ஹமாஸ் ஒரு மெச்சிக் கொள்ளக்கூடிய செயலை செய்துள்ளது, ஹமாஸுக்கு சபாஷ் சொல்லமாட்டீங்களா?

(முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ்: பாகம் 8)

முன்னுரை:

இஸ்ரேல் ஹமாஸ் சண்டை பற்றிய முந்தைய கட்டுரைகளை கீழ்கண்ட தொடுப்பில் படிக்கவும்:

  1. பாகம் 1: முஹம்மது செய்தது போன்று செய்கிறார்களா ஹமாஸ் தீவிரவாதிகள்?
  2. பாகம் 2: அல்லாஹ் அனுமதித்தான், ஹமாஸ் தீவிரவாதிகள் கற்பழிக்கிறார்கள்? இஸ்ரேலுக்கு ஏன் கோபம் வருகிறது?
  3. பாகம் 3: காஸாவுக்கு ஒரு நீதி, இஸ்ரேலுக்கு வேறு ஒரு நீதியா? சிங்கத்தின் கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட நரி
  4. பாகம் 4: காஸாவின் அழிவிற்கு மூலக்காரணம் ஹமாஸ்
  5. பாகம் 5: கலிஃபா உமர் ஏன் எருசலேமை பிடித்தார்? அவரின் இந்த செயலுக்காக‌, உலக‌ முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களிடம் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்
  6. பாகம் 6: யூதர்கள் முஸ்லிம்கள் போல, கிறிஸ்தவர்கள் "இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமை" உரிமை கொண்டாடுவதில்லை
  7. பாகம் 7: இயேசுவை கொன்ற யூதர்களை இன்னும் ஏன் கிறிஸ்தவர்கள் வெறுக்காமல் ஆதரிக்கிறார்கள்? முஸ்லிம்களின் குழப்பமும், கிறிஸ்தவர்களின் பதிலும்

இந்த கட்டுரையில், பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ், மெச்சிக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த செயலைச் செய்தது, மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளை நன்றாக பார்த்துக் கொண்டார்கள் என்று நம்புகிற முஸ்லிம்களுக்கு பதில் அளிக்கும்படி, உமரும் அவரது தம்பியும் தொலைப்பேசியில் பேசிக்கொள்ளும் வகையில் இந்த கட்டுரை அமைந்துள்ளது.

தம்பி:  ஹலோ உமரண்ணா, பிரைஸ் த லார்ட் (Praise the Lord).

உமர்: பிரைஸ் த லார்ட் தம்பி. என்ன ஆச்சர்யம்? எப்பொழுதும் இஸ்லாமிய முறைப்படி  “ஸலாம் அலைக்கும்” என்று சொல்லுவாய். இப்பொழுது திடீரென்று “Praise the Lord” சொல்லுகிறாய். நல்ல மனநிலையில் இருக்கிறாய் என்று நினைக்கிறேன்.

தம்பி:   Yes, நான் இன்று நல்ல மூடில் இருக்கிறேன்.

உமர்: என்ன விஷயம் தம்பி. உன்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் என்ன?

தம்பி:   நல்ல விஷயம் தான். கடந்த வாரம் நீங்க தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  

உமர்: எந்த செய்தியைச் சொல்லுகிறாய்? 

தம்பி:  உங்களுக்கு தெரியுமல்லவா? ஹமாஸ் இஸ்ரேல் போர், தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஹமாஸ். தன் பிணை கைதிகளை விடுவித்துக்கொண்டு இருக்கிறது. அதேபோல இஸ்ரேலும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு உங்கள் மூலமாக “ஹமாஸுக்கு சபாஷ்” என்று சொல்ல வைக்காமல் விடமாட்டேன்.

உமர்: அப்படி என்ன ஹமாஸ் தீவிரவாதிகள் நற்காரியத்தை செய்தார்கள் தம்பி? அவர்களுக்கு நான் சபாஷ் சொல்வதற்கு?

தம்பி: ஒன்றும் தெரியாத மாதிரி பேசாதீர்கள்.

தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக. இஸ்ரேல் மற்றும் இதர நாட்டு 110 பிணைக்கைதிகளை ஹமாஸ்  விடுவித்துள்ளது. இஸ்ரவேலும், 240 பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவித்துள்ளது. இந்த செய்தியை நீங்கள் அறிவீர்கள் தானே.

உமர்: ஆமாம், இந்த செய்தியை நான் அறிவேன். இதில் ஹமாஸ் என்ன நல்ல காரியத்தைச் செய்தார்கள்? அவர்களை மெச்சிக்கொள்வதற்கு?

தம்பி:   நீங்கள் ஹமாஸ் விடுவித்த, போர் கைதிகளை விடுவிக்கும் வீடியோவை பார்த்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது இஸ்ரேலிலிருந்து பிடிக்கப்பட்ட போர்க்கைதிகளை விடுவிக்கப்படும் போது, அவர்கள் மகிழ்ச்சியோடு ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு நன்றி சொல்லி சிரித்த முகத்தோடு சென்றார்கள். ஹமாஸும் அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக‌ அனுப்பினார்கள். இந்த செயல் உங்களுக்கு வித்தியாசமாக தெரியவில்லையா? ஹமாஸ் போர் கைதிகளை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று உங்களுக்கு புரியவில்லையா?

உமர்: அடப்பாவி, நீ அந்த வீடியோவை பார்த்து இதையா புரிந்து கொண்டாய்? விடிய விடிய முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையை கேட்டுவிட்டு, காலையில் 'முஹம்மது ஆயிஷாவிற்கு என்ன உறவு' என்று கேட்டால், "பெரியப்பா" என்று சொன்னானாம் ஒருத்தன், அதுபோல அல்லவா நீ புரிந்துக்கொண்டு இருக்கிறாய்.

உன்னை நான் அறிவாளி என்று நினைத்தேன். ஆனால் நீ இப்படி அடிமட்ட முட்டாளாக இருப்பாய் என்று நினைக்கவே இல்லை.

தம்பி:   நீங்கள் எப்போதும் என்னை கலாய்ப்பதை விட்டு விட்டு, உண்மையான விசயத்துக்கு வாங்க. 

ஹமாஸ் போராளிகள், அந்த மக்களை எந்த அளவுக்கு நன்றாக கவனித்து இருந்திருந்தால், அவர்கள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கும் போது, மகிழ்ச்சியோடு அவர்ளுக்கு நன்றி சொல்லி சென்றிருப்பார்கள். அப்படியானால், ஹமாஸ் போராளிகள் மனிதாபமானத்தோடு யூதர்களிடம் நடந்து கொண்டார்கள் என்று தெரிகிறதல்லவா?

உமர்:  உனக்கு கண்களால் பார்த்தும் பின்னணியை புரிந்துக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன். உனக்கு ஒரு கதை சொன்னால் தான் புரியும்.

தம்பி:   ஒவ்வொரு முறையும். நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லும் போது நீங்கள் கதையை சொல்லுகிறேன், உதாரணத்தை சொல்கிறேன் என்று ஏதோ ஒரு கதையைச் சொல்லி மழுப்ப பார்க்கிறீர்கள், நேரடியாக விஷயத்துக்கு வாருங்கள். 

உமர்:  தம்பி, ஒரு சாதாரண விஷயத்தை கூட‌ புரிந்து கொள்ளாத மனநிலையில் இருக்கிற உன்னை போன்றவர்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லி, கதைகளைச் சொல்லி புரிய வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பதால் தான் நான் இந்த உதாரணத்தை சொல்கிறேன். அதன் பிறகு, நீ நம்புகிற அந்த விஷயம் உண்மையா? என்பதை பார்ப்போம். 

நிச்சயமாக ஹமாஸ், நல்ல ஒரு மெச்சிக் கொள்ளக்கூடிய காரியம் செய்திருந்தால் அதற்கு நான் நிச்சயமாக சபாஷ் சொல்லுவேன்.

தம்பி:  சரி சொல்லுங்கள், என்னால் என்ன செய்ய முடியும்? கேட்கிறேன்!

உமர்: அலட்டிக்கொள்ளாதே தம்பி, உன் பக்கம் உண்மையிருந்தால், அது நிச்சயம் ஜெயிக்கும்.

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான். அவன் ஒரு கிறிஸ்தவ ராஜா. அவன் தன் பக்கத்து நாட்டில் இருக்கும் ஒரு இஸ்லாமிய நாடு மீது போர் தொடுத்தான். அந்த பக்கத்து நாட்டு முஸ்லிம் அரசனுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருந்தது. அந்த கால கட்டத்தில், இந்த கிறிஸ்தவ ராஜா போர் செய்து, அந்த இஸ்லாமிய அரசனைக் கொன்றுவிட்டான். அநேக மக்கள் அந்தப் போரில் மடிந்தார்கள், அந்த நாட்டைப் பிடித்துவிட்டான். 

அந்த அரச குடும்பத்தில் இருந்த எல்லோரையும் கொன்றுவிட்டான். இந்த நாட்டை பிடித்து விட்டு, அங்கு அவனுடைய‌ தளபதிகளை வைத்துவிட்டு. இவன் தன்னுடைய நாட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறான். அப்படி திரும்பிக் கொண்டிருக்கும்போது, அந்த முஸ்லீம் நாட்டு அரசனுக்கு, திருமணம் ஆகி 2 (அ) 3 நாட்கள் தான் ஆனது என்று பார்த்தோம் இல்லையா, முஸ்லிம் அரசனின் மனைவியை இவன் எடுத்துக்கொண்டான்.  இன்று ஹமாஸ் செய்தது போல, பல பெண்களை, பிள்ளைகளை, ஆண்களை அடிமைகளாக தன் நாட்டுக்கு அழைத்துச் செல்கிறான்.

அந்த புதுமண திருமண பெண்ணோடு, தன் கணவனை கொன்ற மறுநாளே ஊருக்கு திரும்பி வரும்போது, அவளோடு உடலுறவு கொண்டான். இந்த பெண்ணை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று  சொன்னான். ஏற்கனவே அவனுக்கு பல மனைவிகள் உண்டு, என்பதை கவனிக்கவும்.

இவன் தன்னுடைய நாட்டுக்கு திரும்பிவிட்ட பிறகு, அந்த நாட்டு மக்களுக்கு இந்த விஷயம் தெரிந்தபோது, அவர்கள் மிகவும் பெருமையாக பேசிக் கொண்டார்கள். என்ன பேசிக் கொண்டார்கள்?

a) நம் நாட்டு அரசர் எவ்வளவு நல்லவர் என்று பாருங்கள்! அந்த முஸ்லீம் அரசனின் மனைவியை(அடிமையை), வேறு ஒரு சாதாரண குடிமகன் திருமணம் செய்து கொள்வான் என்று எண்ணி, அரசரே அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

b) அது மட்டுமல்லாமல், அந்த பெண்ணுக்கு நகைகளையும், பட்டு வஸ்திரங்களையும், ஒரு அரண்மனையையும் கொடுத்தார். 

c) இப்படிப்பட்ட ஒரு நல்ல அரசரை நாம் பார்க்க முடியுமா? இப்படி இவர் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால், அந்த பெண் சிறைச்சாலையில் ஒரு பிணைக்கைதியாக இருந்திருப்பாள் அல்லது அடிமையாக அப்பெண்ணை விற்றிருப்பார்கள். 

d) அந்த பெண்ணை ந‌ம் நாட்டில் உள்ள சாதாரண ஒரு குடிமகன் திருமணம் செய்திருப்பான். இது அந்த பெண்ணுக்கு அவமானமல்லவா? ஒரு நாட்டின் அரசியாக இருந்த பெண், திடீரென்று வந்து, ஒரு சாதாரண குடிமகனுக்கு மனைவியாவது அவளுக்கு அவமானமல்லவா? 

e) இதை கருத்தில் கொண்டுதான் அரசர், அன்பு கொண்டவர், தயாள குணம் படைத்தவர், பெண்களை கனப்படுத்துபவர் அந்த பெண்ணுக்கு ஒரு வாழ்க்கை கொடுத்தார். 

f) இப்படிப்பட்ட ஒரு அரசரைப் பார்க்க முடியுமா? என்று பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.

ஒரு கேள்வி, அந்த நாட்டு மக்கள் அந்த அரசனை மெச்சிக்கொண்டு, அதிகமாகப் பாராட்டினார்கள். இதை குறித்து உன் கருத்து என்ன? நீயும் அந்த அரசனை மெச்சிக் கொள்வாயா? சபாஷ் என்றுச் சொல்வாயா?

தம்பி:   இது என்ன முட்டாள்தனமான வாதமாக இருக்கிறது! அந்த கிறிஸ்துவ அரசன் பக்கத்து நாட்டு மீது வலியச் சென்று யுத்தம் செய்தான், இது முதல் தவறு. அந்த முஸ்லிம் அரசனையும் அவன் குடும்பத்தையும் கொன்றுவிட்டான், இது இரண்டாவது தவறு. அந்த பெண்ணை, விதவையாக்கிவனே இவன் தான். விதவையும் செய்துவிட்டு அந்த பெண்ணுக்கு மறுவாழ்வும் கொடுத்தேன் என்று சொல்லி மெச்சிக்கொள்வது மிகவும் கேவலமான செயலாக இருக்கிறது. அந்த மக்களுக்கு புத்தி இல்லையா? அறிவு இல்லையா? எது உண்மை? எது பொய்? என்று அவர்களுக்கு தெரியாதா? இப்படி ஒரு கேவலமான செயலை செய்த அந்த கெட்ட அரசனை எப்படி மெச்சிக்கொள்ளமுடியும்? 

நான் அந்த இடத்தில் இருந்திருந்தால், அந்த அரசனை வெட்டி போட்டிருப்பேன். அதுவும், திருமணமாகி ஓரிரு நாட்கள் மட்டும் ஆகியிருந்த, அந்த பெண்ணுடைய கணவனை கொன்று,  ஓரிரு நாட்களிலேயே நாட்டுக்கு திரும்ப வரும்போது அந்த பெண்ணோடு உடலுறவு கொள்வது மிகவும் கேவலமான செயல் ஆகும். இந்த செயலைச் செய்த அவனின் மர்ம உறுப்பை வெட்டி போட்டால் தான் அது நியாயமான தண்டனையாக இருக்கும். 

அதுவும் திருமணமாகி சில நாட்களே ஆன பெண்ணை விதவையாக்குவதும் அவள் கண்கள் முன்பாக அவளுடைய கணவனை கொல்வதும் அநியாயமான செயல் அல்லவா? அவன் உடலுறவு கொண்டது தாம்பத்தியமாக கருதப்படாது. அது கற்பழிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

தன் கணவனையும், தன் குடும்பத்தையும். கொன்ற அந்த அரசனோடு அந்த பெண் எப்படி தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்? அதுவும், இந்த கொலைகளை செய்த ஓரிரு நாட்களுக்குள், எப்படி அந்த பெண் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்ய முடியும்.

உமர்: இப்பொழுது சரியாக சொன்னாய் தம்பி. அந்த அரசன் செய்தது தவறு. இஸ்லாமில் இப்படி ஒரு சட்டம் இருக்கிறது அல்லவா? திருடினால் கைகளை வெட்ட வேண்டும் என்று சொல்லி, அதே போல இப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்த‌ அந்த அரசனுடைய மர்ம/ஆண் உறுப்பை வெட்ட வேண்டும் என்று நீ சொல்கிறாய். சரியான தீர்ப்பு சொன்னாய் தம்பி.

தம்பி:  நான் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பேன் என்பதை நீங்கள் அடிக்கடி மறந்து விடுகிறார்கள்.

உமர்:   இப்போது நீ நியாயத்தின் பக்கம் நிற்பாயா என்று பார்ப்போம்! நீ சொல்லிய‌ அதே தண்டனையை இதே போல குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் கொடுப்பாயா? 

தம்பி:  நிச்சயமாக கொடுப்பேன், நீதிக்கு பாகுபாடு காட்டத்தெரியாது, அண்ணே! 

உமர்:   சூப்பர் தம்பி, உன்னுடைய இறைத்தூதர் முஹம்மது அவர்கள்,  ஸஃபிய்யாவை எப்படி திருமணம் செய்து கொண்டார்? அது எப்படி நடந்தது என்று உனக்கு தெரியுமா?

தம்பி:  இந்த அரசனுடைய கதைக்கும் எங்கள் இறைத்தூதர் அன்னை ஸஃபிய்யா அவர்களை திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சிக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது? நான் ஹமாஸ் பற்றி கூறும்போது, நீங்கள் இறைத்தூதர் மற்றும் ஸப்பியா அவர்களின் திருமணம் பற்றி பேசுகிறீர்கள்?  

உமர்:  நான் சம்பந்தம் இல்லாமல் எதையும் பேசவில்லை தம்பி. ஒரு காரணத்தோடுதான் பேசிக்கொண்டு இருக்கிறேன். இதுவரை உன்னோடு பேசியதில் இருந்து புரிவது என்னவென்றால். உனக்கு முஹம்மது மற்றும் ஸஃபிய்யாவின் திருமணம் பற்றிய பின்னணிப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது தான்.

தம்பி நீ ஸஹி புகாரி 371 ஐ எண்ணை எடுத்து கொள்கிறாயா? அதனை நாம் படிப்போமா?

தம்பி: ஒரு நிமிஷம் இருங்கள். நான் எடுத்துக்கொண்டு படிக்கிறேன். அப்படி என்னதான் அதில் சொல்லி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

தம்பி புகாரி ஹதீஸை படிக்கிறான்:

சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்

உமர்: இந்த புகாரி ஹதீஸ் மூலமாக‌ அறிவது என்ன தம்பி? நான் மேலே கூறிய கதை ஒரு கற்பனைக் கதை அல்ல, அது உன்னுடைய இறைத்தூதர் முஹம்மதுவின் திருவிளையாடல் தான். அந்த மணப்பெண் வேறு யாருமல்ல, ஸப்பியா என்ற ஒரு யூதப்பெண் தான். இப்பொழுது சொல். நீ அந்த கிருஸ்தவ அரசனுக்கு அல்லது மேலே சொன்ன அந்த செயலை செய்த அரசனுடைய மர்ம உறுப்பை அறுத்து போட வேண்டும் என்று சொன்னாய் அல்லவா? இந்த தண்டனையை இப்போது யாருக்கு கொடுக்கப் போகிறாய்? 

நீதியின் பக்கம் நிற்கும் தம்பியே, உன் பதில் என்ன?

தம்பி:  நீங்கள் ஒரு ஏமாற்றுக்காரர், என்னை ஏமாற்றிவிட்டீர்கள். ஒரு கிறிஸ்தவ அரசனின் கதை என்று சொல்லி, எங்கள் இறைத்தூதரின் கதையை சொல்லி விட்டீர்கள். உங்கள் வஞ்சக வார்த்தைகளை அறியாமல், நான் அப்படிப்பட்ட தண்டனை கொடுப்பேன் என்று சொன்னேன். இதை ஏன் நீங்கள் எனக்கு? முன்னமே சொல்லவில்லை?

உமர்:

அப்படியென்றால், உன் இறைத்தூதர் செய்தால், அதற்கு ஒரு நியாயம், மற்றவர்கள் செய்தால், வேறு நியாயமோ! ஒரு கேடுகெட்ட செயல், அதை உன் இறைதூதர் செய்தால் என்ன? மற்றவர்கள் செய்தால் என்ன? 

நீதி நியாயம் சொல்லுகிற உன்னைப் போன்றவர்கள் “சத்தியத்திற்காக நிற்கவேண்டும்”, சொன்ன வார்த்தைகளை காப்பாற்றவேண்டும். அடிக்கடி வார்த்தைகளை மாற்றி பேச கூடாது. உன்னை போன்ற உண்மைக்கு புறம்பாக பேசும் நபர்களுக்கும் மற்றும் சத்தியம் என்றால் என்ன என்று தெரியாத மக்களுக்கும் புத்தி புகட்ட தான் இப்படி முஹம்மதுவின் கதையை வேறு ஒரு அரசனின் பெயரில் உன்னிடம் சொன்னேன்.

அதுமட்டுமல்ல, முஹம்மதுவின் சஹாபாக்களுக்கு இருந்த அடிப்படை அறிவு கூட முஹம்மதுவிற்கு இல்லாமல் போனது. 

எந்த ஒரு நபராவது ஒரு அரசனுடைய குடும்பத்தை கொன்றுவிட்டு, அவருடைய மனைவியோடு, அடுத்தடுத்த நாளில் தனி அறையில் உடலுறவு கொள்வானா? அப்படி செய்யும் போது அவள் ஒரு கத்தியை எடுத்து முஹம்மதுவை தாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்?  

இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் முஹம்மது நடந்து கொண்டார். ஆனால் தன்னுடைய தலைவனுடைய முட்டாள்தனத்தை, சரி செய்ய, ஒரு சஹாபா (முஸ்லிம்), முஹம்மது ஸப்பியாவோடு உடலுறவு கொள்ளும் அறைக்கு வெளியே பாதுகாப்பாக முழு இரவும் நின்றார். மறு நாள் காலையில் முஹம்மது அவரைக் கண்டு, ஏன் இப்படி செய்தாய் என்று கேட்ட போது, நச்சென்று பதில் கொடுத்தார்.

அவர் என்ன பதில் கொடுத்தார் என்பதை தபரி சரித்திர நூலிலிருந்து படிக்கலாம்:

Tabari History:

இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார். (அல் தபரி சரித்திரம் – The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

Ibn ‘Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

தம்பி:  நான் என்ன கேள்வி கேட்டேன்? நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்? நான் கேட்டது ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்கும்போது, இஸ்ரேல் மக்கள் அவர்களுக்கு நன்றி சொல்லி சந்தோஷமாக வீடு திரும்பியதை குறித்து சொன்னேன். ஆனால் நீங்கள், எங்கள் இறைத்தூதருடைய‌ கதைக்குச் சென்றுவிட்டீர்கள். முதலில் ஹமாஸ் கதைக்கு வாங்க, அதன் பிறகு இறைத்தூதர் கதைக்குப் போகலாம் 

உமர்: சரி உன் வார்த்தையின்படி ஹமாஸின் கதைக்கே வருகிறேன். ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மக்களை விடுவித்த போது, கைகுலுக்கி அவர்களுக்கு ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்து, அவர்களை தங்களுடைய வாகனத்திலிருந்து செஞ்சிலுவை சங்கம் வாகனம் வரை கொண்டு வந்துவிட்டார்கள்.

அந்த நேரத்தில், கிட்டத்தட்ட 50 நாட்கள் பிணைக் கைதிகளாக இருந்தவர்கள், தங்கள் குடும்பத்தோடு மறுபடியும் சேரப்போகும் மகிழ்ச்சியில், இஸ்ரேல் நாடு தங்களுக்கு செய்த நன்மையை நினைத்து புறப்பட்டார்கள். பெரும்பான்மையானவர்கள் புன்னகைத்து தங்கள் முகத்தில் ஒரு பொய்யான சந்தோஷத்தை கொண்டு வந்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு “டாட்டா சொல்லி சென்றார்கள்”. இதிலிருந்து என்ன புரிந்துக்கொண்டாய்? 

தம்பி:  இது கூடவா உங்களுக்கு தெரியவில்லை? இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால்: 

  1. ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் பிணை கைதிகளை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். 
  2. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பையும், தேவையான உணவு உடை இருப்பிடத்தையும் அதாவது சிறந்த வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். 
  3. அவர்களுக்கு எந்த ஒரு துன்பமும் விளைவிக்காமல் பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள். 
  4. இதனால் தான், அவர்கள் விடுவிக்கப்பட்ட போது மிகவும் புன்முறுவலோடு சந்தோஷத்தோடு. அவர்களுக்கு நன்றி சொல்லி சென்றார்கள். இது கூடவா உங்களுக்கு அந்த வீடியோவில் பார்த்து புரியவில்லை?

நீங்கள் இவ்வளவு ட்யுப் லைட்டாக‌ இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாமல் போனது அண்ணா?

உமர்: அந்த வீடியோவைப் பார்த்தால் உனக்கு அப்படியா தெரிகிறது? 

சரி. அந்த இடத்தில், உன் மனைவி பிள்ளைகளும் என் மனைவி பிள்ளைகளும் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்போம். அதன் பிறகு நீ உன் கருத்தைச் சொல்லு.

தம்பி: எப்போது பார்த்தாலும் உதாரணம் சொல்கிறேன் என்றுச் சொல்லி, ஏன் நம் சொந்த குடும்பத்தை இழுத்துவிடுகிறீர்கள்?

உமர்: இல்லை தம்பி, உன்னை போன்ற "பின்னணிகளை" சரியாக புரிந்துக் கொள்ளாதவர்களுக்கு நேரடியாகச் சொன்னால் புரியாது, நிகழ்ச்சிகளை வைத்து உதாரணங்களாக சொன்னால் தான் புரியும்.  அதுவும் சொந்த குடும்பம் என்றால் தான், உன் 'உண்மை முகம்' தெரியும்.

திடீரென்று, ஹமாஸ் தீவிரவாதிகள் நம்மை பிடித்து, நம் அப்பாவையும், அம்மாவையும் என்னையும் கொன்றுவிட்டது என்று நினைத்துக்கொள். அதன் பிறகு உன்னையும் உன் மனைவியையும் பிள்ளையும், என் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் பிணை கைதிகளாக பிடித்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். என்று கற்பனை செய்து கொள். 

பல நாடுகளின் உதவியோடு, இரு தரப்பிலிருந்தும் பிணைக்கைதிகளையும், சிறைக்கைதிகளையும் விடுவிக்க ஒரு ஒப்பந்தம் செய்கிறார்கள்.

உன்னை விடுவிக்காமல், உன் மனைவி மற்றும் ஒரு வயது மகனை விடுவிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உன் மனைவி, அந்த தீவிரவாதிகளுக்கு கை அசைத்து, நன்றி சொல்லி செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது உன்னிடம் நான் கேட்க வேண்டிய கேள்வி:

  • உன் மனைவி அவர்களுக்கு நன்றி சொல்லி செல்வதைப் பார்த்து, ஆஹா எவ்வளவு நன்றாக என் குடும்பத்தை அவர்கள் 50 நாட்கள் பார்த்துக்கொண்டார்கள் என்று நீ சொல்வாயா? ஹமாஸ் தீவிரவாதிகளை மெச்சிக்கொள்வாயா?

தம்பி:  இல்லை, இல்லை அவர்களை மெச்சிக்கொள்ளமுடியாது.

  • அவர்கள், நம் பெற்றோர்களை கொன்றது முதல் தவறு.
  • நம் குடும்ப பெண்களையும் பிள்ளைகளையும் பிணைக்கைதிகளாக கொண்டுச் சென்றது இரண்டாவது தவறு.

கடைசியாக நம்முடைய அரசாங்கம் இதர‌ நாடுகளின் உதவிகளோடு பிணைக் கைதிகளை விடுவிக்க ஒரு ஒப்பந்தம் போட்டு மக்களை விடுவித்தது. இதில் ஹமாஸின் மேன்மை ஒன்றுமே இல்லை. அவர்கள் ஒன்றும் சமூக சேவை செய்யவில்லை. ஆகையால், அவர்களை மெச்சிக்கொள்ள முடியாது

உமர்: இதைத்தான் நானும் சொல்கிறேன். பிணைக்கைதிகளை விடுவித்து ஹமாஸ் ஒன்றும் சமூக சேவை செய்யவில்லை, பதிலுக்கு இரண்டு மடங்கு பயங்கரவாத கைதிகளை பெற்றுக்கொண்டது. 110 பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக 240 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும்படி செய்தார்கள்.

ஹமாஸ் பல பெற்றோர்களை கொன்றனர், குடும்ப நபர்கள் முன்பாக‌ பெண்களை கற்பழித்து, குழந்தைகளை உயிரோடு கொளுத்தினர். மேலும் குழந்தைகளை அனாதைகள் ஆக்கி, பெண்களை விதவைகளாக்கி காட்டுமிராண்டி செயல்களில் ஈடுபட்டனர்.

தம்பி:   அப்படியானால், அவர்கள் ஏன் விடுவிக்கப்படும்போது ஹமாஸ் போராளிகளுக்கு நன்றி சொல்லி சென்றார்கள். இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? 

உமர்: அட போடா பைத்தியக்காரா. 

அந்த பிணைக் கைதிகள் தங்கள் குடும்பத்தோடு மறுபடியும் சேருவோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தனர், மேலும் இன்னும் சிலர் சோக முகத்தோடு தான் இருந்தனர், ஏனென்றால், இன்னும் அவர்களின் கணவர், அண்ணன், தம்பி, மற்றும் தந்தையை விடுவிக்கவில்லை. இந்த ஆண்களுக்கு என்ன நடக்குமோ? யாரும் அறியார்கள்.  இன்னொரு முறை பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் போடப்படுமா? என்ற நம்பிக்கையற்ற நிலை.  இன்னொரு ஒப்பந்தம் போடும்வரையில், இவர்கள் உயிரோடு இருப்பார்களா என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை.

ஒருவேளை, ஹமாஸ் தீவிரவாதிகள் 'அவர்களிடம் நீங்கள் உங்கள் வாகனத்தில் ஏறும் போது, எங்களுக்கு நன்றி சொல்லி செல்லவேண்டும்' என்று சொல்லியிருப்பார்கள், ஏனென்றால், ஊடகங்கள் அந்த நிகழ்ச்சியை வீடியோ எடுப்பதினால், 'ஹமாஸ் ரொம்ப நல்லவர்கள்' என்று உலக மக்கள் நம்பவேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம். ஏனென்றால், உலகத்தில் உன்னைப்போல "பயனுள்ள முட்டாள்கள் (Useful idiots)" இருக்கிறார்கள்.

ஒரு முறை ஹமாஸ் விடுவிக்கும்போது. குழந்தைகளை விடுவித்தார்கள், அவர்களின் தாய்மார்களை விடுவிக்கவில்லை, இதனை இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகு, தாய்மார்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளை விடுவித்தார்கள். இப்படிப்பட்ட கேடுகெட்ட செயலை செய்த ஹமாஸ் மக்களுக்கு சபாஷ் சொல்ல வேண்டுமென்று சொல்லுகிறாயா? 

தம்பி: ஒரு சில விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் “எங்களை ஹமாஸ் போராளிகள் நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்” என்று சொன்னார்களே அது பொய்யா? 

உமர்: அட அறிவாளியே! அவர்களின் குடும்பங்களை அழித்து, அவர்களை பிணைக்கைதிகளாக கொண்டுப்போனதே முதல் தவறு. ஹமாஸ் ஒரு 10 மாதம் நிரம்பிய ஒரு குழந்தையைக் கூட கடத்தி பிணைக் கைதியாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலர்களை பிடித்ததே, இவர்களுக்கு பதிலாக, பாலஸ்தீன கைதிகளை சிறையிலிருந்து விடுவிப்பதற்காகத் தான், அது வரை, இந்த மக்களுக்கு எதுவும் நடக்காமல் பார்த்துக்கொண்டால், ஹமாஸுக்குத் தான் லாபம், எனவே தான் அவர்களுக்கு ஓரளவுக்கு சாப்பாடு போட்டு உயிரோடு வைத்திருப்பார்கள்.  

தம்பி:  உங்களுக்கு உண்மை புரியவில்லை, உங்கள் கண்கள் மூடப்பட்டுள்ளது.

உமர்: அடப்பாவமே! திருமணமாகி சில நாட்களே ஆன ஒரு பெண்ணுடைய குடும்பத்தை கொன்றுவிட்டு, அந்த பெண்ணை உடனே கற்பழித்த முஹம்மது  போன்றவர்களை பின்பற்றுகிற உன்னைப் போன்றவர்களுக்கு, குடும்பம் என்றால் என்னவென்று புரியப்போகிறது?

பிணை கைதிகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் இன்னும் தங்களுடைய அந்த மன உளைச்சலில் இருந்து வெளிப்படவில்லை.  இவர்கள் மறுபடியும் நல்ல நிலைக்கு வருவதற்கு, சில வாரங்கள் அல்லது மாதங்கள்/வருடங்கள் கூட ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பிணைக்கைதிகளை ஹமாஸ் எங்கு கொண்டு போய் வைத்தார்கள் தெரியுமா? ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் போய் வைத்தார்கள் என்று நினைத்தாயா? இல்லை. பூமிக்கு 50 -75 மீட்டர்கள் ஆழத்தில் உள்ள சுரங்கங்களில் வைத்தார்கள். அவர்கள் 50 நாட்கள் நரகத்தை அனுபவித்து வந்தார்கள். 

அவர்களுக்கு மூன்று வேளையும் சரியான உணவு, குளிர்சாதனப்பெட்டி இருக்கிற அறைகள், ஒவ்வொரு நாளும் நல்ல உடைகள்,  ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை இவர்கள் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறாயா? 

தம்பி கடைசியாக சொல்கிறேன் கேள். 

  • ஹமாஸ் சமூக சேவை செய்யவில்லை. 
  • ஹமாஸ் சுயமாக நல்லெண்ணத்தில் விடுவிக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. 
  • கத்தார் கொடுத்த அழுத்தத்தினால் விடுவித்தார்கள், அதுமட்டுமல்ல. பிணைக் கைதிகளுக்கு பதிலாக‌  இஸ்ரேல் பிடித்திருந்த குற்றவாளிகளை விடுவிக்கும் படி, இரண்டு மடங்கு கைதிகளை விடுவிக்கும் படி ஒப்பந்தம் போட்டு இந்த 'நல்ல செயல்' அரங்கேற்றப்பட்டது.

இப்படிப்பட்ட தீவிரவாத செயல்களைச் செய்த, ஹமாஸுக்கு சபாஷ் சொல்லவேண்டும் என்று நீ எதிர்ப்பார்ப்பது, மூடத்தனம் தம்பி.

தம்பி:  நான் உங்களோட பிறகு பேசுகிறேன். முதலாவது. அன்னை ஸப்பியா அவர்களின் திருமணம் எங்கள் இறைத் தூதரோடு எப்படி நடந்தது என்பதை நான் போய் ஆய்வு செய்து அறிந்து கொண்டு வருகிறேன். என் இறைத்தூதர் இப்படி செய்திருக்க மாட்டார். பெண்களை கௌரவப்படுத்தும், எங்கள் இறைத்தூதர் உயர்ந்தவர். நீங்கள் ஒரு இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸை கொண்டு வந்து காட்டியுள்ளீர்கள் என்று நான் எண்ணுகிறேன். புகாரி ஹதீஸ் ஒரு போதும் குரானுக்கு சமமாகாது. நான் போய் அதை தான் ஆய்வு செய்து வருகிறேன். அதன் பிறகு பேசலாம்.

உமர்: இப்பொழுது நீ மிகவும் வீராப்போடு பேசுகிறாய். ஆய்வு செய்த பிறகு, உண்மைகளை அறிந்த பிறகு எனக்கு கால் செய்.

தம்பி: போன் வைக்கிறேன். பிறகு உங்களுக்கு கால் செய்கிறேன்.

Date: 9th Dec 2023

References:

  1. முஹம்மது சொன்னதும் செய்ததும்: முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  2. முஹம்மது சொன்னதும் செய்ததும்: முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார் 

முஸ்லிம்கள் படும் அல்லல்களுக்கு மூலக்காரணம் அல்லாஹ் - ஹமாஸ் இஸ்ரேல் 2023

உமர் பக்கம்

முஹம்மது பக்கம்