9/11: மக்காவில் கிரேன் விபத்து – இது அல்லாஹ்வின் கைவேலையா? பாகம் 1

முன்னுரை: 

பார்க்கும் அனைத்திலும் அல்லாஹ்வின் அற்புதங்களை கண்டுபிடிக்கும் முஸ்லிம்களுக்கு இந்த மக்காவின் விபத்தில் அல்லாஹ்வின் அற்புதம் ஏதாவது தெரிகின்றதா?

கணினியும், நவீன தொழில் நுட்பமும் உலக மக்களை முன்னேற்றத்தை நோக்கி அழைத்து சென்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால், முஸ்லிம்கள் இன்னும் தக்காளியில் அல்லாஹ்வின் அற்புதம், பச்சிளம் குழந்தைகளின் தோலில் அல்லாஹ்வின் அற்புதம், வானத்தில் அல்லாஹ்வின் அற்புதம் என்று நவீன தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டும், தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள் (பார்க்க: அல்லாஹ்வின் தக்காளி அற்புதம்).

முஸ்லிம்களின் இந்த நவீன அற்புதங்களில் கணிதமும் சேர்ந்துவிட்டுள்ளது. எண்களைக் கொண்டு, பல மாஜிக்குகளை செய்துக் காட்டி, பாமர முஸ்லிம்களையும், இதர மக்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, கீழ்கண்ட தொடுப்புகளை பார்க்கவும். குர்-ஆனில் அல்லாஹ் கணித அற்புதத்தை வைத்துள்ளான் என்றுச் சொல்லி, பல பொய் மூட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். 

இச்சிறிய கட்டுரையில், இம்மாதம் மக்காவில் ஏற்பட்ட விபத்து பற்றிய சிறிய குறிப்பை முஸ்லிம்களுக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன். இச்செயலிலும் அல்லாஹ்வின் அற்புதம்(கைவரிசை) உள்ளதா? என்பதை கவனிக்குமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அன்று 9/11 – உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட நாள்

2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 3000 பேர் மரித்தனர். பின் லாடனின் தீவிரவாத இயக்கமாகிய அல்கய்தா இந்த செயலை வெற்றிகரமாக செய்து முடித்தது.  இஸ்லாமிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அந்த நாளை சந்தோஷ நாளாக கொண்டாடினர். இது ஒருபுறமிருக்கட்டும். இப்போது இதே நாளில் நடந்த இன்னொரு நிகழ்ச்சியை பார்ப்போம்.

இன்று 9/11 – முஸ்லிம்களின் புனித மக்காவில் விபத்து – அப்பாவி மக்கள் மரித்தனர்.

2015ம் ஆண்டு, அதே செப்டம்பர் 11ம் தேதி, முஸ்லிம்கள் புனிதமாக கருதும் மக்காவில் ஒரு கிரேன் உடைந்து விழுந்தபடியினால், 100க்கும் அதிகமானோர் மரித்தனர், அனேகர் காயமுற்றனர்.  மரித்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த விபத்துக்கு காரணமான கிரேன் பின் லாடனின் தந்தைக்கு சொந்தமான கட்டுமான கம்பனியுடையதாக்கும். 

இது யாருடைய செயல்?

முஸ்லிம்களுக்கு யூதன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். முஸ்லிம்களுக்கு எது நடந்தாலும், அதற்கு காரணம் யூதன் ஆவான். யூதனுக்கு அடுத்தபடியாக இருப்பது “அமெரிக்கா” ஆகும். மக்காவில் நிகழ்ந்த விபத்துக்கு ”யூதர்கள்” அல்லது “அமெரிக்கா” காரணம் என்று சில முஸ்லிம்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. முஸ்லிமல்லாத எந்த ஒரு நபரும் மக்கா நகரில் நுழைய முடியாது, அவ்வளவு பாதுகாப்பு அங்குள்ளது. மேலும், காபா இருக்கும் பள்ளிவாசலில் நிச்சயமாக முஸ்லிமல்லாத நபர் இருக்கமுடியாது.  இப்படி இருக்கும்போது எப்படி இந்த விபத்து நேரிட்டது?  எல்லாவற்றிலும் அல்லாஹ்வின் அற்புதங்களை கற்பனைச் செய்யும் முஸ்லிம்கள், இந்த நிகழ்வுக்கு பின்னால் அல்லாஹ்வின் அற்புதம் (செயல்) இருக்கின்றதா? அல்லது மற்றவர்களின் கைவரிசை இருக்கிறதா என்று சிந்தித்துச் சொல்லமுடியுமா?

365 நாட்களில் ஏன் 9/11ம் நாள் குறிப்பிட்டு விபத்து நேரிடவேண்டும்?

கணிதம் மூலமாக எண்களின் மூலமாக அல்லாஹ் அற்புதத்தை செய்கிறான், மேலும் குர்-ஆனில் 19 என்ற எண்ணைக் கொண்டும் அற்புதத்தை வைத்திருக்கிறான் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் சில முஸ்லிம்கள், மக்காவில் விபத்து நடந்த தேதியை கவனிப்பார்களா?

உலக வர்த்தக மையம் தகர்த்தப்பட்டதும், மக்காவில் விபத்து நடந்த தேதியும் செப்டம்பர் 11ம் தேதியாகும்.  எல்லாவற்றிலும் அல்லாஹ்வின் அற்புதங்களைப் பார்க்க விரும்பும் முஸ்லிம்களுக்கு இந்த தேதி பற்றிய விஷயத்திலும் அல்லாஹ் அற்புதத்தை செய்து இருக்கிறான் என்று சொல்லமுடிகின்றதா? 

இது அல்லாஹ்வின் செயலா?  வருடத்தில் 12 மாதங்கள் இருக்கும் போது, 365 நாட்கள் இருக்கும் போது, ஏன் இந்த நாளில் விபத்து நேரிட்டது? அதுவும் மக்காவில், காபாவிற்கு பக்கத்தில் ஏற்பட்டது? இதில் முஸ்லிம்களுக்கு கணித அற்புதம் தெரிகின்றதா?

காற்றும் மழையும் காரணமா? அல்லது அல்லாஹ் காரணமா?

இந்த மக்காவின் விபத்துக்கு காரணம், அன்று அதிகமாக வீசிய காற்றும், மழைச் சூழலும் தான் என்று செய்தித் தாள்களில் படிக்கிறோம். முஸ்லிம்களின் படி, இயற்கையை கட்டுப்படுத்துவது அல்லாஹ் ஆவான். அவனே, இந்த தேதியிலே நூறுபேரின் உயிரை குடித்த இவ்விபத்தை செய்திருக்கவேண்டும்!

இதன் மூலமாக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் எதையாவது கூற விரும்புகிறானா?

ஒருவேளை இந்த செயல்,  யூதர்களின் கைவரிசை என்றும், அமெரிக்காவின் செயல் என்றும் சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். ஆனால், இப்படிப்பட்டவர்கள் கவனிக்க தவறும் விஷயம் என்னவென்றால், காபாவையும், புனித பள்ளிவாசலையும் பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்கு கொடுத்திருக்கிறான் என்பதாகும். இவ்வாண்டு அவன் தோல்வி அடைந்துவிட்டானா?  அல்லாஹ்வின் பாதுகாப்பையும் தாண்டி, மனிதன் ஊடுருவிச் சென்று விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றுச் சொல்வது அல்லாஹ்விற்கு இழுக்கு ஆகும், மேலும் அல்லாஹ்விற்கு தன் வணக்கத்தலத்தை காக்க சக்தியில்லை என்று எண்ணவேண்டி வருகிறது. எனவே முஸ்லிம்களே, மக்காவிற்குள் நடக்கும் விபத்துக்ளுக்கு மனிதனை குற்றப்படுத்தாதீர்கள், முக்கியமாக இஸ்லாமிரல்லாதவர்களை குற்றப்படுத்தாதீர்கள். 

தீவிரவாத செயல்களை மற்ற நாடுகள் மீது நடத்துவதை நிறுத்துங்கள் என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மறைமுகமாகச் சொல்ல முயலுகின்றானா?

வருடத்தில் 365 நாட்கள் இருக்கும் போது, இந்த குறிப்பிட்ட நாளில் காபாவிற்கு அருகே இப்படிப்பட்ட விபத்தை அல்லாஹ் அனுமதித்ததால், முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வால் ஒரு மறைமுக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்று கருதலாமா?

முஸ்லிம்களே! தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் சொல்ல வருகின்றானா? முக்கியமாக, பின் லாடனின் தீவிரவாத இயக்கத்தை ஆதரிக்கும் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் படி அல்லாஹ்  இதனை செய்தானா?

எது எப்படியோ! அப்பாவி மக்கள் மரித்துப் போனார்கள். கர்த்தர் இம்மக்களின் குடும்பங்களை அறுதல்படுத்துவாராக.

முடிவுரை: புனித ஸ்தலங்களுக்குச் சென்றால் அதிக புண்ணியம் என்று நம்பும் மக்கள் இருக்கும்வரை, பல விபத்துக்கள் வணக்கஸ்தலங்களில் அவ்வப்போது நடப்பதை தடுக்கமுடியாது. ஹஜ் நெரிசலில் சிக்கி மரித்தவர்கள், விபத்துக்களில் மரித்தவர்கள், வயதானவர்கள் தங்கள் வயதின் காரணமாக மரித்தவர்கள் என்று பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது. 

உண்மை தெய்வத்தை எங்கும் தொழுதுக் கொள்ளலாம் என்ற சத்தியத்தை முஸ்லிம்கள் அறியும்வரை, மக்கா போன்ற வணக்கஸ்தலங்களில் அவ்வப்போது நடக்கும் விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்களில் மரிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். 

இதுவும் அல்லாஹ்வின் செயலா (அ) உடனிகழ்வா(Co-incident)?

செப்டம்பர் மாதம் 11ம் தேதி, மக்காவின் விபத்து செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த பின்னர், நான் இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்தேன், மீதியை அடுத்த நாள் எழுதி முடிக்கலாம் என்று நினைத்தேன். அடுத்த நாள் 12ம் தேதி, நான் சுகவீனமடைந்தேன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பினேன். பலவீனத்தின் காரணமாக கட்டுரையை தொடரமுடியவில்லை. இதுவும் அல்லாஹ்வின் செயலா அல்லது உடனிகழ்வா?

நேற்று (தேதி 24) இரவு, முழுவதுமாக சுகமடைந்து, பாதியில் விட்ட கட்டுரையை தொடர்ந்தேன். இன்று காலை (தேதி 25) கட்டுரையை முடித்துவிட்டு, இரண்டாம் பாகத்திற்கு விவரங்களை சேகரித்துவிட்டு, இக்கட்டுரையை இணையத்தில் பதிக்கலாம் என்று நினைத்த போது, இன்னொரு திடுக்கிடும் தகவலை அறிந்தேன். மக்காவில் நேற்று இன்னொரு விபத்து நிகழ்ந்துள்ளது.  நெரிசலில் சிக்கி 700க்கும் அதிகமானோர் மரித்தனர். முக்கியமாக, இவ்வாண்டு ஹஜ்ஜுக்காக என் உறவினர்களில் இரண்டு பேர் செல்லவேண்டி இருந்தது, பல தடங்கல்களினால் அவர்கள் செல்லவில்லை. இந்த செய்தியை கேள்விப்பட்டதும், அவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருந்தது நல்லதாக ஆகிவிட்டது என்று பெருமூச்சு விட்டேன். ஆனால், அவர்கள் அடுத்த ஆண்டு ஹஜ் செய்ய முயற்சிகளை எடுத்துள்ளார்களே! மக்காவில் என்ன நடக்கிறது? ஏன் வணக்கஸ்தலங்களில் மரணங்கள் தொடர்கின்றன? கர்த்தருக்கு சித்தமானால், வேறு கட்டுரையில் சிந்திப்போம்.

தொடுப்புக்கள்: 

கிரேன் விபத்து குடித்த அப்பாவி உயிர்கள். பலவீனமான மனநிலையுள்ளவர்கள், இந்த வீடியோக்களை பார்க்கவேண்டாம். மக்கள் விபத்தில் சிக்கிக் கொண்டு இரத்தம் தோய்ந்தவர்களாக காணப்படுகிறார்கள்.

2015 ஹஜ்ஜின் போது நெரிசலில் சிக்கி 700க்கு அதிகமானோர் மரித்தனர்:

உமரின் இதர தலைப்புக் கட்டுரைகள்.

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்