இஸ்லாம் – கிறிஸ்தவம் சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000 – முஹம்மது பாகம் 4

(2020 ரமளான் தொடர் கட்டுரைகள்)

முந்தைய தொடர் கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும். இந்த நான்காவது தொடரில் முஹம்மது என்ற தலைப்பில் 30 கேள்வி பதில்களைக் காணலம்.

பாகம் 4  - முஹம்மது  கேள்விகள் பதில்கள் 91 - 120 வரை

கேள்வி 91: முஸ்லிம்கள் முஹம்மதுவை வணங்குகிறார்களா?

பதில் 91: இதற்கு இரண்டு பதில்கள் உண்டு. 

முதலாவது பதில்: முஸ்லிம்களின் கூற்றின்படி, அவர்கள் அல்லாஹ்வைத் தான் தொழுதுக்கொள்கிறார்கள் முஹம்மதுவை அல்ல.

இரண்டாவது பதில்: ஆனால் முஸ்லிம்களை வெளியிலிருந்து காண்கின்றவர்களுக்கு, "முஸ்லிம்கள் முஹம்மதுவை வணங்குகிறார்களோ" என்ற எண்ணம் வருகிறது.

ஏன் முஸ்லிம்களைக் கண்டால் மற்றவர்கள் இப்படி கருதுகிறார்கள் என்று சிறிது யோசிக்கும் போது, "முஸ்லிம்கள் முஹம்மதுவிற்கு கொடுக்கின்ற அளவுக்கு அதிகமான முக்கியத்தும் தான், மற்றவர்களை இப்படி சிந்திக்க வைக்கிறதற்கு" காரணமாக இருக்கிறது. முஸ்லிம்கள் முஹம்மதுவை அணுவணுவாக பின்பற்றுவது, அவரை யாராவது அவமான‍ப்படுத்தும் படி பேசினால், பேசுபவரை கொலை செய்வது அல்லது மிரட்டுவது போன்றவைகளை பார்ப்பவர்கள் இப்படி எண்ணுகிறார்கள்.

மூன்றாவது பதிலும் ஒன்று உள்ளது, இது சாதாரண மக்களுக்கு புலப்படாது. அது என்னவென்றால், குர்‍ஆனையும், ஹதீஸ்களையும் ஆய்வு செய்பவர்கள் "அல்லாஹ்விற்கு சமமாக முஹம்மது கருதப்பட்டு இருக்கிறார்" என்று அவர்கள் கண்டுபிடித்து இருப்பது தான் அது. இதைப் பற்றி ஒரு சில வரிகளில் எழுதமுடியாது, ஆய்வு கட்டுரைகளைத் தான் எழுதமுடியும், அதை எழுதும் போது, உங்களுக்கு அறிமுகம் செய்வேன். அதற்கு முன்பாக, இந்த சிறிய கட்டுரையை ஒரு முறை படித்துப்பாருங்கள்.

கேள்வி 92: முதல் 12 ஆண்டுகள் முஹம்மதுவும் முஸ்லிம்களும் எருசலேமை நோக்கியே தொழுதார்களா?

பதில் 92: ஆம், முஹம்மதுவிற்கு கிபி 610ல் முதல் குர்‍ஆன் வசனம் இறங்கிய காலம் தொடங்கி, அவர் மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த பிறகு கூட, 1.5 ஆண்டுகள் மதினாவில், அவரும் மற்றும் அனைத்து முஸ்லிம்களும் எருசலேமையே தங்கள் கிப்லா (வணக்க திசையாக) வைத்து தொழுகை புரிந்தார்கள்.

கீழ்கண்ட வசனத்தின்  மூலமாக கிப்லா மாற்றப்பட்டது:

ஸூரா 2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.

ஏன் கிப்லா மாற்றப்பட்டது?

ஆரம்பத்தில் "யூதர்களும் கிறிஸ்தவர்களும்" தன்னை நபியாக ஏற்பார்கள் என்று முஹம்மது எதிர்ப்பார்த்தார். மக்காவில் இறங்கிய குர்‍ஆன் வசனங்கள் யூத கிறிஸ்தவர்களுக்கு சாதகமான‌ வசனங்களாகவே பெரும்பான்மையாக இருந்தன.

நீங்கள் என்னதான் செய்தாலும் அற்புதம் செய்துக் காட்டவில்லையென்றால் நாங்கள் உம்மை நம்புவதாக இல்லை என்று ஒரே போடு போட்டார்கள் யூதர்கள். முஹம்மதுவிற்கும், அற்புதங்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. கிறிஸ்தவர்களோ, இயேசுவின் சிலுவை மரணம், மற்றும் உயிர்த்தெழுதலோடு ஃபெவிகால் இணைப்பு போன்று ஒட்டிக்கொண்டு இருந்தார்கள், முஹம்மது என்ன செய்தாலும், யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் இவரை நபியாக ஏற்பதாகத் தெரியவில்லை.

சரி, இனி இவர்களுடைய எருசலேமை நோக்கி ஏன் தொழவேண்டும்? "நாட்டமை தீர்ப்பை மாற்றிச்சொல்லுங்க" என்று அல்லாஹ்வை அடிக்கடி வேண்டிக்கொள்ள, இறங்கியது குர்‍ஆன் 2:144, மாறியது கிப்லா.

கேள்வி 93: முஹம்மது ஆபிரகாமின் மகனாகிய இஸ்மாவேலின் சந்ததியா?

பதில் 93: முஹம்மது இஸ்மாயீலின் (இஸ்மவேலின்) சந்ததியில் வந்தவர் அல்ல, இதற்கு சரித்திர ஆதாரங்கள் ஒன்றுமில்லை. இதுவரை கிடைத்துள்ள சான்றுகளின் படி, முஹம்மதுவிற்கும் இஸ்மவேலுக்கும் சம்மந்தமில்லை.

பல கிறிஸ்தவ தலைவர்கள், ஊழியர்கள் கூட இதனை அறியாமல், ஆபிரகாமின்/ஆகாரின் சந்ததி தான் முஹம்மது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் மீது கோபம் கொள்ளமுடியாது, ஏனென்றால், பெரும்பான்மையானவர்கள் சொல்வதைத் தான் அனேகர் நம்புகிறார்கள், ஆனால் ஆய்வுகள் வேறுவகையில் நம்மை கொண்டுச் செல்கிறது.

இந்த தலைப்பு பற்றிய யூடியூப் வீடியோக்கள்(தமிழ்) மற்றும் கட்டுரைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் பார்க்கலாம்:

 

கேள்வி 94: முஹம்மது அவர்கள் உயிரோடு இருக்கும் போது, ஹதீஸ்கள் எழுத்துவடிவில் கொண்டு வரப்பட்டதா?

பதில் 94: இல்லை, முஹம்மது அவர்கள் இன்று நாம் பயன்படுத்தும் எந்த ஒரு ஹதீஸ் தொகுப்பையும் அவர் பார்க்கவில்லை. அவரது மரணத்திற்கு 200 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஹதீஸ்கள் எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டது. அதற்கு இடைப்பட்ட காலத்தில் சிலர் சில ஹதீஸ்களை எழுதிவைத்திருக்கலாம், ஆனால், அவைகளை முழுவதுமாக தொகுத்து வைத்தவர்கள் புகாரி போன்றவர்கள் தான்.

ஹதீஸ்கள் பற்றிய காலக்கட்ட விவரங்களை கீழ்கண்ட கட்டுரையில் படங்களின் மூலமாக சுலபமாக அறிந்துக்கொள்ளலாம்.

 

கேள்வி 95: முஹம்மதுவிற்கு எழுத படிக்க தெரியுமா?

பதில் 95: முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி முஹம்மதுவிற்கு எழுதப்படிக்கத்தெரியாது. ஆனால், ஹதிஸ்களை ஆய்வு செய்யும் போது, முஹம்மதுவிற்கு குறைந்த பட்சம் எழுதவும்,  படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று அறியமுடிகின்றது.

ஸஹீஹ் புகாரி நூலில், எண் 7366ல் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியை கவனித்தால், முஹம்மதுவிற்கு எழுதப்படிக்க தெரியும் என்று புரியும்.

7366. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களின் இல்லத்தில் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'வாருங்கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள். உமர்(ரலி) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித் தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) எங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்' என்றார்கள். வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபட்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், '(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொடுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள். வேறு சிலர் உமர்(ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்' என்றார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), 'மக்கள் கருத்து வேறுபட்டு கூச்சலிட்டுக் கொண்டதால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்' என்று கூறுவார்கள்.

உண்மையாகவே, முஹம்மதுவிற்கு எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருந்தால், 'நான் சொல்வதை கேளுங்கள்' என்று சொல்லி இருப்பார், எழுதித்தருகிறேன் என்றுச் சொல்லமாட்டார்.

இன்னும் சில சான்றுகள் உள்ளன, அவைகளை தேவையான கேள்விக்கு பதிலாக காண்போம்.

 

கேள்வி  96: முஹம்மதுவிற்கு ஒரு யூதப்பெண் விஷம் வைத்தை மாமிசத்தை கொடுத்தாளாமே! இது உண்மையா?

பதில் 96: ஆம், ஒரு யூதப்பெண் விஷயம் தோய்த்த உணவை முஹம்மதுவிற்கு கொடுத்தாள்.

இதனை ஸஹீஹ் புகாரி நூலில் காணலாம்: எண்: 4428, 4249 & 3169 

4428. ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது' என்று கூறினார்கள்.

4249. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று அன்பளிப்பாக தரப்பட்டது.

மேலும் பார்க்க எண்: 3169.

கேள்வி 97: முஹம்மதுவின் மரணம் எதனால் உண்டானது? இயற்கையா? விஷமா? வியாதியா?

பதில் 97: ஒரு யூதப்பெண் கொடுத்த உணவை முஹம்மது உண்டதால், அது அவரை சிறிது சிறிதாக வேதனையை உண்டாக்கி கொன்றது. இதனை புகாரி ஹதீஸில் காணலாம். மேற்கண்ட கேள்விக்கான பதிலையும் படிக்கவும்.

இந்த ஹதீஸை முஹம்மதுவின் பிரியமான மனைவியாகிய ஆயிஷா அவர்கள் அறிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

4428. ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது' என்று கூறினார்கள்.

 

கேள்வி 98: எத்தனையாவது வயதில் முஹம்மது தன்னை நபி என்று பிரகடணப்படுத்தினார்?

பதில் 98: முஹம்மது தம்முடைய 40வது வயதில் தம்மை நபியாக பிரகடணப்படுத்தினார்.

கேள்வி 99: முஹம்மது எப்போது மரித்தார்?

பதில் 99: முஹம்மது தம்முடைய 63வது வயதில் மரித்தார்.  அவர் மரித்த சமயத்தில், பெரும்பான்மையான அரேபிய தீபகர்ப்பத்தை தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருந்தார்.

கேள்வி 100: முஹம்மது எத்தனை யுத்தங்களில் பங்கு பெற்றார்?

பதில் 100: இந்த கேள்விக்கு அனேக பதில்கள் உள்ளன. யாரிடம் இந்த கேள்வியை கேட்போமோ, அவரைப் பொருத்து எண்ணிக்கை அமையும்.

சராசரி முஸ்லிமின் பதில்:

ஒரு சராசரி முஸ்லிமிடம் இந்த கேள்வியை கெட்டால், அவர் முழிப்பார். மனதுக்குள் "இது என்ன கேள்வி?", நம் நபி ஒரு யுத்தமும் செய்யவில்லையே என்று எண்ணுவார். இன்னும் சிலர், "ஒன்று அல்லது இரண்டு" என்றுச் சொல்லுவார்கள்.

புகாரி ஹதீஸின்படி 19 போர்களில் முஹம்மது பங்கு பெற்றார்:

புகாரி ஹதீஸ்: 3949. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்

நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள்.

சரித்திர புள்ளி விவரங்கள் (மொத்தம் 95 வன்முறைகள்): 

கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும். முஹம்மது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில் அவர் கட்டளையிட்ட‌ வன்முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்தம் 95 வன்முறைகள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

10 ஆண்டுகளில், 95 வன்முறைகள் என்றால், ஒரு ஆண்டுக்கு 9.5 வன்முறைகள் என்று கணக்கு வருகின்றது. புரியும் படி சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கு (ஒன்றரை மாதத்தில்) ஒரு வன்முறையில் ஈடுபட்டுள்ளார். 

கீழ்கண்ட விக்கிபீடியா  தொடுப்பில் முஹம்மதுவின் வன்முறைச் செயல்கள் 95ஐ வரிசைப் படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நான் ஹிஜ்ரி ஆண்டு வரிசையில் தயாரித்துள்ளேன்.  கிழேயுள்ள அட்டவணையை காணவும்.

 

Source: List of expeditions of Muhammad – Wikipedia 

முஹம்மது மட்டும் பங்கு பெற்ற வன்முறைகளை கூட்டினால், அது 28 வருகின்றது. அதாவது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில், முஹம்மது பங்கு பெற்ற வன்முறைகள் 28 ஆகும். மீதமுள்ள 67 வன்முறைகளில் முஹம்மது பங்கு பெறவில்லை, தம்முடைய சஹாபாக்களின் தலைமையில் சண்டையிடும் படி கட்டளையிட்டார்.

மூலம்: முஹம்மது முதல் சிலுவைப்போர் வரை - வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள்: பாகம் 3

கேள்வி 101: முஹம்மதுவின் தாய் தந்தை பெயர்கள் என்ன?

பதில் 101: முஹம்மதுவின் தாயின் பெயர் அமீனா மற்றும் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் ஆகும்.

கேள்வி 102: முஹம்மது பழைய ஏற்பாட்டையோ, புதிய ஏற்பாட்டையோ பார்த்திருக்கின்றாரா?

பதில் 102: முஹம்மது பழைய ஏற்பாட்டின் ஐந்தாகமங்களை(தோராவை) பார்த்ததாக ஹதீஸ்கள் சொல்கின்றன. முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பு, மக்காவிலிருந்து சிரியாவிற்கு வியாபார பயணம் செய்யும் போது, அவர் அனேக கிறிஸ்தவர்களை, யூதர்களைக் கண்டு பேசியுள்ளார். அந்த நேரங்களில் அவர் புதிய ஏற்பாட்டையோ, அல்லது அதன்  ஒரு பகுதியையோ பார்த்து இருந்திருக்கலாம். அந்த நேரத்தில் அவர் பைபிளை அரபியில் கண்டு இருந்திருந்தால், ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு மக்காவிற்கு வந்திருப்பார், இப்படி நடந்திருந்தால், உலகம் இன்று காண்பது போன்று இல்லாமல், வேறு மாதிரியாக‌ இருந்திருக்கும்.

சரியான நேரத்தில் சரியான மொழியாக்கங்கள் இல்லாமல்போனால், விளைவுகள் படுமோசமாக இருக்கும் என்பதை உணர்ந்ததால் தான், நான் தமிழ் மொழியில் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து பதிக்க ஆரம்பித்தேன். தமிழ் மொழியில் இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கப்படவேண்டும்.

கேள்வி 103: கிறிஸ்தவர்கள் முஹம்மதுவை நபி (தீர்க்கதரிசி) என்று நம்புகிறார்களா?

பதில் 103: இஸ்லாம் பற்றி அடிப்படை அறிவு கிடைக்காதவர்கள், முஹம்மதுவை ஒரு  நபி / தீர்க்கதரிசி என்று நம்புவார்கள். இஸ்லாம் பற்றி அறிந்தவர்கள் 'முஹம்மது ஒரு கள்ள நபி என்று' நம்புவார்கள். முஹம்மதுவை பைபிளின் நபிமார்களின் வரிசையில் வைத்து பார்க்க பைபிள் அனுமதிப்பதில்லை. 

"முஹம்மது ஏன் ஒரு தீர்க்கதரிசி ஆகமுடியாது" என்று கிறிஸ்தவர்கள் கருதுகிறார்கள் என்ற கட்டுரையை கீழே கொடுத்துள்ளேன். இந்த கட்டுரையில் ஒவ்வொரு காரணத்திற்கும் குர்‍ஆன், ஹதீஸ்கள் மற்றும் பைபிளிலிருந்து சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்களில் இதுவரை படிக்காத விவரங்கள் இந்த கட்டுரையில் உள்ளது.

கேள்வி 104: எழுத படிக்க தெரியாத ஒருவர் சிறப்பாக வியாபாரம் செய்யமுடியுமா? அப்படியானால், முஹம்மது எப்படி வியாபாரத்தை சிறப்பாகச் செய்தார்?

பதில் 104: எழுதுக்களை பேப்பரில் எழுதமுடியவில்லையென்றாலும், எழுதியதை கூட்டிகூட்டி படிக்கமுடிந்தவரால் தான் சிறப்பாக வியாபாரம் செய்யமுடியும்.

வியாபாரம் என்று வந்தால், கூட்டல் கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற குறைந்தபட்ச கணக்கு போடத்தெரியவேண்டும். வியாபார ஒப்பந்தங்கள் எழுதப்படும் போது, சரியாகத் தான் எழுதுகின்றார்களா? அல்லது ஏமாற்றுகின்றாரா என்பதை எப்படி அறியமுடியும்? எந்நேரமும் ஒரு படித்தவரை கூட வைத்துக்கொள்ளலாம், ஆனால் அந்த நபரே இவரை ஏமாற்றமாட்டார் என்று நம்புவது எப்படி? 

குறைந்தபட்சம் முஹம்மதுவிற்கு கூட்டிக்கூட்டி படிக்கவோ, எழுதவோ தெரிந்திருக்கவேண்டும், மேலும் கணக்கு விஷயத்தில் அவருக்கு கூட்டல் கழித்தல் பெருக்கல், வகுத்தல் தெரிந்திருக்கவேண்டும்.

கேள்வி 105: முஹம்மதுவின் பெயர் குர்‍ஆனில் எத்தனை முறை வருகிறது?

பதில் 105: முஹம்மது என்ற பெயர் குர்‍ஆனில் 4 முறை வருகிறது, அஹமது என்ற பெயர் ஒரு முறை வருகிறது. 

கீழ்கண்ட வசனங்களை பார்க்கவும்:

  1. ஸூரா 3:144 - முஹம்மது
  2. ஸூரா 33:40 - முஹம்மது
  3. ஸூரா 47:2 - முஹம்மது
  4. ஸூரா 48:29 - முஹம்மது
  5. ஸூரா 61:6 - அஹமது

 

கேள்வி 106: முஹம்மதுவை 100% முஸ்லிம்கள் பின்பற்ற முடியுமா?

பதில் 106: முஹம்மதுவை முஸ்லிம்கள் 100% பின்பற்ற முடியாது.

 

கேள்வி 107: முஹம்மதுவை 100% முஸ்லிம்கள் பின்பற்றும்படி குர்‍ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றதா?

பதில் 107: இல்லை, முஸ்லிம்கள் முஹம்மதுவை 100% பின்பற்றக்கூடாது என்பதில் குர்‍ஆன் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது.

முஸ்லிம்களுக்கு ஒரு வகையான கட்டளைகள், முஹம்மதுவிற்கு வேறு வகையான கட்டளைகள் குர்‍ஆனில் அல்லாஹ் கொடுத்துள்ளான். எப்போதெல்லாம் முஹம்மதுவிற்கு மட்டும் தனிப்பட்ட சலுகைளை கொடுக்கும்போது, இக்கட்டளைகள் முஹம்மதுவிற்கு பிரத்யோகமாக கொடுக்கப்பட்டவை, முஸ்லிம்களுக்கு இல்லை என்று அல்லாஹ் கூறிவிடுகின்றான். அப்படியானால், அந்த கட்டளைகளை முஸ்லிம்கள் பின்பற்றக்கூடாது என்று தானே பொருள், அதன்படி முஹம்மதுவை முஸ்லிம்கள் 100% பின்பற்றமுடியாதே!

இது முஸ்லிம்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட கட்டளை (முஹம்மது இக்கட்டளையை பின்பற்றமுடியாது):

4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

முஹம்மதுவிற்கு  மட்டும் கொடுக்கப்பட்ட விதி வில‌க்கு (முஸ்லிம்கள் இக்கட்டளையை பின்பற்றமுடியாது):

33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

கேள்வி 108: முஹம்மது மக்காவில் மதினாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

பதில் 108: முஹம்மது மக்காவில் 12-13 ஆண்டுகள், மதினாவில் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்.

கேள்வி 109: முஹம்மது மது அருந்தினாரா?

பதில் 109: மது தடை சட்டம் வரும் வரை முஹம்மதுவும், முஸ்லிம்களும் நன்றாக மது அருந்தினார்கள்.

எந்த அளவிற்கு மது அருந்தினார்கள் என்றால், அவர்கள் தொழுகையில் போதை தலைக்கு ஏறி, உளர ஆரம்பித்துவிட்டார்கள், அந்த அளவிற்கு ‘குடி’மக்களாக முஸ்லிம்கள் இருந்தார்கள். 

கீழ்கண்ட ஸூராவை கவனிக்கவும், நான் நான்கு தமிழாக்கங்களில் கொடுத்துள்ளேன், படியுங்கள், தெளிவு உண்டாகும்:

டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்: 

4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; . . ..

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

4:43. நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையாயிருக்கும் சமயத்தில் தொழுகைக்குச் செல்லாதீர்கள். அன்றி, நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையிலும் (தொழுகைக்குச் செல்லாதீர்கள்.). . .

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

4:43. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையோடிருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்; நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதை அறிகின்ற போதுதான் தொழ வேண்டும்.. . 

மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:

4:43. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் போதையுடையோராகயிருக்கும் நிலையில், நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்து கொள்ளும் வரை, தொழுகைக்கு நெருங்காதீர்கள்,  . . .

கேள்வி 110: முஹம்மதுவிற்கு மிகவும் பிரியமான மனைவி யார்?

பதில் 110: முஹம்மதுவிற்கு அவரது மூன்றாவது மனைவியாகிய ஆயிஷா என்றால் மிகவும் பிரியம். 

ஏன் இந்த மனைவியென்றால் அவருக்கு பிரியம்? யாருக்குத் தெரியும், அவரை தான் கேட்கவேண்டும்.

ஒரு வேளை, இவருக்கு 53 வயது இருக்கும் போது, ஆயிஷா அவர்களுக்கு 9 வயது இருக்கும் போது திருமணமானதால், இவர் அவருக்கு பிரியமானவராக இருக்கலாம்.

இரண்டாவதாக, இவர் திருமணம் செய்த மற்ற மனைவிகள் அனைவரும், ஏற்கனவே திருமணமாகி கணவரோடு வாழ்ந்தவர்கள், ஆயிஷா அவர்கள் மட்டும் தான் திருமணம் செய்யும் போது கன்னியாக (உண்மையைச் சொன்னால், சிறுமியாக) இருந்தார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லாஹ் நோஸ் த பெஸ்ட்.

கேள்வி 111: முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் நபி என்று அடைமொழியோடு அழைக்கலாமா?

பதில் 111: முஹம்மதுவை கள்ளத்தீர்க்கதரிசி என்று பைபிள் அடையாளப்படுத்தும் போது, முஹம்மதுவின் பெயரை குறிப்பிடும் போது, 'நபி முஹம்மது அல்லது தீர்க்கதரிசி முஹம்மது' என்று கிறிஸ்தவர்கள் சொல்லக்கூடாது.

யாராவது அப்படி அழைத்தால், அதற்கு காரணம் பழக்கதோஷத்தால் 'முஹம்மது நபி' என்று அழைத்துவிடுவதுண்டு, அல்லது தங்கள் முஸ்லிம் நண்பர்களின் மனதை ஏன் புண்படுத்தவேண்டும் என்று நினைத்து 'முஹம்மது நபி' என்று அழைப்பதுண்டு.

இந்த இரண்டும் இல்லாமல் சிலர், அறியாமையினால் 'முஹம்மது நபி' என்றுச் சொன்னால் தப்பில்லை என்று நினைப்பவர்கள் இருந்தால், அவர்களுக்காகத் தான் இந்த தொடர் கேள்வி பதில்கள் 1000.

கேள்வி 112: முஹம்மதுவின் பெயரை உச்சரிக்கும் போது ஏன் முஸ்லிம்கள் (ஸல்) அல்லது அவர் மீது சாந்தி உண்டாகட்டும் என்றுச் சொல்கிறார்கள்?

பதில் 112: அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இப்படி அவர் மீது கூறுங்கள் என்றுச் சொன்னதால், முஸ்லிம்கள் 'அவர் மீது சாந்தி உண்டாகட்டும்' என்றுச் சொல்கிறார்கள்.

ஸூரா 33:56. இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

கேள்வி 113: முஹம்மது ஒரு ஆன்மீகத்தலைவரா? அல்லது ஆட்சித்தலைவரா?

பதில் 113: அவர் இரண்டு பதவிகளையும் வகிக்கிறார்.

இஸ்லாமிய நாடுகளில், மார்க்க தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கும் இதுவும் ஒரு காரணமாகும். பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இல்லாத அதிகாரம் ஆன்மீக தலைவருக்கு முஸ்லிம் நாடுகளில் இருப்பதும் இதனால் தான்.

கேள்வி 114: முஹம்மது மதினாவிற்கு உயிர் தப்பிச் சென்ற போது (ஹிஜ்ரத்), அவரோடு கூடச் சென்ற அவரது தோழர் யார்? 

பதில் 114: முஹம்மதுவோடு உயிர் தப்பி மதினாவிற்கு (ஹிஜ்ரத்) செய்தது அவரது தோழர், அபூ பக்கர் ஆவார். இவர் தான் முஹம்மதுவிற்கு பிறகு முதல் கலிஃபாவாக பதவி ஏற்றார்.

கேள்வி 115: எந்த குகையில் முஹம்மதுவிற்கு முதலாவது குர்‍ஆன் வசனம் இறங்கியதாக நம்பப்படுகின்றது?

பதில் 115: ஹிரா என்ற குகையில் அவருக்கு முதலாவது குர்‍ஆன் வசனம் இறங்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.

கேள்வி 116: மக்காவில் இருந்த போது  முஹம்மது எத்தனை போர்களை புரிந்தார்?

பதில் 116: இல்லை, மக்காவில் இருந்த போது முஹம்மது ஒரு போரிலும் ஈடுபடவில்லை, பல தொல்லைகளை அவர் மக்கா மக்களிடம் அனுபவித்தார்.

கேள்வி 117: ஏன் அவர் மக்காவில் இருந்த போது எதிர்த்து சண்டையிடவில்லை? போரிடவில்லை?

பதில் 117: ஒரு தனி மனிதன் எப்படி சண்டையிடமுடியும்? எதிரி பலமுள்ளவனாக இருக்கும் போது, எப்படி அவர் எதிர்த்து போராடமுடியும்?

முஹம்மது கிட்டத்தட்ட 12-13 ஆண்டுகள் இஸ்லாமிய தாவா பணி செய்து, சில நூறு மக்களை மட்டுமே முஸ்லிம்களாக சம்பாதிக்கமுடிந்தது. ஆனால், அவரது எதிரிகள் அனேகராக இருந்தார்களே! எனவே, மக்காவில் முஹம்மது அமைதிப் புறாவாக வலம் வந்தார்.  அடிப்பவனை திருப்பி அடிக்கவில்லை, அடிக்கவில்லை என்றுச் சொல்வதைவிட, திருப்பி அடிக்கமுடியவில்லை என்றுச் சொல்வது தான் சரியானதாக இருக்கும். யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் காலம் வரும் என்பதை அவர் அறிந்திருந்தாரோ என்னவோ. அவரது உயிரை எடுக்க முடிவு செய்தபோது, பயந்து ஹிஜ்ரத் செய்தார்.

அதிகார பலமும், ஆள் பலமும் மதினாவில் சேர்ந்தவுடன், அனைவரை விளாசினார், தலைகள் உருண்டன, வியாபாரக்கூட்டங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பழிக்கு பழி கூட்டுவட்டியோடு வசூல் செய்தார், போதாகுறைக்கு மற்ற நாடுகளும் டிவிடெண்ட் கொடுக்கவேண்டியதாக ஆகிவிட்டது.

மக்காவில் முஹம்மது ஒரு சமாதானவாதி, மதினாவில் முஹம்மது ஒரு சர்வாதிகாரி.

கேள்வி 118: முஹம்மது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார் என்கிறார்களே, இது உண்மையா?

பதில் 118: இருநூறு சதவிகிதம் உண்மை.

பார்க்க ஸூரா 33:37:

33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

கேள்வி 119: வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், என்று பைபிள் சொல்வது முஹம்மதுவிற்கு பொருந்துமா? 

பதில் 119: நிச்சயமாக பொருந்தும் ஏனென்றால், முஹம்மது இயேசுவைப் பற்றி வேறு ஒரு சுவிசேஷம் சொன்னார், அதனால், முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் எழுதிவைத்த வசனங்கள் முஹம்மது மீது நிறைவெறியது:

பொது மொழிப்பெயர்ப்பில் முதலாவது படியுங்கள்: எவ்வளவு அழகாக முஹம்மதுவிற்கு பொருந்துகிறது என்பதை கவனியுங்கள்.

கலாத்தியர் 1:7-9:

7 உண்மையில் வேறு ஒரு நற்செய்தி என்பது இல்லை. ஆனால் சிலர் உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை மாற்றிவிட விரும்புகிறார்கள். 8 நாங்கள் உங்களுக்கு உண்மையான நற்செய்தியைக் கூறினோம். எனவே நாங்களோ அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தேவதூதனோ வேறொரு நற்செய்தியை உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும். 9 நான் ஏற்கெனவே இதனைச் சொன்னேன். அதனை இப்போது மறுபடியும் கூறுகின்றேன். நீங்கள் ஏற்கெனவே உண்மையான நற்செய்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழியை எவரேனும் உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும்.

பைபிள் சொசைடி மொழியாக்கம்:

7. வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. 8. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 9. முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

கேள்வி 120: பைபிளின் படி முஹம்மது யார்?

பதில் 120: பைபிளின் அடிப்படையில் ஆய்வு செய்தால், முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஆவார். பழைய ஏற்பாட்டின் படியும், புதிய ஏற்பாட்டின் படியும் முஹம்மது யெகோவா தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி அல்ல.

அடுத்த தொடரில் இன்னொரு தலைப்பி 30 கேள்வி பதில்களைக் காண்போம்.

தேதி: 28th April 2020


2020 ரமளான் தொடர் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள் பக்கம்