ரமளான் நாள் 12 - ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

['அன்புள்ள தம்பிக்கு' உமர் எழுதிய முந்தைய கடிதங்களை படிக்க இங்கு சொடுக்கவும்]

அன்புள்ள தம்பிக்கு,

உனக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

உன் கடிதங்கள் கண்டு, மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். நீ ஒளிவு மறைவின்றி நேர்மையுடன் உன் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்கின்றபடியால் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  நேற்று நீ எழுதிய கடிதத்தில் "முஹம்மது ஒரு நல்ல வழிகாட்டி, அவரை நீங்கள் ஏன் பின்பற்றக்கூடாது?" என்று என்னிடத்தில் கேள்வி எழுப்பியிருந்தாய்.  தம்பி, நல்ல மனிதர்களை பின் பற்றுவதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நீ சொல்வது உண்மையாக இருக்குமானால், முஹம்மதுவை பின்பற்ற எனக்கு எந்த ஒரு தடையும் இல்லை. ஆனால், உண்மை உனக்கு விரோதமாக இருக்கிறது தம்பி.

நான் இஸ்லாமிய நூல்களை படித்தேன், ஹதீஸ்களை படித்தேன், குர்-ஆனை அனேக மொழியாக்கங்களில் படித்துள்ளேன், மேலும் இஸ்லாமிய விரிவுரையாளர்களின் கருத்துக்களையும் படித்துள்ளேன்.  என் தம்பி பின்பற்றும் வழிகாட்டியை பின் பற்ற எனக்கும் ஆவளாகத் தான்  உள்ளது, ஆனால், அந்த வழிகாட்டியின் முழு வாழ்க்கை வரலாறை படித்த பிறகு, என் எண்ணங்களை மாற்றிக்கொண்டேன். உடன் பிறந்த தம்பியின் ஆசையை நிறைவேற்றுவதை விட நேர்மையும், ஒழுக்கவும், உண்மையும், சத்தியமும் உயர்ந்தது. தம்பிக்காக உயிரை விடலாம், ஆனால், அநீதிக்கும் பொய்யுக்கும் வக்காளத்து வாங்கமுடியாதே!  எனவே உன் விருப்பத்தை நான் நிறைவேற்ற முடியாமல் போகிறதே என்று வருத்தப்படுகிறேன். நாம் பின்பற்றக்கூடிய நிலையில் முஹம்மதுவின் வாழ்க்கை இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே ஒரு விஷயத்தை உனக்கு முன்பாக நான் வைக்க விரும்புகிறேன்.

இயேசுவிடம் சிறு பிள்ளைகள் வருவதை சீடர்கள் தடுத்தபோது, அவர்களை தடை செய்யாதீர்கள், பரலோக இராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது என்றுச் சொல்லி, அந்த பிள்ளைகள் மீது தன் கரங்களை வைத்து ஆசீர்வதித்து அனுப்பினார். தன்னுடைய சீடர்களுக்கு பாடம் புகட்ட ஒரு சிறு பிள்ளையை காட்டி, இதோ இவர்களைப் போல நீங்கள் மாறாவிட்டால் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்றார். சிறு பிள்ளைகளைப்போல நாமும் கள்ளம் கபடமில்லாமல் இருக்கவேண்டும் என்று இயேசு சுட்டிக்காட்டினார்.  ஆனால், உன் வழிகாட்டியாகிய முஹம்மது தனக்கு 50 வயதாகும் போது, 6 வயது ஆயிஷா என்ற ஒரு சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள  நிச்சயம் புரிந்தார், அதன் பிறகு தனக்கு 53 வயதாகும் போது, கள்ளம் கபடமற்ற 9 வயதான அந்த சிறுமியை திருமணம் செய்துக்கொண்டு, அந்த சிறுமியோடு தாம்பத்திய உறவில் ஈடுபட்டார்.

எனக்கு என்னவோ இந்த செயல் ஒரு ஆன்மீக தலைவர் செய்யக்கூடிய செயலாக தோன்றவில்லை. இதனை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. 9 வயது சிறுமியை 53 வயதுடைய ஆண் எப்படி கட்டிலுக்கு அழைக்கலாம்?  நாம் அவ்வப்போது செய்தித்தாள்களில் "பள்ளிக்கூடம் சென்றுக்கொண்டு இருந்த சிறுமியை வழிமறைத்து பலாத்காரம் செய்தார்கள், கற்பழித்தார்கள்" என்ற செய்திகளை வாசிக்கிறோம். இப்படி வாசிக்கும் போது ஏதோ மனதில் இனம் புரியாத வேதனை ஆட்கொள்கிறது, உலகத்தின் மீது ஒரு வகையான வெறுப்பு உண்டாகிறது. ஏன் இப்படி சில ஆண்கள் நடந்துக்கொள்கிறார்கள். தங்களுக்கு காமம் அதிகமாக இருந்தால் விபச்சார விடுதிக்குச் சென்று சாகவேண்டியது தானே? ஏன் இப்படி விளையாடவேண்டிய வயதில் இருக்கும் சிறுமிகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பலவாறு கேள்விகள் எழுகின்றன.

உன்னுடைய வழிகாட்டியாகிய முஹம்மது தனக்கு 53 வயதாகும் போது, ஒரு 9 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டது எந்த வகையில் நியாயமாகும்.  அவர் அன்று செய்த இந்த காரியத்தினால், இன்று இஸ்லாமிய உலகில் படிக்கவேண்டிய வயதில் இருக்கும் சிறுமிகள் தங்கள் வயதான கணவர்களுக்கு பிள்ளைகளை பெற்றுத் தருகின்ற இயந்திரங்களாக மாறியிருக்கின்றனர். இவைகளை பார்க்கும் போது மனதிலே வேதனையாக உள்ளது. இந்த நிலையில் நான் எப்படி உன் வழிகாட்டியை என் வழிகாட்டியாக எண்ணமுடியும்? இன்று உன்னிடம் நான் கேட்கும் கேள்வியை, என்னிடம் யாராவது கேட்டால் நான் என்ன பதில் சொல்லமுடியும்?  நம்மால் சமுதாயத்திற்கு நன்மை ஏற்படவில்லையானாலும் பரவாயில்லை, தீமை ஏற்படக்கூடாது?

புகாரி ஹதீஸ் ஒன்றை இப்போது காண்போம்:

பாகம் 6, அத்தியாயம் 78, எண் 6130

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

"அல்லாஹ்வின் திட்டப்படித் தான் முஹம்மது ஆயிஷாவை திருமணம் செய்தார்" என்று நீ சொல்லலாம். ஆனால் தம்பி, உண்மை இறைவன் இப்படியெல்லாம் செய்வார் என்று நீ நம்புகிறாயா? இது தவறான வழிகாட்டலாக இருக்கிறது. ஒன்பது வயது சிறுமியை நான் திருமணம் செய்துக்கொள்கிறேனே, அதுவும் என் பேத்தி வயதில் இருக்கும் சிறுமியாக இருக்கிறாளே என்ற எண்ணம் கூடவா உன் வழிகாட்டிக்கு இல்லாமல் போனது?  நீ சொல்லு, உனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு ஒன்பது வயதாகும் போது, ஒரு இஸ்லாமிய இமாம் வந்து அதுவும் 50க்கும் அதிகமான வயதுள்ளவர் வந்து, இந்த சிறுமியை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொன்னால், அவருக்கு உன் பதில் என்னவாக இருக்கும்? இப்படி கேட்பது நியாயமில்லை, அது பாவம் என்றுச் சொல்வாயா, அல்லது என் நபி இப்படி தான் வாழ்ந்துவிட்டுச் சென்றார், ஆகையால் நானும் அவரது வழியில் நடப்பேன் என்றுச் சொல்லி, அந்த கிழவனுக்கு உன் குழந்தையை தாரவாத்து கொடுப்பாயா?

உனக்குத் தெரியுமா? முஹம்மதுவின் இந்த ஒரு செயலால் அனேக சிறுமிகள் இஸ்லாமிய நாடுகளில் நரகத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவயது குழந்தையோடு கூட திருமணம் ஒப்பந்தம் செய்யலாம் என்று இஸ்லாமிய அறிஞர்கள் அறிக்கையிடுகிறார்கள். உலகத்தை உன் வழிகாட்டி எந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார் என்பதை கீழே உள்ள வீடியோக்களைப் பார்த்து தெரிந்துக்கொள். எந்த மார்க்கமாக இருந்தாலும் சரி, சிறுவயதில் திருமணம் செய்துவைப்பது தவறானதாகும்.

http://www.youtube.com/watch?v=cbZIVFyrx-s

http://www.youtube.com/watch?v=F13gtjjDEgE

http://www.youtube.com/watch?v=qYleXcpbzKY

தம்பி, இந்த ஆண்கள் உன் நபியை பின்பற்றி இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இதே போல என்னையும் செய்யச் சொல்கிறாயா? உன்னை மிகவும் வருந்திக்கேட்டுக்கொள்கிறேன், நீயும் இப்படிப்பட்டவர்களில் ஒருவனாக மாறிவிடாதே! முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் நீ படித்துள்ளாயா? அல்லது இஸ்லாமியர்கள் எழுதும் ஒரு சில நல்ல புத்தகங்களை மட்டுமே படித்துள்ளாயா?

ஓடி விளையாட வேண்டிய வயதில், திருமணத்தை செய்துவிட்டு, எதிர்காலத்தை சூன்யமாக்கிவிடுவது நாகரீகமுள்ளவர்கள் செய்யும் செயலா? உடல் திருமணத்திற்கு தயாராகிவிட்டாலும், மனது முதிர்ச்சி அடையவேண்டியது திருமண வாழ்விற்கு மிகவும் அவசியம் என்பதை உணரக்கூடாத அளவிற்கு உங்களுடைய மூளை கெடுக்கப்பட்டுள்ளதா? தம்பி சிந்தித்துப் பாரடா!

தம்பி ஒரு விஷயத்தை புரிந்துக்கொள், ஒன்பது வயதில் உள்ள ஒரு சிறுமியை, 90 வயதுள்ள ஆணோடு திருமணம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கும் என்பதை மறந்துவிடாதே! நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு கேட்கிறேன், ஒரு 90 வயது கிழவனுக்கு உன் 9 வயது மகளை திருமணம் செய்துவைப்பாயா? "ஆம் இஸ்லாம் அனுமதித்தால், நான் என் மகளை 90 வயது கிழவனுக்கும் தருவேன்" என்று நீ சொல்ல விரும்பினால், தம்பி ஒரு வரியில் எனக்கு தெரிவித்துவிடு, இனி உன் பக்கம் நான் தலைவைத்து கூட படுக்க மாட்டேன், உனக்கு ஒரு கடிதமும் எழுதமாட்டேன்.  "இல்லை இல்லை நான் இப்படியெல்லாம் செய்யமாட்டேன்" என்று எனக்கு பதில் எழுதினால், உன்னோடு மேலும் நான் தொடர்ந்து கடிதத்தொடர்பு வைத்துக்கொள்வேன்.

இதோடு முடித்துக்கொள்கிறேன், உன்னுடைய பதிலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். என் அடுத்த கடிதம் உன்னிடமிருந்து வரும் பதிலின் மீது சார்ந்துள்ளது.

உன் மனக்கண்கள் திறக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவு உனக்கு கிடைக்கவும், நான் கர்த்தரிடம் வேண்டிக்கொள்கிறேன்.

இப்படிக்கு, உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்.

மூலம்

உமரின் ரமளான் மாத தொடர் கட்டுரைகள்