந்துக்கொள்ளவேண்டும்.

இயேசுவின் நெருங்கிய சீடர்கள் எழுதிய அவரது வாழ்க்கை வரலாறை படியுங்கள்.  நீங்கள் ஒரு உண்மையான முஸ்லீமாக இருந்தால், இயேசு ஒரு நபி என்று நம்பி, அவரை மதிக்கிறீர்கள், நேசிக்கிறீர்கள் என்றால், இன்ஜீலில் இருந்து இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி படிக்க நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் படிக்கும் சுவிசேஷத்தை நீங்கள் படிக்க மறுக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நற்செய்தி என்று அழைக்கப்படும் இன்ஜிலை இயேசுவை கண்ட சாட்சிகள் அதாவது அவரது சீடர்கள் எழுதினார்கள், எனவே அவரைப் பற்றிய விவரங்களை நீங்கள் அங்கே காணமுடியும்.

உதாரணமாக, இயேசு எங்கு பிறந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? இன்ஜிலில் இதனை பார்க்கலாம். குர்ஆனில் இதனை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது.  இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், இயேசு பிறந்த ஊரின் பெயர், ஹதீஸில் உள்ளது என்று சொன்னால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நஸயீ ஹதீஸ் தொகுப்பு, அத்தியாயம் 5, ஹதீஸ் எண்: 451 ல் இதனை காணலாம் (https://ahadith.co.uk/permalink.php?id=7731).

 “மத்தேயு அல்லது மாற்கு அல்லது லூக்கா” நற்செய்தி நூல்களில் இயேசுவின் முழு வாழ்க்கையையும் ஏன் நீங்கள் படிக்கக்கூடாது? 

தமிழில் இன்ஜிலை படிக்க கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கவும்:

  1. http://www.tamil-bible.com/chapters.php?Type=Matthew 
  2. http://www.tamil-bible.com/chapters.php?Type=Mark 
  3. http://www.tamil-bible.com/chapters.php?Type=Luke 

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், அதை எழுதுங்கள். மேற்கண்ட இன்ஜிலை ஒருமுறையாவது முழுவதுமாக படித்துப் பாருங்கள்.

ஆங்கில மூலம்: http://www.faithbrowser.com/how-much-do-you-know-about-jesus/


ஃபெயித் ப்ரவுசர் தள இதர கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்