பாகம் 17 - சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 431 – 450: இஸ்லாமும் கிறிஸ்தவமும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவைகளா?

முந்தைய சின்னஞ்சிறு 430 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். இன்றைய கட்டுரையில், இன்னும் 20 கேள்வி பதில்களை "இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதா?" என்ற தலைப்பில் பார்ப்போம்.

கேள்வி 431: உலக நாடுகள் ஏன் அடிக்கடி இஸ்லாமோடு மோதுகின்றன‌? இஸ்லாமை விமர்சிக்கின்றன?

பதில் 431: நீங்கள் தொடர்ந்து உலக நாடுகளின் செய்திகளை படிப்பவர்களாக இருந்தால், அடிக்கடி இஸ்லாமின் பெயர் செய்திகளில் அடிபடுவதை காணமுடியும்.

1) முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாஃப் என்ற முகத்திரையை ஒரு குறிப்பிட்ட நாடு தடை செய்தது.

2) மூன்று தலாக் என்ற சட்டத்தை அரசு நீக்கியது

3) இஸ்லாமிய தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல் அவ்வப்போது செய்திகளில் வருகிறது

4) ஒரு வேடிக்கையான இஸ்லாமிய சட்டத்தை/வழிகாட்டுதலை (ஃபத்வாவை) ஒரு இமாம் கொடுத்தார், இதைப் பார்த்து உலக நாடுகள் நகைக்கின்றது.

5) 70 வயது முதியவர், 9 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டார்

6) லவ் ஜிஹாத் என்ற செய்தி

7) 21ம் நூற்றாண்டிலும் மிகவும் கொடுமையான ஷரியா தண்டனைகள் பற்றிய செய்தி

போன்ற செய்திகளை மேலோட்டமாக‌ படிக்கும் போது, ஏன் இஸ்லாம் மட்டும் அதிகமாக செய்திகளில் வருகின்றது என்ற சந்தேகம் நமக்கு வரும்.  ஆனால், அதே செய்திகளை இன்னொரு முறை ஆழமாக‌ படித்துப் பாருங்கள், அவைகள் நமக்கு "விசித்தரமானவைகளாக தோன்றும்", அதாவது உலகம் ஒரு வழியில் சென்றால், இஸ்லாம் வேறு வழியில் செல்லும். 

இஸ்லாம் தனி வழியை தெரிந்துக்கொண்டுச் செல்வதில் தவறில்லை, ஆனால், அது சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதாக உலகம் காண்பதினால், எதிர்வினை அதிகமாக உள்ளது.  மேலும் நகைப்பிற்குரிய விஷயங்களுக்கு இஸ்லாம் தேவையில்லாத முக்கியத்துவம் கொடுத்து நடந்துக்கொள்வதினால், அதனை வேறு ஒரு கண்ணோட்டத்தில் உலகம் காண்கிறது.

மேற்கண்ட ஒவவொரு செய்திக்கும் ஒரு காரணத்தை ஒரு சப்பைக் கட்டு பதிலை முஸ்லிம்கள் சொல்வார்கள், ஆனால் உலக மக்களுக்கு அவைகள் கேலியாக தெரிகின்றன, எனவே இஸ்லாமைக் கண்டு உலகம் முகத்தை சுளிக்கிறது. இதனை புரிந்துக்கொள்ளாத முஸ்லிம்கள் "இஸ்லாமை காரணமில்லாமல் உலகம் விமர்சிக்கிறது" என்று வேதனைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் சிறிது தற்பரிசோதனை செய்துக்கொண்டால், பெரும்பான்மை பிரச்சனைக‌ள் தீரும். நான் சொல்வதை உடனே நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டாம், இங்கு கொடுக்கப்பட்ட இதர கேள்வி பதில்களை படித்துப் பாருங்கள், 'உலகில் இஸ்லாம் எப்படி நடந்துக்கொள்கிறது,  இதற்கு யார் காரணம்' என்பது புரியும்.

கேள்வி 432: பிரான்ஸும் முஹம்மதுவின் கார்ட்டூனும் – “அக்டோபர் 2020” 

பதில் 432: முஹம்மதுவின் கார்ட்டூனைக் காட்டி, "பேச்சு, கருத்து சுதந்திரம்" பற்றி வகுப்பறையில் பேசிய ஒரு பள்ளி ஆசிரியரை, 18 வயது முஸ்லிம் வாலிபன் கொலை செய்தான். இதனைத் தொடர்ந்து, ஒரு சர்ச்சில் புகுந்து மூன்றுபேரை கொன்றுள்ளான் இன்னொரு வாலிபன், பாகிஸ்தானில் வாழும் இவனது பெற்றோர்கள், "என் மகன் பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிக‌ள் தான் "நான் இந்த கேள்வி பதில்களை (பாகம் 17ஐ) எழுத வைத்தது." இஸ்லாமுக்கு சகிப்புத் தன்மையும், பொறுமையும் உண்டா இல்லையா? என்பதை பல சான்றுகளோடுச் சொல்லி, ஒரு விழிப்புணர்வை உண்டாக்கவே இந்த பதிவு.

இதைப் பற்றிய செய்திகளை கீழ்கண்ட தொடுப்புக்களில் படிக்கலாம். 

கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டிய பிரெஞ்சு ஆசிரியரின் தலை துண்டிப்பு :  'இஸ்லாமிய பயங்கரவாத வெறிச்செயல்' என்று பிரான்ஸ் அதிபர் கடும் கண்டனம்

நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே துண்டிக்கப்பட்ட பயங்கர கொலை பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பிரான்ஸ் அதிபர் இமானுயெல் மேக்ரோன் “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று கடுமையாக தாக்கிப் பேசினார். . . 

2015-ல் சார்லி ஹெப்டோ என்ற நையாண்டிக்கான இதழில் கார்ட்டூன் வெளியானதையடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாரிசில் உள்ள யூத சூப்பர் மார்க்கெட்டிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கொல்லப்பட்ட ஆசிரியர் வரலாற்றுப் பாட ஆசிரியர் ஆவார், வகுப்பறையில் இவர் நபிகள் கார்ட்டூனைக் காட்டி பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் பற்றி பேசியுள்ளார்.

ஆனால் நபிகள் கார்ட்டூனை காட்டும் முன்பு வகுப்பறையில் இருந்த முஸ்லிம் மாணவர்களை வெளியே சென்று விடுமாறு அவர் கூறியதாகத் தெரிகிறது.

இது குறித்து மாணவர் பெற்றோர் ஒருவர் ஆங்கில செய்தி ஏஜென்சிக்கு தெரிவிக்கும்போது, “வெளியே போய்விடுங்கள் உங்கள் உணர்வுகளை நான் புண்படுத்த விரும்பவில்லை” என்று ஆசிரியர் கூறியதாக தெரிவித்தனர். . . .

பிரான்ஸ் நாட்டில் தேவாலயத்தில் புகுந்து பயங்கரவாதி தாக்குதல்: 3 பெண்கள் உயிரிழப்பு! 

1970ம் ஆண்டு முதல் அக்டோபர் 2020ம் வரை பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ள தீவிரவாத‌ தாக்குதல்களின் பட்டியலை இந்த தொடுப்பில் படிக்கலாம். இதில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்களும், இதர குழுக்களின் தாக்குதல்களும் அடங்கியுள்ளது.

இந்த 2020ம் ஆண்டு மட்டும் இன்று வரை 8 தீவிரவாத தாக்குதல்களை முஸ்லிம்கள் பிரான்ஸில் செய்துள்ளார்கள். அந்த பள்ளி ஆசிரியர் முஹம்மதுவின் கார்ட்டூனைக் காட்டி பேசியதால் தான் முஸ்லிம்கள் இப்படி நடந்துக்கொண்டார்கள் என்று சொல்லக்கூடாது.

கேள்வி 433: இஸ்லாம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதென்று முஸ்லிம்கள் ஏன் நம்புகிறார்கள்? 

பதில் 433: ஒவ்வொரு மதமும் ஒரு நம்பிக்கையின் மீது சார்ந்துள்ளது. ஒரு மதம் என்று எடுத்துக்கொண்டால், அதற்கென்று ஒரு வேத புத்தகம் இருக்கும், அதற்கென்று ஒருவர் தோற்றுவித்தவர் இருப்பார், மேலும் ஒரு இறைவன் இருப்பான்/ர்.

முஸ்லிம்களின் வேதம் குர்‍ஆன், தோற்றுவித்தவர் முஹம்மது மற்றும் இறைவன் அல்லாஹ். இந்த மூன்றை விமர்சிக்கக்கூடாது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், இது தவறு.

இதே போன்று தான் கிறிஸ்தவர்களுக்கும், பைபிளும், யெகோவா தேவனும், இயேசுவும் இருக்கிறார்கள். ஆனால், இவர்களை விமர்சிப்பவர்களை கிறிஸ்தவர்கள் கொலை செய்வதில்லை.

பைபிளின் தொடர்ச்சி தான் குர்‍ஆன் என்றும், இயேசுவிற்கு அடுத்தபடியாக அவரது அடிச்சுவடிகளில் வந்தவர் முஹம்மது என்று முஸ்லிம்கள் சொன்னாலும், இது உண்மையில்லை.  இயேசு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதென்று கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை, அப்படி விமர்சிக்கப்படும் போது, அமைதியான முறையில் பதில் சொல்கிறார்கள்.

ஆனால், முஸ்லிம்கள் இப்படி இல்லை ஏனென்றால், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை கவனிக்கும்போது, அவர் ஒரு சர்வாதிகாரி போன்று நடந்துக்கொண்டார். தம்மை விமர்சித்தவர்களை கொன்று குவித்தார். இஸ்லாமை ஏற்காதவர்கள் மீது போர் தொடுத்தார், சண்டையிட்டார். இதையே அவருக்கு அடுத்தபடியாக வந்த முஸ்லிம் தலைவர்களாகிய கலிஃபாக்களும் செய்தார்கள்.

தங்கள் முஹம்மது என்ன செய்தாரோ அதையே இன்றைய முஸ்லிம்கள் செய்கிறார்கள். இஸ்லாமை விமர்சிப்பவர்களை கொலை செய்கிறார்கள். இந்த காரியத்தை சிலர் செய்தாலும், பெரும்பான்மை முஸ்லிம்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இதனை ஆதரிக்கிறார்கள்.

முஸ்லிம்கள் ஏன் "இஸ்லாம் விமர்சனத்திற்கும், ஆய்விற்கும் அப்பாற்பட்டதென்று" நம்புகிறார்கள் என்ற கேள்விக்கான பதில் "இஸ்லாமிய நபி முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றில் காணப்படும்". 

நான் சொல்வதை நம்பாதவர்கள், கீழ்கண்ட புத்தகங்களை மிகவும் சீரியஸாக படியுங்கள்:

1) குர்‍ஆன் தமிழாக்கத்தை படியுங்கள் (ஆங்கிலத்திலும் படியுங்கள்)

2) குர்‍ஆனின் ஒவ்வொரு வசனத்தின் பின்னணியை, விளக்கத்தை இஸ்லாமிய தஃப்ஸீர்களிலிருந்து (விளக்கவுரைகளிலிருந்து) படியுங்கள்.

3) ஹதீஸ் தொகுப்புக்களை முக்கியமாக புகாரி மற்றும் முஸ்லில் ஹதீஸ்களை முழுவதுமாக படித்து புரிந்துக்கொள்ளுங்கள்.

4) முஹம்மதுவின் ஸீராவை (வாழ்க்கை வரலாறு) படியுங்கள், முக்கியமாக இப்னு இஷாக்கின் ஸீரத் ரஸூலுல்லாஹ், தபரியின் சரித்திரம், இப்னு இஷாமின் சரித்திரத்தை படியுங்கள்.

5) இஸ்லாமை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகங்களையும் படியுங்கள், அப்போது தான் சில உண்மைகள் வெளியே தெரியும்.

அன்று தம்மை விமர்சித்தவர்களை முஹம்மதுவை கொன்று குவித்தார், இது தான் இறைத்தூதர் காட்டிய வழியென்று நம்பி முஸ்லிம்கள் அதனை இன்று பின்பற்றுகிறார்கள்.

கேள்வி 434: இஸ்லாம் என்றால் அமைதி என்று அர்த்தம், இப்படி இருக்கும்  போது, இஸ்லாம் எப்படி வன்முறையைத் தூண்டும்?

பதில் 434:இந்த காலத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் அறிஞர்கள், மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வருவதற்கு, அசாதாரண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது, இஸ்லாம் என்பது வன்முறையை வெறுத்து, அமைதியை விரும்பும் மதம் என்று காட்ட முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் புதியதாக விற்கப் பார்க்கும் ஒரு சித்தாந்தம் என்னவென்றால், "இஸ்லாம் (Islam) " என்ற தங்கள் மதத்தின் பெயரின் பொருள் "அமைதி (Peace)" என்றுச் சொல்கிறார்கள். அமைதி என்ற பொருள் தரும் அரபி வார்த்தை "சலாம்  (Salam)" என்பதாகும். அவர்கள் தங்கள் புதிய சித்தாந்தத்தை சொல்வதற்கு அடிப்படையாக‌ அரபி மொழியில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே முல வார்த்தை இருப்பதை காரணம் காட்டுகிறார்கள்.

அரபி மொழியை பேசத் தெரியாதவர்களுக்கு, மற்றும் இஸ்லாம் பற்றி தெரியாதவர்களுக்கு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் இப்படிப்பட்ட புதிய சித்தாந்தங்கள் மூலமாக‌ ஏமாற்ற முடியும். ஆனால், இப்படிப்பட்ட பிரச்சாரத்தின் மூலமாக, அரபி மொழி தெரிந்தவர்களையும், இஸ்லாமின் போதனை என்ன என்று புரிந்துக் கொண்டவர்களையும் ஒரு போதும் அவர்கள் முட்டாள்களாக்க முடியாது. இஸ்லாம் என்ற மதம் வன்முறையினால் ஸ்தாபிக்கப்பட்டது மற்றும், இன்று கூட அதே வன்முறையை நம்பி அதை ஒரு கோட்பாடாகக் கொண்டு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. முஸ்லீம்கள் தங்களுக்குள் இருக்கும் உறவுமுறை, மற்றும் அவர்களுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையில் இருக்கும் உறவுமுறை எப்போதும் "பயம் அல்லது பீதி" என்பதின் அடிப்படையிலேயே இருந்துள்ளது, இன்னும் அப்படியே இருக்கிறது. "இஸ்லாம்" மற்றும் "சலாம்" என்ற இரண்டு வார்த்தைகள் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமில்லாத வார்த்தைகளாகும் மற்றும் இவ்விரண்டு வார்த்தைகள் பெயரிலோ அல்லது பொருளிலோ கூட சம்மந்தப்பட்டவைகள் அல்ல. 

அரபி அகராதியில் சில‌ குறிப்பிட்ட வார்த்தைகளின் பொருள் என்ன என்று தெரிந்துக்கொள்ள விரும்பினால், "வேர் (root)" வார்த்தை என்றுச் சொல்லக்கூடிய மூன்று எழுத்து சொல்லை நாம் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியமாக உள்ளது. பல வார்த்தைகள் அந்த ஒரு மூல வார்த்தையின் மூலமாக உருவாகியிருக்கும், ஆனால், அவ்வார்த்தைகளின் பொருள்களில் கூட ஒற்றுமை இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை.

"ச ல ம" என்ற வார்த்தையிலிருந்து "இஸ்லாம்" என்ற வார்த்தை உருவாகியது, இஸ்லாம் என்றால் "சரணடைதல்" என்றுப் பொருள்.

இதே போல, "சலாம்" என்ற வார்த்தைக்கு "அமைதி" என்றுப் பொருள், இந்த வார்த்தையும் "ச லி ம" என்ற வார்த்தையிலிருந்து வந்தது, இதன் பொருள் "காப்பாற்றப்படல் அல்லது ஆபத்திலிருந்து தப்பித்தல்" என்பதாகும்.

இந்த "ச ல ம" என்ற வார்த்தையிலிருந்து வந்த இன்னொரு பொருள் என்னவென்றால், "பாம்பின் கடி அல்லது பாம்பு கொட்டுதல்" அல்லது "தோல் பதனிடுதல்" என்பதாகும். ஆக, "இஸ்லாம்" என்ற வார்த்தை "சலாம் - அமைதி" என்ற பொருள் தரும் வார்த்தையோடு சம்மந்தம் உண்டு என்று நாம் சொல்வோமானால், அதே "இஸ்லாம்" என்ற வார்த்தைக்கு "பாம்பின் கடி" அல்லது "தோலை பதனிடுதல்" என்ற வார்த்தைக்கும் சம்மந்தம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற முடிவிற்கும் நாம் வரலாம் (Hence, if the word Islam has something to do with the word Salam i.e. ‘Peace’, does that also mean that it must be related to the ‘stinging of the snake’ or ‘tanning the leather’?)

முஹம்மது சுற்றியுள்ள நாடுகளின் அரசர்களுக்கும், தலைவர்களுக்கும் இஸ்லாமையும், தன் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ளும் படியாகவும், தான் அல்லாவின் தூதர் என்பதை நம்பும்படியும் அவர்களுக்கு கடிதம் மூலமாக அழைப்பு விடுத்தார்கள். அவர் தன் கடிதங்களை இப்படி முடிப்பார், "அஸ்லிம் தஸ்லம்! (Asllim Taslam)". இந்த இரண்டு வார்த்தைகளும் "அமைதி" என்ற பொருள் வரும் "ச ல ம" என்ற ஒரே வேர்ச்சொல்லிலிருந்து வந்திருந்தாலும், இந்த இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்காகிலும் "அமைதி" என்ற பொருள் இல்லை. இவ்விரு வார்த்தைகளின் பொருள் "சரணடை அப்போது நீ பாதுகாப்பாக இருப்பாய்", அல்லது வேறு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், "சரணடை அல்லது மரணமடை" என்று பொருளாகும். ஆக, தன் மதத்திற்கு சரணடைய மறுக்கும் மக்களை, கொன்று விடுவேன் என்று பயமுறுத்தும் மதத்தில் "அமைதி" என்ற பொருளுக்கு இடமேது?  

வேறு வகையில் சொல்லவேண்டுமானால், குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்கள், அல்லது அல்‍-சீரா (முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு) என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமிய புத்தகங்களில், நிறைய ஆதாரங்கள் காணக்கிடக்கின்றன. அதாவது, இஸ்லாம் அன்று வன்முறையை பின் பற்றாமல் இருந்திருக்குமானால், இஸ்லாம் நிலைத்திருந்திருக்காது அல்லது இன்று இந்த நாள் வரை உயிரோடு இருந்திருக்காது. இதைப் பற்றி ஒரு நல்ல எடுத்துக்காட்டுக்களை சொல்லவேண்டுமானால், "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்ற விவரங்களைச் சொல்லலாம் (The Wars Of Al-Riddah, i.e. ‘the wars against the apostates’).

இந்த "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்பது முஹம்மது அவர்களின் மரணத்திற்கு பின்பு உடனே ஆரம்பிக்கப்பட்டது. அதிகமாக பயப்படவைத்த தலைவராக இருந்த முஹம்மது அவர்களின் மறைவிற்கு பிறகு, கட்டாயத்தின் பெயரில் இஸ்லாமை தழுவிய அந்த இன (Tribe) மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இஸ்லாமுக்கு எதிராக புரட்சி அல்லது கிளர்ச்சி ஆரம்பமானது, ஒவ்வொரு தலைவராக/நாடாக‌ இஸ்லாமை விட்டு வெளியேற‌ ஆரம்பித்தனர், மற்றும் முஹம்மதுவின் அரசாங்கம் விதித்த வரியை கட்ட மறுத்துவிட்டனர். இந்த புரட்சிக்கு பதில் கொடுக்கும் விதமாக, முதல் காலிஃபா, அபூ பக்கர் அவர்கள், இஸ்லாமை விட்டு வெளியேறும் இவர்களோடு சண்டையிடும் படி தன் இராணுவத்திற்கு கட்டளை பிற‌ப்பித்தார்கள். இஸ்லாமை விட்டு வெளியேற முயற்சி செய்த அந்த மக்கள் அனைவரையும் மறுபடியும் இஸ்லாமின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்தன. இந்த போர்கள் செய்யும் படி முதல் காலிஃபா மட்டும் கட்டளையிடவில்லை, இதனை அல்லாவும் அவனது தூதரும் கட்டளையிட்டுள்ளனர்.

இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று குர்‍ஆன் மிகவும் தெளிவாகச் சொல்கிறது:

“…அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்* செய்யும் வரையில், அவர்களில் எவரையும் நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! மேலும், அவர்கள் (ஹிஜ்ரத்தைப்) புறக்கணித்துவிட்டால், அவர்களை நீங்கள் எங்குக் கண்டாலும் பிடித்துக் கொன்று விடுங்கள். மேலும், அவர்களில் எவரையும் உங்களின் நண்பராகவோ, உதவியாளராகவோ ஆக்கிக் கொள்ளாதீர்கள்.” (குர்‍ஆன் 4:89 - IFT translation).

முஹம்மது அவர்களும், அல்புகாரி ஹதீஸின் படி, "ஒரு முஸ்லீம் அவன் மதத்தை விட்டுவிட்டால், அவனை கொல்லுங்கள்" என்றுச் சொல்லியுள்ளார்கள் (Muhammad also said, as narrated by Al-Bukhari, "If somebody - a Muslim - discards his religion, kill him.")

இஸ்லாமை தழுவி பிறகு அதை விட்டு வெளியேறுகிறவர்களை கொல்ல வேண்டும் என்று குர்‍ஆன் கட்டளை இடுவதொடு மட்டுமில்லாமல், முஸ்லீம்கள் எல்லா நாடுகளோடும் சண்டையிட்டு, ஒன்று அந்நாடுகள் இஸ்லாமை அங்கீகரித்து ஜிஸ்யா என்ற வரியை செலுத்தவேண்டும் அல்லது மரணத்தை சந்திக்க தயாராக வேண்டும் என்று குர்‍ஆன் கட்டளையிடுகிறது:

வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.  (குர்‍ஆன் 9:29) .

இதே ஸூரா 5ம் வசனத்தில் குர்‍ஆன் சொல்கிறது: “…9:5. . . .சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள். . .…”

இப்போது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் என்று நன்றாக புரிகிறதல்லவா. ஆனால் நம்புவதற்குத் தான் சிறிது கடினம்.மூலம்

மேலதிக விவரங்களுக்கு கீழ்கண்ட தமிழ் கட்டுரைகளை படிக்கவும்:

1) முஹம்மது ஒரு தீவிரவாதியா? 

2) இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள்- முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை

3) இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும்- தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!

கேள்வி 435: இதர  மதங்களைப் போல இஸ்லாம் ஒரு மதம் தானே, அதற்குரிய மரியாதையை உலகம் ஏன் அதற்கு கொடுப்பதில்லை?

பதில் 435: இஸ்லாம் என்பது கிறிஸ்தவத்தைப் போல, இந்து மதம் போல ஒரு மதம் அல்ல. இஸ்லாம் என்பது ஒரு அரசியல் கட்சியாகும். இஸ்லாமுடைய முக்கிய நோக்கம், உலக மக்களுக்கு இஸ்லாம் பற்றி போதனை செய்து, எல்லோரையும்  இஸ்லாமியர்களாக மாற்றுவது மட்டுமல்ல, அதே நேரத்தில், உலகத்தை ஒரு அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதாகும். அதாவது அலெக்சாண்டர் ஆசைப்பட்டது போல, உலகம் அனைத்தையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வருவது தான் இஸ்லாமின் முக்கிய நோக்கம். 

இஸ்லாமில் மத சடங்குகள், வணக்க வழிபாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், அதையும் தாண்டி, உலகம் அனைத்திலும் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலுக்கு கொண்டுவருவது தான் முஸ்லிம்களின் பிரதானமான நோக்கம்.

இதனை அறிய, நீங்கள் உலக செய்திகளை பார்க்கவேண்டும். முஸ்லிம்கள் ஒன்று திரண்டி கோஷமிட்டால் என்ன சொல்வார்கள் என்று கவனித்துப்பாருங்கள். முக்கியமாக ஐரோப்பாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் கோஷங்கள் போட்டுக்கொண்டு, செல்லும் முஸ்லிம்களின் கைகளில் இருக்கும் பெயர் பலகைகளை பார்த்தால்:

 • "இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆட்சி செய்யும்"
 • "அமெரிக்காவிற்கு மரணம்"
 • "முஸ்லிம்கள் உலகை ஒரு நாள் ஆளுவார்கள்"
 • "எங்களுக்கு ஜனநாயகம் தேவையில்லை, வெறும் இஸ்லாம் தான் வேண்டும்."
 • "இஸ்லாமை கேவலப்படுத்தியவர்களை  கொல்லுங்கள்" 

போன்றவைகளை நாம் காணமுடியும். இஸ்லாமியர்களின் மேற்கண்ட விதமான செய்திகள் அடங்கிய படங்களை காண இந்த கூகுள் தொடுப்பை சொடுக்குங்கள்.

ஒரு மதத்தை பின் பற்றுபவனுக்கு, அதாவது முஸ்லிமுக்கு, தன் மார்க்கத்தை விமர்சிப்பவனை கொல்லவேண்டும் என்ற வெறி எங்கேயிருந்து வருகிறது?  இஸ்லாமை விமர்சிப்பவன் கொல்லப்படவேண்டும் என்று அவன் துடிக்கிறான்? இஸ்லாம் ஒரு மதமாக மட்டும் இருக்குமானால், இப்படியெல்லாம் அவன் சிந்திப்பானா?  

இதர மார்க்கங்களின் மக்களுக்கு இப்படியெல்லாம் வெறி பிடிப்பதில்லையே அது ஏன்?  கிறிஸ்தவத்தை விமர்சித்தால், இயேசுவை விமர்சித்தால், அப்படி விமர்சிப்பவன், கேவலமாக பேசுபவன் கொல்லவேண்டும் என்ற உணர்வு அல்லது எண்ணம் ஏன் ஒரு கிறிஸ்தவனுக்கு வருவதில்லை?

இப்படி நடந்துக்கொள்ளும் படி ஒரு முஸ்லிமை தூண்டுவது எது? 

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு மதம் பிடித்த அரசியல் யானை? தனக்கு முன்பு எது வந்தாலும், அந்த யானை மிதித்துப்போட்டு, நாசமாக்கிவிடும். அந்த மதம் பிடித்த யானையின் குட்டிகள் தான் "உலகை ஒரு நாள் இஸ்லாம் ஆளும்" என்றுச் சொல்லி கோஷமிடும் அந்த சில முஸ்லிம்கள். 

ஆக, இஸ்லாம் ஒரு மதம் மட்டும் தான் என்று எண்ணுவது தவறு.

கேள்வி 436இஸ்லாமை சீர்திருத்த முடியாது, அதனால் தான் உலகம் அதனை தொடர்ச்சியாக விமர்சித்துக்கொண்டு இருக்கிறது. இந்த கருத்து சரியானதா?

பதில் 436: நாம் உலக மதங்களின் சரித்திரத்தை கவனித்தால், ஏதோ ஒரு கால கட்டத்தில் அவைகளின் பெயரை வைத்துக்கொண்டு சில சமூக சீர்கேடுகள் அல்லது வன்முறைகள் நடந்து இருப்பதை காணமுடியும். 

உதாரணத்திற்கு, கிறிஸ்தவத்தை எடுத்துக்கொள்வோம், ஒரு கால கட்டத்தில், கத்தோலிக்க போப்புக்கள் அனேக தீய செயல்களுக்கு காரணமாக இருந்தார்கள், தங்கள் சபை சொல்வதற்கு எதிராக விமர்சிப்பவர்களை இரக்கமின்றி தண்டித்தார்கள், மேலும் சிலுவைப்போர் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அதே கத்தோலிக்க சபையில் இருந்த பாஸ்டர்கள், சீர்திருத்தம் தேவை என்பதை உணர்ந்தார்கள், பைபிளுக்கு எதிராக சில தீய மனிதர்கள் செய்த கொடுமைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள். இது பைபிளுக்கு எதிரான போதனை என்பதை உலகம் அறியும் படி செய்தார்கள். சீர்திருத்தம் வந்தது, மக்கள் மறுபடியும் பைபிளுக்கு நேராக திரும்பினார்கள்.

இன்னொரு உதாரணம், நம் இந்தியாவில் நடந்த மத சம்மந்தமான சமூக கேடுகளைச் சொல்லலாம். அதாவது சிறுவயதில் திருமணம் செய்தல், கணவன் மரித்துவிட்டால், அவனோடு கூட அவன் மனைவியையும் சேர்த்து எரித்துவிடுதல் (உடன்கட்டை ஏறுதல்) போன்ற தீய செயல்கள் ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால், அனேகரின் முயற்சியால், இந்த தீய பழக்கம் இப்போது விடப்பட்டுள்ளது, ஒருவகையாக எல்லா இந்துக்களும் அந்த தீய செயல்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்து மத மறுமலர்ச்சியை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால், இஸ்லாம் இப்படி சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளுமா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. இஸ்லாமும் இஸ்லாமியர்களும் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இஸ்லாமில் உள்ள தீய காரியங்களை வெளியே சொல்லும் போது, இவர்கள் அதனை எதிர்க்கிறார்கள், உண்மை சொல்பவர்களை தாக்குகிறார்கள். இவர்களுக்கு துணையாக குர்-ஆன் உள்ளது. மூல நூல்கள் சரியாக இருந்து, அதனை பின்பற்றுபவர்கள் தவறாக நடந்துக்கொள்ளும் போது சீர்திருத்தம் சாத்தியமாகும். ஒரு கால கட்டத்தில், அந்த மூல நூல்களை மக்கள் படித்து, உண்மையை அறிந்துக்கொள்ளும் போது, அந்த மார்க்கம் சீர்திருத்தம் அடைந்துவிடும். சிலுவைப்போர்கள், இதர சமூக கேடுகள் அனைத்தும், பைபிளை மக்கள் கைகளிலிருந்து மறைத்த போது காணப்பட்டன. ஆனால், மக்கள் பைபிளை படித்து உண்மை எது என்று அறிந்துக்கொண்டபோது, மதத்தின் பெயரால் செய்யப்பட்ட தீய செயல்கள் மறைந்துவிட்டன. 

இஸ்லாமை பொறுத்தமட்டில், சமூக தீய செயல்களுக்கு காரணம் முஸ்லிம்கள் குர்-ஆனை தவறாக புரிந்துக்கொண்டதால் உண்டாகவில்லை. குர்-ஆனே அவைகளை செய்யச் சொல்வதினாலும், முஹம்மதுவின் வாழ்க்கையிலிருந்த சில விஷயங்களை முஸ்லிம்கள் பின்பற்றுவதினாலுமே இந்த சீர் கேடுகள் நடக்கிறது. எனவே, மக்கள் தங்கள் மதத்தை தவறாக புரிந்துக்கொண்டு இருந்தால், அவர்களின் மதத்தில் சீர்திருத்தத்தை கொண்டுவரலாம், ஆனால், இஸ்லாமின் மூல நூலே சமூகத்திற்கு கேடு விளைக்கிறது என்பதினால், இஸ்லாமை சரி செய்ய அல்லது அதில் சீர்த்திருத்தத்தை கொண்டு வரமுடியாது. 

இதனை புரிந்துக்கொண்ட உலகம், இஸ்லாமை விமர்சிப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. உண்மையை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இஸ்லாம் இல்லை, இதற்காகவே அது அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. இஸ்லாமில் சீர்திருத்தம் கொண்டுவர முயற்சித்த இஸ்லாமியர்கள் கொடுமையாக நடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். இனி இஸ்லாமுக்குள் சீர்திருத்தம் கொண்டுவரமுடியாது என்பதை உலகம் அறிந்துக்கொண்டு விமர்சிக்கிறது.

முஸ்லிம்களே நினைத்தாலும், இஸ்லாமில் சீர்திருத்தத்தை கொண்டுவரமுடியாது. பகவத் கீதையில் நான்கு வர்ணங்களை நானே உருவாக்கினேன், அதனை நானே ஒழிக்கவேண்டுமென்றாலும் அது என்னால் முடியாது என்று கிருஷ்ணன் சொன்னது போன்று, அல்லாஹ்வே இனி நினைத்தாலும், இஸ்லாமை சீர்திருத்தமுடியாது, முஸ்லிம்கள் எந்த மூலைக்கு!

கேள்வி 437: பெரும்பான்மை முஸ்லிம்கள் நல்லவர்களாக இருப்பதினால், இஸ்லாமை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா?

பதில் 437: பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் எந்த ஒரு தீய செயல்களில் வன்முறைகளில் ஈடுபடாமல் அமைதியான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலர் மட்டும் தீவிரவாத செயல்களில், வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். உண்மை இப்படி இருக்க  ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறீர்கள்? அதனை பின்பற்றுபவர்களில் 99% (+) சதவிகித மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லவா? இப்படி இருக்க ஏன் இஸ்லாமை விமர்சிக்கிறார்கள்?  என்று முஸ்லிம்கள் கேட்கிறார்கள். 

மேலோட்டமாக பார்த்தால், இவர்களின் வாதத்தில் நியாயம் இருப்பதாக தோன்றும். ஆனால், இந்த வாதம் சரியானதா என்பதை நாம் பரிசோதிக்கவேண்டும், இதனை அறிந்துக்கொள்ள இந்த உதாரணத்தை பாருங்கள்.

அனேக ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களில்  பெரும்பான்மையானவர்களுக்கு புற்று நோய் வருவதில்லை. சிலருக்கு மட்டுமே புகைபிடிப்பதினால் புற்று நோய் வருகிறது. உண்மை இப்படி இருக்க, 

 • மக்கள் புகை பிடிக்கக்கூடாது என்றுச் சொல்லி. சிகரெட் பெட்டிகளில் ஏன் புற்று நோய் பற்றிய எச்சரிக்கை செய்தியை அரசாங்கம் வெளியிடுகிறது?
 • ஆங்காங்கே புகை பிடிப்பதினால் உண்டாகும் ஆபத்தை ஏன் அரசாங்கம் விளம்பரப்படுத்துகிறது?
 • புகைபிடிப்பதற்கு எதிராக ஏன் அனேக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது?
 • புகைபிடிப்பது ஏன் விமர்சிக்கப்படுகிறது?

இப்படி புகைபிடிப்பவர்கள் கேள்வி கேட்டால், இவர்களை நாம் என்னவென்றுச் சொல்வோம்?

இதைப்போலத் தான் இஸ்லாமியர்களின் லாஜிக்கும் இருக்கிறது.  புகை பிடிப்பதினால் பெரும்பான்மையானவர்களுக்கு புற்றுநோய் வருவதில்லை என்பதற்காக, நாம் புகை பிடிப்பதை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா?  புகை பிடிப்பதினால் வரும் ஆபத்துக்களை அலசி ஆராய்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை கொடுக்காமல் இருக்கமுடியுமா?  இதைப்போலவே, அனேகர் அமைதியாக இருக்கிறார்கள் என்பதால், இஸ்லாமை விமர்சிக்காமல் கேள்வி கேட்காமல் இருக்கமுடியாது. உலகம் அல்லல்படுவது அந்த ஒரு சிலர் முலமாகத் தான்.

 • அந்த ஒரு சில தீவிரவாதிகளை உருவாக்குவது யார்?
 • அவர்களை உற்சாகப்படுத்துவது எது?
 • அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட அவர்களுக்கு ஆசை காட்டுவது யார்?

இந்த அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் "இஸ்லாமும், குர்-ஆனும், அல்லாஹ்வும், அவனது இறைத்தூதரும் தான்". எனவே, இஸ்லாமை படித்து கேள்வி கேட்பது சரியானதே.

கேள்வி 438: முதலாவதாக‌ இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் யாருக்கு அதிக உரிமை உள்ளது? 

பதில் 438: அருமையான இஸ்லாமியர்களே,  இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த உங்களுக்கே இஸ்லாமை கேள்விகேட்கவும், அதனை விமர்சிக்கவும் உரிமை உள்ளது.  ஏனென்றால், அது உங்கள் மார்க்கம், அதனை முழுவதுமாக அறிந்துக்கொள்வது உங்கள் உரிமை, இதனை யாரும் தடுக்க முடியாது.  குர்-ஆனை அரபியில் ஓதுங்கள் என்று சொல்லும் உங்கள் அறிஞர்கள், நீங்கள் குர்-ஆனை தமிழில் படிப்பதை தடை செய்யமுடியாது.  உங்கள் மூல நூல்களை நீங்கள் படிக்க முன்வரும் போது, அவைகளை படிக்கவேண்டாம், நாங்கள் சுருக்கமாக உங்களுக்கு அறிவிக்கிறோம், நாங்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே படியுங்கள் என்றுச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை.

நீங்கள் இஸ்லாம் பற்றி கேள்வி கேட்கும் போது, அதிகமாக கேள்விகளை கேட்கவேண்டாம் என்றுச் சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை.   முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை அனேக மூல நூல்களில் நீங்கள் படிக்க முன்வரவேண்டும்.  உங்களை விட உங்கள் முஹம்மதுவின் நடத்தைகள் மேன்மையுள்ளதாக இருக்கின்றனவா என்று நீங்கள் ஆய்வு செய்து பார்க்கவேண்டும். 

நீங்கள் உங்கள் இஸ்லாமை கேள்வி கேட்க மறுத்தால், இஸ்லாமியரல்லாதவர்கள் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள்.  முதலாவது  இஸ்லாமை முழுவதுமாக அறியும் உரிமை உங்களுக்கு உண்டு என்பதை மறக்கவேண்டாம்.

கேள்வி 439: இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்) உரிமை உள்ளதா? 

பதில் 439: அது எப்படி? கிறிஸ்தவர்களுக்கு (யூதர்களுக்கும்) இஸ்லாமை விமர்சிக்க கேள்வி கேட்க அடுத்தபடியான உரிமை உள்ளது என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.  இதற்கு பதில் மிகவும் சுலபமானது, அதாவது கிறிஸ்தவ யூத மார்க்க வேத நூல்களில் உள்ள விவரங்களை குர்-ஆன் எடுத்துக்கொண்டு, அவைகளை மாற்றி எழுதியுள்ளது. மேலும் முஹம்மது தன்னை பைபிளின் வழியாக வந்த தீர்க்கதரிசி என்றும், பைபிளின் தேவன் தான் அல்லாஹ் என்றும் இஸ்லாம் கூறுவதினால், கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் இஸ்லாமை ஆய்வு செய்ய, விமர்சிக்க கேள்வி கேட்க அதிக உரிமை பெறுகிறார்கள். 

மேலும், அனேக பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை குர்-ஆன் மறுப்பதினால், பைபிளை அது எதிர்ப்பதினால், குர்-ஆனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி குறுக்குவிசாரனை செய்ய கிறிஸ்தவர்களுக்கு அதிக உரிமை உள்ளது, இதனை யாரும் கிறிஸ்தவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளமுடியாது. 

கிறிஸ்தவர்கள் இஸ்லாமை விமர்சிக்க உரிமை பெறுகிறார்கள், இதனை குர்‍ஆனே தருகின்றது. குர்‍ஆனில் ஏதாவது சந்தேகம் இருந்தால், யூத கிறிஸ்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறும்படி குர்‍ஆன் முஹம்மதுவிற்கும், முஸ்லிம்களுக்கும் கட்டளையிடவில்லையா?

கிறிஸ்தவர்களே, நம்முடைய பைபிளை விமர்சிக்கும் குர்-ஆனின் உண்மை நிலையை பரிசோதிக்க நமக்கு அதிக உரிமை உள்ளது என்பதை மறக்கவேண்டாம்.  நீங்கள் கண்டுபிடித்த இஸ்லாம் பற்றிய உண்மைகளை இதர மக்களுக்கு அறிவிப்பது உங்கள் மேல் விழுந்த கடமையாகும்.  அநீதியைப் பார்த்து "நீ அநீதியாக செயல்படுகிறாய்" என்றுச் சொல்ல நாம் தயங்கக்கூடாது.  "பொய்யைப் பார்த்து நீ பொய்" என்றுச் சொல்ல நமக்கு  உரிமை உள்ளது.  கிறிஸ்தவர்களே, இஸ்லாம் பற்றி விழிப்புணர்வு அடையுங்கள், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை உண்டாக்குங்கள். 

கேள்வி 440: இஸ்லாமை விமர்சிக்கவும் கேள்வி கேட்கவும் மற்றவர்களுக்கு (முக்கியமாக இந்தியாவில் இந்துக்களுக்கு)   உரிமை உள்ளதா?

பதில் 440: முஸ்லிம்களுக்கு முதலாவது உரிமை உண்டு என்று சொன்னீர்கள், சரி, இதனை ஏற்றுக்கொள்ளலாம், அடுத்தபடியாக கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு என்றுச் சொன்னீர்கள், அதனையும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இங்கு இந்துக்கள் எங்கே வந்தார்கள்? அவர்களுக்கு எங்கேயிருந்து உரிமை வந்தது? என்று சிலர் சந்தேகத்தோடு கேள்வி கேட்கலாம்.  இதற்கும் பதில் மிகவும் சுலமபமானது.  அதாவது, உங்கள் வீட்டில் ஒரு நாள் திருடன் வந்து திருடும் போது  அவனை தடுக்கும் உரிமை  உங்களுக்கு உண்டா இல்லையா? நீங்கள் சாலையில் சென்றுக்கொண்டு இருக்கும் போது, ஒரு திருடன் வந்து உங்கள் பணப்பையை திருடிவிட்டு ஓடினால், அவனை துரத்திக்கொண்டுச் சென்று அவனை பிடித்து உதைத்து, உங்கள் பணத்தை திரும்ப பெரும் உரிமை உங்களுக்கு உண்டா இல்லையா?  உங்கள் பதில் "ஆம், எனக்கு உரிமை உண்டு" என்றுச் சொல்வீர்கள்.

இதே போலத்தான், இஸ்லாமிய தீவிரவாதிகள் நம்மீது வெடிகுண்டு வீசுகிறார்கள்.  வெடிகுண்டுகளை தங்கள் உடல்களில் கட்டிக்கொண்டு, பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும், வெடிக்கச்செய்து நம் குடும்பங்களை அழிக்கிறார்கள். ஓட்டல்களை பிடித்து, மக்களைத் தாக்கி குண்டு மழை பொழிந்து நாட்டில் இரத்த வெள்ளம் ஓடச்செய்கிறார்கள். இப்படி செய்பவர்கள், ஒரு சிலராக இருந்தாலும்,  அந்த ஒரு சிலர் பின்பற்றும் மதத்தை அறிந்துக்கொள்ள நமக்கு உரிமை உண்டு, கேள்வி கேட்க உரிமை உண்டு.   இந்துக்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு.   தீவிரவாதிகளின் செயல்களால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே எல்லாருக்கும் இஸ்லாமை கேள்வி கேட்க உரிமை உண்டு

பெரும்பான்மையான முஸ்லிம்கள் நல்லவர்களாக இருப்பதினால், இஸ்லாமை விமர்சிக்காமல் இருக்கமுடியுமா? அந்த இஸ்லாமை சிலர் தீவிரமாக பின்பற்றுவதினால் தான்,  சிலர் தீவிரவாதிகளாக இருக்கின்றனர், ஆகையால் இஸ்லாம் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படவேண்டும்.  குர்-ஆன் படிக்கப்படவேண்டும், ஹதீஸ்கள் மக்களுக்கு சென்றடையவேண்டும், மக்களுக்கு வரும் உண்மையான கேள்விகளுக்கு பதில்கள் சொல்லப்படவேண்டும்.  முஹம்மதுவின் உண்மையான வாழ்க்கை சரிதை முழுவதுமாக மக்களை சென்றடையவேண்டும். மக்களுக்கு வரும் சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும். விமர்சிப்பவர்கள் தாக்கப்படக்கூடாது.  மதங்கள் விமர்சிக்கப்படவில்லையென்றால், அவைகளால் சமுதாயத்திற்கு ஆபத்து வரும்.  

எல்லா மதங்களும், மனித கோட்பாடுகளும் ஆராயப்படவேண்டும், விமர்சிக்கப்படவேண்டும். அவைகளினால் சமுதாயத்திற்கு கேடு விளையுமானால், அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குத் தரவேண்டும். இதைத் தான் இஸ்லாமைப் பற்றிய விஷயத்தில் உலகம் செய்துக்கொண்டு இருக்கிறது.  ஏன் இஸ்லாம் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது என்று வேதனை அடையும் ஒவ்வொரு முஸ்லிமும் குர்-ஆனை படிக்கவேண்டும், ஹதீஸ்களையும் அறியவேண்டும், முஹம்மதுவின் வாழ்க்கையை படித்து வரும் சந்தேகங்களுக்கு பதிலைக் காண முயலவேண்டும். 

எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நல்லதை பிடித்துக்கொள்ளவேண்டும், தீயதை விட்டுவிடவேண்டும், மற்றவர்களும் அவைகளை விட்டுவிட நம்மால்  முடிந்ததை செய்யவேண்டும். 

தமிழ் படிக்கத் தெரிந்த இஸ்லாமியரே, இவ்வளவு விவரங்களைச் சொன்னபிறகும், உங்கள் வீட்டில் ஒரு தமிழ் குர்-ஆன் வரவில்லையானால், நீங்கள் குர்-ஆனை தமிழில் படிக்க ஆரம்பிக்கவில்லையானால்   உங்கள் இஸ்லாமை, மற்றவர்கள் கேள்வி கேட்பதை உங்களால் தடை செய்யமுடியாது என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் முதலாவது இஸ்லாமை அறிந்துக்கொள்ளுங்கள், கேள்விகளை கேட்டு தெளிவு பெற்றுவிடுங்கள், அப்போது தான் உங்களால் மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில்களை தரமுடியும். 

கேள்வி 441பொதுவான கேள்வி : விமர்சிப்பது சரியா தவறா?

பதில் 441:  உலகில் எதுவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. விமர்சனங்கள் இருந்தால் தான் உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ள வித்தியாசம் புரியும். சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் விஷயங்களை விமர்சிக்கவில்லையென்றால், ஆய்வு செய்யவில்லையென்றால், எப்படி உண்மை வெளியே வரும்.

முதலாவதாக, விமர்சனங்கள் நம் கண்கள் திறக்கப்பட உதவி செய்யும். பல்லாண்டுகாலமாக ஒரு தீய பழக்கத்தை, கோட்பாட்டை நம்பிக்கொண்டு இருப்பவர்களிடம், அதனை ஆய்வு செய்து விமர்சித்தால், நமக்கு அதன் உண்மை நிலை புரியும். உதாரணத்திற்கு, இந்தியாவில் இருந்த சதி, தேவதாசி, சிறுபிள்ளைகள் திருமணம் போன்ற பழக்கங்களைச் சொல்லலாம்.  விமர்சனங்கள் நாம் வேறு கோணத்தில் சில விஷயங்களை பார்க்க உதவும். உண்மையாகவே அந்த விஷயத்தில் நன்மை இருந்தால் அது சரியாக புரியும், அதே நேரத்தில் தீயவைகள் கூட தெரியும்.

இரண்டாவதாக, விமர்சிப்பவர்கள் நம் நன்மையைக் கருதி விமர்சிக்கும் போது, நமக்கு நன்மை உண்டாகும். மேற்கண்ட எடுத்துகாட்டையே எடுத்துக்கொள்வோம். மேற்கண்ட தீய செயல்களை விமர்சித்து, அவைகளிலிருந்து விடுவிக்க உதவிய அனைவரும் நமக்கு நன்மை தானே செய்துள்ளார்கள். உடன்கட்டை ஏறுதலை எதிர்த்து நம் தலைவர்களும், கிறிஸ்தவ மிஷனரிகளும் சண்டை போடாமல் இருந்திருந்தால், இன்று 'இந்துத்துவம் இந்துத்துவம் என்று கோஷமிடும் குடும்பங்களில், ஒரு தாயாரும் உயிரோடு இருந்திருக்கமாட்டார்கள், தங்கள் தந்தையை எரிக்கும் போது, தாயையும் அதில் தள்ளி எரித்திருப்பார்கள்'.

மூன்றாவதாக, நல்ல விமர்சனங்கள் நம் முன்னேற்றத்திற்கு உதவும். பாருங்கள், இந்தியாவில் இப்போது தேவதாசி என்ற பழக்கமும்,உடன்கட்டை ஏறுதலும் இல்லாமல், போய்விட்டது, இது முன்னேற்றமில்லையா?

நான்காவதாக, ஒருவர் நம் மார்க்கத்தை தவறாக விமர்சிக்கும் போது, அவர்களுக்கு எப்படி பதில் கொடுக்கவேண்டும் என்பதை ஆய்வு செய்து, நாம் சரியான வகையில் பதில் சொல்ல அது நமக்கு உதவும். முஸ்லிம்களில் சிலர் செய்வது போன்று, ஒருவர் தவறாக விமர்சனம் செய்தால், உடனே அவரை கொலை செய்வது ஏற்புடையதன்று.

விமர்சனங்கள் நன்மை மட்டுமே செய்யும் என்று நான் சொல்லவில்லை, அதில் தீமையுமுண்டு.  சிலர் வேண்டுமென்றே தீயதாக‌ விமர்சித்தாலும், அவர்களை விட்டு நாம் விலகவேண்டும், அல்லது பதில் சொல்லவேண்டுமே ஒழிய, கொலை செய்யக்கூடாது இங்கு தான் முஸ்லிம்கள் தவறு செய்கிறார்கள்.

கேள்வி 442: இஸ்லாமை விமர்சிக்கவேண்டாம் என்ற முஸ்லிம்களின் வாதத்தில் உண்மையிருக்கிறதா?

பதில் 442: இஸ்லாமை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுச் சொல்வதற்கு முஸ்லிம்களுக்கு உரிமையில்லை.

முஹம்மது தாம் கொண்டு வந்த இஸ்லாமை நிலைநிறுத்த மக்கா மக்களின் தெய்வங்களை விமர்சித்தார், கேலி செய்தார், அவைகள் தெய்வங்கள் இல்லை என்றுச் சொன்னார்.

இதே போன்று, யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அவர்களின் வேதங்களையும் கோட்பாடுகளையும் விமர்சித்தார்.  எனவே, இஸ்லாமை விமர்சிக்க வேண்டாம் என்றுச் சொல்ல எந்த ஒரு முஸ்லிமுக்கும் உரிமை இல்லை.

கேள்வி 443: முஹம்மது மக்காவின் தெய்வங்களை அவமானப்படுத்தவில்லையா? விமர்சிக்கவில்லையா? 

பதில் 443

முஸ்லிம்கள் முஹம்மதுவைப் பற்றி கீழ்கண்டவாறு கூறுவார்கள், ஆனால் உண்மையை மறைத்துக் கூறுவார்கள்.

1) மக்காவில் இருக்கும் போது எங்கள் இறைத்தூதர், அமைதியாக  இறைச்செய்தியை பிரசங்கித்தார்.

2) மக்காவினரின் எதிர்ப்புகளை, கொடுமைகளை சமாளித்துக்கொண்டு வாழ்ந்தார், அதே போல, இதர முஸ்லிம்களும் சகித்துக்கொண்டு இருந்தார்கள். மக்காவினரின் தொல்லைகளுக்கு எல்லை இல்லாமல் போனது.

3) மக்காவினர் வன்முறையில் ஈடுபட்டு, கொலை செய்யும் அளவிற்கு சென்ற போது, அவரும் இதர முஸ்லிம்களும் தங்கள் வீடுகளை விட்டு, மற்ற பொருட்களை விட்டுவிட்டு,  ஒன்றுமில்லாத நிலையில் மதினாவிற்கு சென்றார்கள்.

தேன் கூட்டின் மீது கல்லெறிந்தது முஹம்மது தான்

மக்காவினர்தான் முஹம்மதுவையும், முஸ்லிம்களையும் முதலாவது தொந்தரவு செய்தார்கள் என்பது உண்மையல்ல. முதலாவது முஹம்மது தான் சும்மா இருந்த மக்காவினர் மீது கல்லெறிந்தார், அவர்களை தொந்தரவு செய்தார், அதன் பிறகு தான் அவர்கள் இவருக்கு பிரச்சனை கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனை நான் சொல்லவில்லை, இஸ்லாமிய நூல்கள் சொல்கின்றன. இப்போது அவைகளை பார்ப்போம்.

முஹம்மதுவின் ஆரம்பகால  பிரச்சாரம் பற்றி அல்-தபரி தன்னுடைய சரித்திர நூலில் கீழ்கண்ட விவரங்களை கொடுக்கிறார்:

அ)  முஹம்மது தம்முடைய ஜனங்களுக்கு இறைச்செய்தியை வெளிப்படையாக அறிவித்தார்.  இப்படி அவர் அறிவிக்கும் போது, மக்காவினர் இவரை எதிர்க்க வில்லை. ஆனால், முஹம்மது அவர்களது தெய்வங்களை விமர்சித்து,  மதிப்பு குறைவாக பேசும் போது மக்காவினர் இவரை எதிர்க்க ஆரம்பித்தார்கள்.

ஆ) முஹம்மது இப்படி குறைஷிகளின் தெய்வங்களை விமர்சிக்கும் போது, அவர்கள் நேரடியாக முஹம்மதுவின் தந்தையின் சகோதரர் அபூ தலிப் அவர்களிடம் வந்து கீழ்கண்டவாறு முறையிட்டார்கள். 

"அபூ தலிப் உங்கள் சொந்தக்காரர் [முஹம்மது] எங்கள் தெய்வங்கள் பற்றி தவறாக பேசுகிறார், நம் மதத்தை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார். நம்முடைய கலாச்சாரத்தை ஏளனம் செய்கிறார் மற்றும் நம்முடைய முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்கிறார். அவர் எங்கள் மீதான தன் குற்றச்சாட்டுக்களை நிறுத்திக்கொள்ளும்படி செய்யும்,அல்லது நாங்கள் அவருக்கு தகுந்த பதில் அளிக்க (ஒரு கை பார்க்கும் படி) எங்களுக்கு அனுமதி அளியும். நாங்கள் எப்படி அவருக்கு எதிராக இருக்கிறோமோ, அதே போல நீரும் இருக்கிறீர், உங்களுக்காக வேண்டுமானால் நாங்கள் அவரை பார்த்துக்கொள்கிறோம். Tabari, vol 6, pages 93, 94.

இ) ஆனால், அபூ தலிப் அவர்களோ,  முஹம்மதுவை ஆதரித்து பாதுகாத்து வந்தார்கள்.

ஈ)  தங்களுக்கு நீதி கிடைக்காததால், குறைஷிகள், அபூ தலிப் மரிக்கும் வரை காத்திருந்தார்கள்.

உ) அவர் மரித்ததும், தங்கள் தெய்வங்களை கேவலப்படுத்திய முஹம்மதுவை கொலை செய்ய முயற்சி எடுத்தார்கள். இதிலிருந்து தப்பித்து அவர் மதினாவிற்கு இடம்பெயர்ந்தார்.

முஹம்மதுவிற்கு குறைஷிகள் செய்தது தவறு ஆகும் மேலும் அது அநீதியாகும் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால், கீழ்கண்ட விவரங்களை படித்து அதையும் தவறு என்றும், அநீதி என்றும் உங்களால் சொல்லமுடியுமா?

இன்று மக்காவில் ஒரு புதிய நபி எழும்பினால், இஸ்லாமியர்கள் என்ன செய்வார்கள்?

மக்கா என்பது முஸ்லிம்களின் புனிதஸ்தலம் என்று உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். இந்த காலகட்டத்தில், மக்கா நகரில் பிறந்த ஒருவர், திடீரென்று ஒரு நாள், காபாவின் அருகில் வந்து, கீழ்கண்ட விதமாக கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்:

அ) நான் ஒரு நபியாக இருக்கிறேன்.

ஆ) முஸ்லிம்களாகிய நீங்கள் பின்பற்றும்  தொழுகை முறைகள், ஹஜ் சட்டங்கள் அனைத்தும் தவறானவது. இவைகளை பின் பற்றினால் நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள்.

இ) அல்லாஹ் என்னை நபியாக ஆக்கியுள்ளான். நீங்கள் பின்பற்றும் அனைத்தையும் மாற்றும் படி எனக்கு அறிவித்து உள்ளான். முஹம்மது சொன்னது அனைத்தும் பொய்யானவைகளாகும். அவைகளை பின் பற்றினால் நரகம் நிச்சயம். 

ஈ) எனவே,  என்னை பின் பற்றுங்கள், நான் உங்களுக்கு நேரான வழியை காட்டுவேன்.

மேற்கண்ட விதமாக  ஒருவர் மக்காவில் இன்று பிரச்சாரம் செய்தால், அவனை முஸ்லிம்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள். மேலும் இந்த மனிதர், ஒரு நல்லவராக  நீதியுள்ளவராக இதுவரை வாழ்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம்.   இதர மக்கள் சொல்வதை எதையும் கேட்காமல், தான் சொன்னது தான் உண்மை என்று இவர் வாதிக்கிறார், மேலும், இவரது இறைச்செய்தியைக் கேட்டு சிலர் இவரை நபி என்று நம்பி, இவரை பின் பற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். 

இப்போது இவரைப் பற்றி மக்கா முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்?  என்னைக் கேட்டால், இவர் கூடிய சீக்கிரமே முஸ்லிம்களால் கொல்லப்படுவார் என்றுச் சொல்வேன்.  இது தானே உங்களின் பதிலாகவும் இருக்கும், சரி தானே!

இப்போது சொல்லுங்கள், இவருக்கு முஸ்லிம்கள் செய்வது தவறு இல்லையா? அநீதி இல்லையா?  

அன்று குறைஷிகள், இன்று முஸ்லிம்கள்:

இன்று இவருக்கு முஸ்லிம்கள் என்ன செய்வார்களோ, அதே செயலை அன்று குறைஷிகள் முஹம்மதுவிற்கு செய்ய முடிவு செய்தார்கள்.  இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்று தான்.   அன்று முஹம்மது, இன்று இந்த புதிய நபி. அன்று குறைஷிகள், இன்று முஸ்லிம்கள். அன்று குறைஷிகளின் புனித ஸ்தலம், இன்று முஸ்லிம்களின் புனித ஸ்தலம்.

கேள்வி 444இன்று முஹம்மதுவின் கார்ட்டூனை காட்டியதால் கொலை செய்யப்பட்டது சரியென்றால், அன்று மக்காவின் மக்களை முஹம்மதுவை கொலை செய்ய முயற்சித்தது சரையானது என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?

பதில் 444: முந்தைய கேள்வியின் பதிலை முதலாவது படித்துக்கொள்ளுங்கள்.

முதலாவது குறைஷிகளை தன் வார்த்தைகளால் தாக்கியது முஹம்மது. அவர்களின் தெய்வங்களை கேவலப்படுத்தியது முஹம்மது. அவர்களின் மனதிற்கு துக்கத்தைக் கொடுத்தது முஹம்மது.  முஹம்மது சொன்னது உண்மையோ, பொய்யோ அதுவல்ல பிரச்சனை,  மக்களின் நம்பிக்கையை தாக்கி நாம் பேசும் போது, எதிர்ப்புக்கள் வரத்தான் செய்யும். பல நூற்றாண்டுகளாக உண்மை என்று நம்பிக்கொண்டு வாழும் மக்களிடம் வந்து, உன் மூதாதையர்கள் செய்தது எல்லாம் வீண், அவைகளால் உங்களுக்கு நன்மையில்லை என்றுச் சொன்னால், எந்த  மனுஷன் தான் சும்மா இருப்பான்?  இப்படி எதிர்ப்பு வேண்டாமென்று விரும்புகிறவர்கள், வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவேண்டும். 

ஆக, முஹம்மதுவின் விஷயத்திற்கு வந்தால், தேன் கூட்டின் மீது முதலாவது கல்லெறிந்து அதை கலைத்தது முஹம்மது ஆவார்.  மக்காவினர் அனேக வழிமுறைகள் மூலமாக முஹம்மதுவோடு சமாதானம் செய்துக்கொள்ளலாம் என்று விரும்பினார்கள், அபூ தலிப் அவர்களிடம் முறையிட்டார்கள், ஆனால், நன்மை ஒன்றும் ஏற்படவில்லை, முஹம்மது, அவர்களின் தெய்வங்களை தாக்கி பேசுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. எனவே, இன்று முஸ்லிம் செய்யும்  வேலையை அன்று குறைஷிகள் செய்தார்கள். இன்றுள்ள முஸ்லிம்களும், அன்று இருந்த குறைஷிகளும் ஒரே படகில் தான் பிரயாணப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். 

எனவே, முஹம்மதுவின் செயல்கள் தான், குறைஷிகளை வன்முறையில் ஈடுபடவைத்தது. எனவே, இங்கு குற்றவாளி முஹம்மது தானே தவிர  குறைஷிகள் அல்ல. 

இதனை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா? அவர்களூக்கு நேர்மையிருந்தால்!

கேள்வி 445: குர்‍ஆனின் 98:6ல், யூத கிறிஸ்தவர்களை கேவலமாக விமர்சித்ததால், யாருடையை கழுத்தை வெட்டலாம்?

பதில் 445: இஸ்லாமை நிராகரிக்கின்ற யூத கிறிஸ்தவர்கள் (மற்ற மக்கள் கூட‌ - முஷ்ரிக்குகள்-இறைவனுக்கு இணைவைப்பவர்கள்) உலக படைப்புக்களில் மிகவும் கெட்டவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

குர்‍ஆன் 98:6. நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.

உலக படைப்புக்களில் பன்றிகள் மிகவும் கீழ்தரமானவைகள் என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள், இவைகளைக் காட்டிலும் கெட்டவர்கள் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான்.  எப்படி முஹம்மதுவை விமர்சித்தால், முஸ்லிம்களின் மனது புண்படுவோமோ அதே போன்று உலக மக்களின் மனம் குர்‍ஆனின் இந்த வசனத்தினால் புண்பட்டுள்ளது.

இப்போது முஸ்லிம்கள் என்ன செய்யப்போகிறார்கள்? குர்‍ஆனிலிருந்து இப்படிப்பட்ட விமர்சன வசனங்களை நீக்குவார்களா? அல்லது இதனை இறக்கிய அல்லாஹ்வின் கழுத்தை வெட்டுவார்களா? இதற்கு சாத்தியமில்லை, எனவே அவனது தூதரின் கழுத்தை வெட்டியிருக்கவேண்டுமா?  இன்று முஸ்லிம்களின் வழியில் அன்று யூத கிறிஸ்தவர்களும் நடந்துக்கொண்டு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஒருவேளை மேற்கண்ட வசனத்தை புத்தகங்களில் பதிக்கும் முஸ்லிம்களின் கழுத்துக்களை முஸ்லிம்களைப் போன்று மற்றவர்கள் வெட்டவேண்டுமா? இப்படி வன்முறையில் ஈடுபடுங்கள் என்று நான் மற்றவர்களுக்குச் சொல்லவில்லை, அதற்கு பதிலாக முஸ்லிம்களில் சிலர் செய்யும் காட்டுமிராண்டித் தனத்தை அவர்களுக்கு விளக்குகிறேன் அவ்வளவு தான்.

முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு வேறு நியாயமா?

கேள்வி 446: இயேசுவின் கார்ட்டூன்களை கிறிஸ்தவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? கிறிஸ்தவம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?

பதில் 446: உண்மையாகவே, இயேசுவைப் பற்றி தவறான விமர்சனங்கள் செய்தால் நமக்கு துக்கம் தான் வரும்,இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் இயேசு கற்றுக்கொடுத்த விதத்தில் பதில் அளிப்பார்கள்.  

அமைதியான முறையில் பதில் கொடுப்பார்கள், எதிர்ப்பை தெரிவிப்பார்கள், சட்டத்தின் உதவியுடன் போராடுவார்கள் ஆனால், உயிரை எடுக்கும் "அமைதி மார்க்கம் என்றுச் சொல்லிக்கொள்ளும் மார்க்கத்தை பின்பற்றும் காட்டுமிராண்டிகளின் செயலை" மட்டும் செய்யமாட்டார்கள்.

கிறிஸ்தவமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல.

பைபிளையும், இயேசுவையும் விமர்சிப்பவர்களை கிறிஸ்தவர்கள் கொலை செய்வதில்லை. பைபிளின் மேன்மையை உயர்த்துவதற்கு கிடைத்த வாய்ப்பு என்று கருதி, விமர்சனங்களுக்கு சான்றுகளோடு பதில்களைச் சொல்வார்கள் கிறிஸ்தவர்கள்.

கேள்வி கேட்டால் பதில் சொல்லப்படும், சந்தேகம் எழுப்பினால், சந்தேகம் தீர்த்து வைக்கப்படும். டாவின்ஸிகோட் போன்ற படம் எடுத்தால், புத்தகங்கள் மூலமாகவும், நேர்க்காணல் மூலமாகவும் பதில் சொல்லப்படும்.

முஸ்லிம்களைப் போன்று கிறிஸ்தவர்கள் கொலை செய்வதோ, தற்கொலை தாக்குதலில் ஈடுபடுவதோ, வன்முறைகளில் ஈடுபவதோ கிடையாது. 

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எப்படி கற்றுக்கொடுத்தாரோ அதையே கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள்.

ஒருவர் உங்களை ஏற்கவில்லையென்றால், அவர்களை விட்டுச் செல்லுங்கள், அப்படி செல்லும் போது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியையும் உதரி தள்ளிவிட்டுச் செல்லுங்கள். இது தான் இயேசு கற்றுக்கொடுத்த வழி.

இயேசுவின் கட்டளை:

மத்தேயு 10:14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.

சீடர்களின் கீழ்படிதல்:

அப்போஸ்தலர் 13:51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.

பிரான்ஸ் சார்லி ஹெப்டூ பத்திரிக்கையில் கிறிஸ்தவ கார்ட்டூன்கள்:

2015ம் ஆண்டு முஹம்மதுவின் கார்ட்டூனை வெளியிட்ட சார்லி ஹெப்டூ என்ற பிரான்ஸின் பத்திரிக்கை "நாத்தீகவாதிகளால் நடத்தப்படும் பத்திரிக்கையாகும்". இவர்கள் பல முறை யூத கிறிஸ்தவர்களின் கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளார்கள். பைபிளைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் பல கேலிச்சித்திரங்களை வெளியிட்டுள்ளார்கள்.

இப்படி அவர்கள் செய்யும் போது கிறிஸ்தவர்கள் கண்டிப்பார்கள், தவறாக கார்ட்டூன் வரைந்தால் சரியான பதில்களைக் கொடுப்பார்கள், அவ்வளவுதான், ஆனால் கொலை செய்யமாட்டார்கள்.

கேள்வி 447: விமர்சனங்களை இயேசுவும் முஹம்மதுவும் எப்படி கையாண்டார்க‌ள்

பதில் 447: ஒரு முறை, தங்கள் செய்தியை ஏற்காதவர்களை தண்டிக்கலாமா என்று சீடர்கள் கேட்டபோது,  இயேசு சீடர்களை கடிந்துக்கொண்டார். முஹம்மதுவைப் போன்று மக்களை தண்டிக்கவில்லை.

லூக்கா 9:53. அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

54. அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.

55. அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,

56. மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.

போர் - பகைவர்களை எதிர்கொள்ளுதல்

இயேசு, லூக்கா 9:54,55 ல், அவரை நிராக‌ரித்த‌ ந‌க‌ர‌த்தை நிர்மூல‌மாக்க‌ விரும்பிய‌ த‌ம‌து சீஷ‌ர்க‌ளைக் கடிந்து கொண்டார். மேலும் லூக்கா 22:52 ல், சீஷ‌ர்க‌ள், இயேசுவைக் கைது செய்ய‌ வந்த‌வ‌ர்க‌ளுட‌ன் ச‌ண்டையிட்ட‌ போது அவ‌ர்க‌ளைத் த‌டுத்து அந்த‌ கைக‌ல‌ப்பில் காய‌முற்ற‌ ஒரு ம‌னித‌னைக் குண‌ப்ப‌டுத்தினார்.

முஹம்மது, ஸூரா 9:5 ம‌ற்றும் 9:29 ல், இஸ்லாமியரல்லாதவர்கள் மீது க‌டும் போர் புரியும்படிச் சொல்லியுள்ளார். ஸூரா 9 என்பது முஹம்மது இறுதியாகக் கொடுத்த ஸூராக்களில் ஒன்றாகும். ஆரம்பகாலத்தில் முஹம்மதுவின் கூட்டத்தின‌ர் மிக‌வும் ப‌ல‌வீனமாக‌ இருந்த‌போது, அவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் இசைந்து வாழும்ப‌டி க‌ட்ட‌ளையிட்டு இருந்தார். ஆனால் பிற்கால‌த்தில் முஸ்லீம்கள் ப‌ல‌மடைந்த‌போது, இஸ்லாமை, பலாத்காரத்தின் மூல‌ம் ப‌ர‌ப்ப‌ ஆணையிட்டார். அபுப‌க்க‌ர், உம‌ர் ம‌ற்றும் உத்மான் ஆகியோர் அவ‌ர‌து ஆக்கிர‌மிப்புப் போர்களைத் தொடர்ந்து நடத்தினர். முஹம்மதுவின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் சில‌:

800 யூத‌ ஆண் போர்க் கைதிக‌ளை ப‌டுகொலை செய்த‌து (ஸூரா 33:26 ல் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து):

33:26. இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.

மெக்காவைக் கைப்ப‌ற்றிய‌போது, அவ‌ர், 10 பேர்க‌ளை சிர‌ச்சேத‌ம் செய்யும்ப‌டி ஆணை பிற‌ப்பித்தார். அதில் மூவ‌ர், முன்பு முஹம்மதுவைக் கேலி செய்த‌ அடிமைப் பெண்க‌ள். (பார்க்க‌: "முஹம்மதுவின் வாழ்கை - The Life of Muhammad” பக்கங்கள் 551, 52)

அவர் யூதப் பட்டணமான கைபர் மீது தாக்குதல் நடத்தியபோது, யூதத்தலைவர்களில் ஒருவரை எங்கோ புதைக்கப்பட்டிருந்த பணத்தின் இருப்பிடத்தைச் சொல்லுமாறு சித்திரவதை செய்தார். அந்த மனிதன் அதைச் சொல்ல மறுத்தபோது அவன் மரணிக்கும் தருவாயில் அவனது தலையை வெட்ட ஆணையிட்டார். "முஹம்மதுவின் வாழ்க்கை, (The Life of Muhammad)” ப‌க்க‌ம் 515 ஐப் பார்க்கவும்

விளக்கம்

பல ஆண்டுகளுக்கு முன்பு, தம்மைக் கேலி செய்த பெண் அடிமைகளைக் கொல்லும் காரியத்தில், இயேசுவை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அவர் மிகவும் மேலான செய்திகளையும் நலமான வாழும் முறையினையும் கொண்டு வந்தவர். புதைக்கப்பட்ட பணத்தை வெளிக்கொணர ஒரு மனிதனை சித்திரவதை செய்பவ‌ரென இயேசுவை ஒருவரும் கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது. அவரது வாழ்க்கை பேராசைகள் அற்ற ஒரு வாழ்க்கையாக இருந்தது.

முஹம்மது ஒரு மூர்க்க குணமுடைய‌ நபராக‌ இருக்கக் கூடும். தம்மைக் கேலி செய்த பெண்ண‌டிமைகளைக் கொலை செய்தல் நியாயமானதா? அவர்களைக் கொலை செய்வித்தல் ஏற்புடையதா? அது நாகரீகமானதா அல்லது அறிவுடமைதானா? வெறும் பணத்தை அடைவதற்காக ஒரு மனிதனைச் சித்திரவதை செய்தார் முஹம்மது. இப்படிப்பட்ட நபரை ஒரு சமுதாயம் கீழ்படியவும், அவரை ஒரு முன்னோடியாக ஏற்றுக்கொள்ளவும் இவர் தகுதியுடையவராக இருப்பாரா?

மேலதிக விவரங்களுக்கு கட்டுரைகள்:

முஹம்மதுவும் தீவிரவாதமும் (வன்முறைகளும்)

கேள்வி 448லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒடுக்கப்படும் போது, பட்டினியால் சாகும் போது "எதிர்வினை" காட்டாத முஸ்லிம்கள், ஒரு முஹம்மதுவின் கார்ட்டூனுக்கு மட்டும் ஏன் இந்த "எதிர்வினை", இது நியாயமா?

பதில் 448: சீன அரசு முஸ்லிம்களை ஒடுக்குகிறது என்பதைக் கேட்டும் முஸ்லிம்கள் ஒன்றும் சொல்வதில்லை,  முக்கியமாக துருக்கி அதிபர் ஒன்றும் சொல்லவில்லை, சீனாவோடு நல்ல உறவையே பேணுகின்றார்.  ஆனால், முஹம்மதுவின் கார்ட்டூன்களை நாம் தடை செய்யமுடியாது என்று பிரான்ஸ் அதிபர் சொன்னவுடன், இவருக்கு கோபம் வந்துவிட்டது. லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சாவதைக் காட்டிலும், முஹம்மதுவின் கார்ட்டூன் தான் இவருக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. இதில் அரசியலும் உள்ளது, உலக முஸ்லிம்களின் தலைமை இடமாக சௌதி அரேபியா இருக்கவேண்டும் என்று சௌதி விரும்புகிறது, அந்த இடத்தை துருக்கி பிடிக்கவேண்டும், "தாம் தான் உலக முஸ்லிம்களின் தலைமையகம்" என்ற தோரணையில் துருக்கி அதிபர் செயல்படுகின்றார் என்ற செய்தியும் பல மாதங்களாக அடிபடுகிறது.

சீனா முஸ்லிம்களை ஒடுக்குகிறது, எனவே சீனாவின் பொருட்களை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று சௌதி அரேபியாவும், துருக்கியும் சொல்லவேண்டாமா? ஏன் சொல்வதில்லை? இந்த பைத்தியக்காரத் தனத்தை உலக முஸ்லீம்கள் சிந்திக்கவேண்டாமா?

இதைப் பற்றிய செய்திகள்:

கேள்வி 449: அறியாமலும் நீ முஹம்மதுவை விமர்சிக்கக்கூடாது? 

பதில் 449: இஸ்லாமில் உள்ள பல தீய காரியங்களில் ஒன்று என்னவென்றால், "ஒருவர் அறியாமல் ஒரு முஹம்மது பற்றி தவறாக பேசிவிட்டாலும், அதன் பிறகு மன்னிப்பு கோரினாலும்" தண்டனை நிச்சயம் உண்டு.

பாங்களாதேஷ் நாட்டில் ஒரு குறிப்பிட்ட செய்தித்தாளில் ஒரு சிறிய கார்ட்டூன் மற்றும் ஒரு நகைச்சுவை செய்தி வந்தது. இஸ்லாமியர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் "முஹம்மது" என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்வது அங்கு வழக்கமாக இருந்தது. ஒரு சின்ன பையனிடம் ஒரு முதியவர் (இஸ்லாமிய இமாம்) உன் பெயர் என்ன என்று கேட்டார். அவன் "முஹம்மது" என்ற வார்த்தையை விட்டுவிட்டு, தன் பெயரை மட்டும் சொன்னான், உடனே அந்த முதியவர், பெயருக்கு முன்னால் இருக்கும்  "முஹம்மது" என்ற வார்த்தையை விட்டுவிடாதே, அதோடு சேர்த்து பெயரைச் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார். அதன் பிறகு அந்த பையனிடம் உன் கையில் இருப்பது என்ன என்று கேட்க, அந்த பையன் தன் கையில் பூனையை வைத்து இருந்ததினால், இப்போது கேட்ட அறிவுரையின் படி, "முஹம்மது பூனை" என்று சொல்கிறான். இது தான் கார்ட்டூன் சொல்லும் செய்தி.

en.wikipedia.org/wiki/2007_Bangladesh_cartoon_controversy

news.bbc.co.uk/2/hi/7006528.stm

www.islam-watch.org/Assets/Aalpin_Muhammad_Cartoon.jpg

இந்த கார்ட்டூனை வரைந்தவனும் ஒரு இஸ்லாமியன் தான். இஸ்லாமியர்கள் கொந்தளித்தார்கள், மிகப்பெரிய கலவரம் நடந்தது.  பூனைக்கு முன்னால் எங்கள் நபியின் பெயரைச் சொல்வதா? இது மிகப்பெரிய அவமானம் என்று கலவரத்தில் ஈடுபட்டார்கள். அதை வரைந்தவன் இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை, நான் அறியாமல் இதை செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டான், செய்தித்தாளின் முதலாளியும் மன்னிப்பு கோரினார், இஸ்லாமியர்கள் கேட்டபாடில்லை. எனவே, அரசாங்கம் அந்த வாலிபனை கைது செய்து பாதுகாப்பிற்காக சிறையில் அடைத்தது. மேலும் என்ன நடந்தது என்பதை மேலேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி அறிந்துக்கொள்ளுங்கள்.

கேள்வி 450: உலக நாடுகளில் இஸ்லாமியர்கள் அமைதியாக வாழவேண்டுமென்றால், முஸ்லிம்கள் என்ன செய்யவேண்டும்?

பதில் 450

முதலாவதாக, முஸ்லிம்கள் சீக்கிரமாக கோபம் கொள்வதை தவிர்க்கவேண்டும், ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பதை மறக்கக்கூடாது.

இரண்டாவதாக, தாங்கள் வாழும் நாட்டிலிலுள்ள சட்டதிட்டங்களுக்கு ஏற்ப தங்கள் கோபத்தையும், எதிர்ப்பையும், அமைதியான போராட்டங்கள்  மூலமாக வெளிப்படுத்தவேண்டும்.

மூன்றாவதாக, இஸ்லாமை விமர்சிக்கிறார்கள் என்பதற்காக கொலைகளில், வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது.

நான்காவதாக, இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று வாயில் வடை சுடுவதை விட்டுவிட்டு, செயல்களில் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை உலகிற்கு காட்டவேண்டும்.

ஐந்தாவதாக, 7ம் நூற்றாண்டு பழக்கவழக்கங்களை உங்கள் வீட்டுக்குள்ளேயே நடைமுறைப்படுத்தவேண்டும், ரோட்டுக்கு கொண்டுவரக்கூடாது, உலக மக்கள் சுதாரித்துக்கொண்டார்கள், இனியும் பருப்பு வேகாது.

ஆறாவதாக, சகிப்புத் தன்மையையும், பொறுமையையும் கடைபிடிக்க முயலவேண்டும்.

ஏழாவதாக, உலக மக்களுக்கு கேலிக்கூத்தாக இருக்கும் விஷயங்களை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ள‌க்கூடாது, ஒரு கார்ட்டூனுக்காக உயிரை எடுப்பதை உலக மக்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்?

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், அடுத்த கட்டுரையில் சந்திக்கும் போது வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது மேலதிக விவரங்களை பகிர்ந்துக்கொள்கிறேன்.

தேதி: 1st Nov 2020


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்