யூதர்கள் முஸ்லிம்கள் போல, கிறிஸ்தவர்கள் "இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமை" உரிமை கொண்டாடுவதில்லை

(முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 6)

முன்னுரை:

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

இன்றைய கட்டுரையில், தற்கால இஸ்ரேல் காஸா சண்டை பற்றிய ஊடக செய்திகளில் வரும் ஒரு "தவறான விவரத்தை" தெளிவுபடுத்தப் விரும்புகிறேன்.

ஒரு எடுத்துக்காட்டுக்காக, தந்தி டீவியின் வீடியோ செய்தி ஒன்றையும், "இந்து தமிழ்" செய்தி தள தொடுப்பையும் கீழே கொடுத்துள்ளேன்.

  1. ஜெருசலேம் போருக்கான மத அரசியல்..! யூத,கிறிஸ்தவ,இஸ்லாமியர்- உரிமை யாருக்கு?
  2. ஜெருசலேம் இருதரப்புக்கும் முக்கியம் - அடுத்தது என்ன? | ஜெருசலேம் இருதரப்புக்கும் முக்கியம் - அடுத்தது என்ன?

Quote: இந்நிலையில் இந்தப் போராட்டத்தின் பின்னணியை சற்று பின்னோக்கி பார்க்கலாம்.

ஜெருசலேம் என்பது யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் தொடர்பான பகுதியாக ஆரம்பம் முதலேய பார்க்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த மூன்று தரப்பினரும் இதற்கு உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இதில் ஒரு தவறான செய்தியுள்ளது, அது என்னவென்றால், "யூதர்களும், இஸ்லாமியர்களும்" ஜெருசலேமை உரிமை கொண்டாடுகிறார்கள், அதற்காக தேவைப்பட்டால் சண்டையிடமும் தயாராக இருக்கிறார்கள். இவர்களோடு சேர்த்து "கிறிஸ்தவர்களும்" ஜெருசலேமை உரிமை கொண்டாடுகிறார்கள் என்று ஊடகம் சொல்வது தவறான  செய்தியாகும். மேலும், இஸ்லாம் ஆரம்பமுதல் "ஜெருசலேமை" தங்களுக்கு சொந்தமான பகுதியாக பார்த்து வருகிறது என்ற கூற்றும் தவறானதாகும். ஊடகங்களோடு சேர்ந்து,  சில கிறிஸ்தவர்களும் "ஆம், ஜெருசலேமை நாங்களும் உரிமை கொண்டாடுகிறோம்" என்று சொல்வது போல தெரிகிறது.  இவர்கள் கிறிஸ்தவ அடிப்படை சத்தியங்களை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்றுச் சொல்லவேண்டும்.

1) யூதர்களுக்கு ஜெருசலேம் மீது உரிமை உள்ளதா? 

முதலாவது, யூதர்களும், இஸ்லாமியர்களும் ஏன் உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதை சில வரிகளில் பார்த்துவிடலாம்.  

பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலை படிக்கும் போது, யூதர்களின் முக்கியமான அரசரான தாவீது (தாவுத்) காலம் தொடங்கி (கி.மு. 1000),  எருசலேமை கைப்பற்றி, அதனை இஸ்ரேலின் தலைநகரமாக மாற்றி, ஆட்சி செய்தார்.  யூதர்களின் முக்கியமான அரசராக தாவீது ராஜா இருக்கிறார், மேலும் இன்றைய இஸ்ரேலின் கொடியில் உள்ள நட்சத்திரத்தை, "தாவீதின் நட்சத்திரம்' என்று அழைக்கிறார்கள்.

2) ஜெருசலேம் எப்படி முஸ்லிம்களின் மூன்றாம் புனித பூமியானது? 

முஸ்லிம்களுக்கும் எருசலேமுக்கும் என்ன உறவு இருக்கிறது என்று ஆய்வு செய்தால், எந்த ஒரு சரித்திர ஆதாரமும் கிடைக்காது.

எருசலேமில் முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையாவது கால் வைத்துள்ளாரா?

முதலாவதாக‌, முஹம்மது எருசலேமுக்குச் சென்றார் என்று எந்த ஒரு சரித்திர ஆதாரமும் நம்மிடம் இல்லை. முஹம்மது தம்மை நபியாக பிரகடனம் செய்த ஆண்டுக்கு (கி.பி 610)  முன்பு, அவர் பல முறை வியாபாரத்திற்காக மக்காவிலிருந்து சிரியாவிற்கும் இதர பல நாடுகளுக்கும் சென்றுள்ளார். ஆனால், வரும் வழியில் அவர் எருசலேமுக்குச் சென்றார், குறைந்தபட்சம் வியாபாரத்திற்காகவாவது  சென்றார் என்ற விவரத்தை இஸ்லாம் எங்கும் கூறவில்லை.

ஆக, முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையும் எருசலேமில் கால்வைக்கவில்லை என்பது தான் உண்மை.   ஒருவேளை அவர் நபித்துவத்திற்கு முன்பு சென்றுயிருந்தால், அவர் நபியாகிவிட்ட பிறகு , அவர் யூத கிறிஸ்தவர்களிடம் பேசும் போதும் விவாதம் புரியும் போதும் பல முறை சில உதாரணங்களை, நிகழ்ச்சிகளை விளக்கியிருந்திருப்பார், ஆனால் இதைப் பற்றி ஹதீஸ்களில் நாம் ஒன்றையும் காண்பதில்லை.

இரண்டாவதாக, எருசலேம் என்ற வார்த்தை குர்‍ஆனில் ஒரு முறையும் வருவதில்லை. ஆனால், குர்‍ஆனின் 17வது ஸூராவில் 'அல்லாஹ் முஹம்மதுவை ஒரு வித்தியாசமான குதிரையில் (புராக்) ஏற்றிக்கொண்டு, தூரமாக உள்ள மசூதிக்கு அழைத்துச் சென்றதாக, அதன் பிறகு அங்கிலிருந்து சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாக' சொல்லப்பட்டுள்ளது.

குர்‍ஆன் 17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

இந்த வசனத்திலும் குர்‍ஆன் "எருசலேமில் உள்ள மசூதி" என்றுச் சொல்லாமல், "மஸ்ஜிதுல் அக்ஸா" என்று குறிப்பிடுகின்றது, இதன் பொருள் "தூரத்திலுள்ள மசூதி" என்று பொருள்.

பல முஸ்லிம் அறிஞர்கள், இந்த மசூதி எருசலேமில் இருந்த மசூதி என்று கூறுகிறார்கள், இதனால் தான் இன்று முஸ்லிம்கள் எருசலேமை சொந்தம் கொண்டாட முயலுகிறார்கள். ஆனால், முஹம்மதுவின் காலத்தில், யூதர்களின் இரண்டாம் ஆலயம் அந்த இடத்தில் இல்லை என்பது சரித்திரம் சொல்லும் சத்தியமாகும், அதாவது கி.பி. 70 ஆண்டில், முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த ஆலயம் ரோமர்களால் அழிக்கப்பட்டுவிட்டது. சரித்திரம் இப்படி சொல்லும்  போது, எப்படி முஹம்மது அங்கு சென்றுயிருந்திருக்கமுடியும்?

மஸ்ஜிதுல் அக்ஸா என்பது எருசலேம் ஆலயம் அல்ல:

இன்னும் சில அறிஞர்களின் கருத்துப்படி, தூரத்திலுள்ள மசூதி என்பது (சௌதி) அரேபியாவில் உள்ள இன்னொரு மசூதியைத் தான் குறிக்கும், எருசலேமில் உள்ள ஆலயத்தை அல்ல என்கிறார்கள். 

மேலும், ஹதீஸ்கள் அனைத்தும் முஹம்மதுவின்  காலத்திற்கு 150 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டன என்பதாலும், கி.பி. 691ல் (முஹம்மது மரித்த 60 ஆண்டுகளுக்கு பிறகு) எருசலேமில் அப்துல் மாலிக் இப்னு மர்வான் என்ற கலிஃபா 'இன்று நாம் காணும் டோம் ஆஃப் ராக்' மசூதியை கட்டியதால், எருசலேமை சொந்தம் கொண்டாட முஸ்லிம்கள் செய்த தில்லுமுல்லு அல்லது பொய்கள் தான், அந்த புராக் என்ற குதிரையில் முஹம்மது எருசலேமுக்குச் சென்றதும், அங்கிருந்து சொர்க்கத்துச் சென்ற ஹதீஸ்கள். இதன் படி பார்த்தால், முஹம்மது எருசலேமுக்கு செல்லவில்லை என்று சொல்லலாம்.

மீரஜ் என்பது கனவா? தரிசனமா?

குர்‍ஆன் சொல்லும் மீரஜ் என்ற பயணம் நிச்சயமாக அது 'முஹம்மதுவிற்கு வந்த ஒரு கனவாக, அல்லது தரிசனமாக இருக்கமுடியுமே தவிர, அது உண்மையாக இருக்கமுடியாது'.

கீழ்கண்ட படத்தை பாருங்கள். முஹம்மது மீரஜ் பயணம் மேற்கொண்டதாகச் சொல்லப்படும் காலத்தில், யூதர்களின் ஆலயமும் இல்லை (கி.பி. 70 அழிக்கப்பட்டுவிட்டது), அதே நேரத்தில், இன்று காணும் டோம் ஆஃப் ராக் மசூதியும் இல்லை, அது முஹம்மது மரித்து 60 ஆண்டுகள் கழித்து கட்டப்பட்டது? அப்படியானால், அந்த பயணம் என்பது ஒரு கட்டுக்கதையே அல்லாமல்  அல்லது கனவேயல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்?

இதிலிருந்து என்ன தெரிகிறது? இல்லாத ஊருக்கு நான் போய்விட்டு வந்தேன் என்று ஒருவர் சொல்லும் போது, எப்படி நாம் அவரை ஒரு மாதிரியாக பார்ப்போமோ, அது போலத் தான், எருசலேமில் உள்ள ஆலயத்திற்கு அல்லாஹ் முஹம்மதுவை கொண்டு சென்ற கதையும்.

மேலும், முஹம்மது மரித்த 632ம் ஆண்டுக்கு பிறகு, உமர் கலிஃபாவாக ஆட்சி செய்யும் போது, எருசலேமை ஆறுமாதங்கள் முற்றுகையிட்டு, முஸ்லிம்கள் பிடித்தார்கள், ஆமாம் அதுவே தான், வாள் முனையில் எருசலேம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.

3) கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஆனால் உரிமை கொண்டாடி சண்டையிட கிறிஸ்தவர்களுக்கு தகுதியற்றது

இது என்ன திடிரென்று, இப்படி சொல்லிவிட்டாய்? கிறிஸ்தவர்கள் கோபித்துக்கொள்ளப் போகிறார்கள் என்று சிலர் நினைக்கலாம். நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.

ஜெருசலேம் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரம். வாய்ப்பு கிடைத்தால், பணமிருந்தால் ஒரு முறை இஸ்ரேலுக்குச் சென்று பார்த்துவிட்டு வரலாம். பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, ஜெருசலேம் பற்றி அனேக விஷயங்கள் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.

ஆனால், ஜெருசலேம் எங்களுடையது, எங்களுக்கு ஜெருசலேம் மீது உரிமையுள்ளது என்று கிறிஸ்தவர்கள் 'யூதர்களைப்போல முஸ்லிம்களைப்போல, அதற்காக உரிமை கொண்டாடமாட்டார்கள், கொண்டாடக்கூடாது'.

கிறிஸ்தவர்களின் நோக்கம், இன்றைய எருசலேம் மீதல்ல, அதையும் தாண்டி 'பரம எருசலேம்' மீது தான் இருக்கவேண்டும் என்பது தான் புதிய ஏற்பாடு கற்றுத்தரும் பாடம்.

எருசலேமின் சமாதனத்திற்காக கிறிஸ்தவர்கள் ஜெபிக்கவேண்டும், அதே போல உலகின் சமாதானத்திற்காகவும் ஜெபிக்கவேண்டும்.

இயேசுக் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது, நடக்கும் நிகழ்வுகளுக்கு பிறகு, கிறிஸ்தவர்கள் 'புதிய எருசலேம்' மீது உரிமை கொண்டாடிக்கொள்கிறோம், இப்போது தேவையில்லை.

ஏசாயா  2:2-4

2. கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.

3. திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.

4. அவர் ஜாதிகளுக்குள் நியாயம்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

வெளி 21:1-7

1. பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.

2. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

3. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

5. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

6. அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

7. ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

முடிவுரை:

இதுவரை பார்த்த விவரங்களின் படி, எருசலேமின் மீது முஸ்லிம்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ளலாம், அதாவது அடாவடி செய்து, வன்முறையினால் இஸ்லாமிய கலிஃபா உமர் அவர்கள் எருசலேமை கைப்பற்றினார் என்று சொல்லிக்கொள்ளலாம். இது எங்களுக்கு போதுமே என்று முஸ்லிம்கள் கூறினால், 'நம் நாட்டை கைப்பற்றி பல ஆண்டுகள் ஆட்சி செய்து, 1947ல் துரத்தப்பட்ட‌ ஆங்கிலேயர்களுக்கு இன்று இந்தியாவில் என்ன மதிப்பு உள்ளது? காரி துப்புகிறோம் அல்லவா, அது போல, எருசலேமை கைப்பற்றிய  அக்கால முஸ்லிம்களை இவ்வுலகம் காரி துப்பவேண்டியது தான்'.  ஒரு ஊரை (எருசலேமை) முற்றுகையிட்டு கைப்பற்றியதே கேடுகெட்ட செயல், அதுவும் எங்களுக்கு அது ஒரு புனிதமான ஊர் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டும், அதை கைப்பற்றியது இன்னும் அடிமட்ட கேடுகெட்ட செயல். கடைசியாக, அது எங்களுடைய மூன்றாவது புனித ஸ்தலம் என்றுச் சொல்வது மன்னிக்கமுடியாத பாவச் செயலாகும்.  

முஸ்லிம்கள் 637ல் கைப்பற்றியதே எங்களுக்கு உரிமையை கொடுக்கும் என்ற முட்டாள்தனமான வாதங்களை யாராவது வைத்தால், உலக சரித்திரத்தில் இதுவரை எருசலேம் 44 முறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 52 முறை தாக்கப்பட்டுள்ளது, இரண்டு முறை மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது[1]. அந்த 44  முறை எருசலேமை கைப்பற்றியவர்கள் வந்து, நாங்களும் எருசலேமை கைப்பற்றினோம், எங்களுக்கும் எருசலேம் சொந்தம் என்று சொல்லவேண்டிவரும். யூதர்கள் முஸ்லிம்கள் என்று இரண்டு பேர் சண்டை போடும் போதே, உலகம் தத்தளிக்கிறது, இன்னும் மீதமுள்ள 42 பேர் வந்தால் முடிந்தது கதை, மூன்றாம் உலகப்போர் இல்லாமலேயே உலகம் சுடுகாடாய் மாறிவிடும். இந்த 42 பேர்களில் நாங்களும் (கிறிஸ்தவர்களும்) இருக்கிறோம்  என்பதை தாழ்மையுடன் பதிவு செய்துக்கொள்கிறேன். இப்போதே பஸ்ஸில் சீட் பிடிப்பதற்கு கைக்குட்டையை போட்டு வைக்கிறேன், ஹீ.. ஹீ.. முக்கியமாக, உமர் எருசலேமை 637ல் பிடிக்கும் போது, கிறிஸ்தவர்கள் தான் அங்கு ஆட்சி செய்துக்கொண்டு இருந்தார்கள் என்பதை சொல்லிவைக்கிறேன் இப்போதே.

யூதர்களின் உரிமைப் பற்றி பேசும் போது, தாவீது ராஜா எருசலேமை தலைமையிடமாக வைத்து இஸ்ரேலை ஆட்சி செய்த கி.மு. 1000 ஆண்டை கணக்கிட்டால், 3000 ஆண்டுகள் வருகிறது. ஆக, யூதர்களுக்கு எருசலேம் மீது அதிக உரிமை உண்டு.

கடைசியாக, கிறிஸ்தவர்களிடம் வந்தால், ஒரு சுற்றுலாத் தலமாக எருசலேமை வைத்ததால் போய் பார்த்து வருகிறோம். அதற்கும் தடை போட்டால், எங்களுக்கு சுற்றுலா செல்லும் "காசு மிச்சம்". நாங்கள் புதிய எருசலேமுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம், அதுவரைக்கும் இன்றுள்ள எருசலேமுக்காக சண்டைப்போட்டுக்கொண்டு சாகிறவர்கள் தாராளமாக சாகலாம்.  

ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம், எருசலேமுக்காக யார் சண்டைபோட்டு பாதிக்கப்பட்டாலும் சரி, கிறிஸ்தவர்களே இவர்களுக்கு உதவுவதற்கு  முதலாவதாக‌ முன்வரவேண்டியுள்ளது, செங்சிலுவை சங்கம் முன்வரவேண்டியுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு வந்த கதியை பார்த்தீர்களா? ஹமாஸ் தீவிரவாதி தன் நாட்டுக்குள் வரும் பணமெல்லாவற்றையும் சேர்த்து சுரங்கங்களை அமைத்துக் கொள்வானாம், காஸா மக்களுக்கு எந்த உதவியும் செய்யமாட்டானாம்,  இஸ்ரேல் மீது தாக்குதல் செய்வானாம், ஆனால், காஸா மக்களுக்கு பாதிப்பு வந்தால், மற்றவர்கள் வந்து உதவேண்டுமாம்? நல்லா இருக்கு முஸ்லிம்களின் கதை! இவர்களின் தொல்லை தாங்க முடியலே!

இயேசப்பா! சீக்கிரமாக வந்து, எசாயாவில் 2:4ல் கீழே சொல்லப்பட்டது போல, செய்யமாட்டீரா? 

எசாயா 2:4 அவர் ஜாதிகளுக்குள் நியாயம்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.

Date: 14th Nov 2023

Reference Links:

  1. History of Jerusalem - Wikipedia
  2. எருசலேமில் முஹம்மது தம் வாழ்நாளில் ஒரு முறையாவது கால் வைத்துள்ளாரா?

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ் - ஹமாஸ் இஸ்ரேல் 2023

உமர் பக்கம்

முஹம்மது பக்கம்