2013 ரமளான் நாள் 8
மருமகனின் மனதை "கொள்ளையிட்ட" மாமனார். மாமனாரின் "கொள்கையை" கொள்ளையிட்ட மருமகன்

முந்தைய ஏழு தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்:

அன்பான தம்பிக்கு, 

உன் அண்ணன் எழுதும் கடிதம். என் கடிதங்களை நீ படிக்கிறாய் என்று நம்புகிறேன்.  உன் உடல் நிலை சரியில்லை என்று அம்மா சொன்னார்கள், உனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக சொன்னார்கள். இப்போது எப்படி உள்ளது? உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள் தம்பி. நோன்பு என்றால் பகலில் வயிற்றை காலியாக வைத்துவிட்டு, இரவில் வயிறு தாங்கமுடியாத அளவு சாப்பிடுவது அல்ல.  

ஒரு முஸ்லிம் குடும்பத்தில், சாதாரண மாதங்களில் உணவிற்காக ஆகும் செலவை விட, நோன்பு மாதத்தில் (ரமளான்) அதிகமாக செல்வாகிறது. ரமளானில் உணவிற்கு இப்படி செலவு அதிகமானால், இம்மாதத்தை "நோன்பு மாதம்" என்று ஏன் நாம் அழைக்கவேண்டும்? உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இந்த மாதம் "விருந்து மாதம்" என்று அழைக்கலாம், பல வகையான பண்டங்கள், மாமிச உணவுகள் அதிகமாக செலவிடப்படுகின்ற மாதம் இது, இதை நோன்பு மாதம் என்று சொல்வது தவறல்லவா? என்னடா, அண்ணன் இன்று போர்கள்/சண்டைகள் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, சாப்பிடுவது பற்றி பேசுகிறார் என்று நினைக்கிறாயா? நீ அம்மாவிடம் உன் உடல் நிலைப்பற்றி சொன்னாய் அல்லவா, அதுவும் அளவிற்கு அதிகமாக நீ சாப்பிட்டதால் வயிற்றில் சிறிது பிரச்சனை என்றுச் சொன்னாய் அல்லவா! அதனால் உன் ஜீரண பிரச்சனை நீங்க சிறிது சோடா கொடுக்கலாம் என்று எண்ணி சில வரிகளை எழுதினேன். சரி, இப்போது விஷயத்துக்கு வருகிறேன்.

2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை "கொள்ளையிட்ட" மாமனார். மாமனாரின் கொள்கையை கொள்ளையிட்ட மருமகன்

தம்பி, இந்த கட்டுரையில் இன்னொரு (ஒன்பதாவது) வழிப்பறி கொள்ளையை காண்போம். 

1) மருமகனின் வியாபார பொருட்களை கொள்ளையிட்ட மாமனார்:

ஹிஜ்ரி 6ம் ஆண்டு, ஐந்தாம் மாதத்தில் இஸ்லாமியர்கள் குறைஷி வியாபாரிகளை தாக்கி கொள்ளையிடுகின்றனர். இந்த முறை இந்த வியாபாரத்தை நடத்திச் செல்பவர் யார் என்று பார்த்தால், முஹம்மதுவின் மருமகன் ஆவார். 

இதைப் பற்றி ரஹீக் புத்தகத்தில் (பக்கம் 332) என்ன எழுதியிருக்கிறது என்பதை படிப்போமா?

5) ஹிஜ்ரி 6, ஜுமாதா அல்ஊலா மாதத்தில் "ஈஸ்" என்ற இடத்திற்கு ஜைத் அவர்களை 170 வீரர்களுடன் அனுப்பி வைத்தார்கள். அங்கு குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் நபி (ஸல்) அவர்களின் மருமகனார் அபுல் ஆஸின் தலைமையின் கீழ் தங்கியிருந்தது. அங்கு சென்று முஸ்லிம்கள் அனைத்தையும் கைப்பற்றினர். ஆனால், அபுல் ஆஸ் தப்பிச் சென்று மதீனாவில் நபியவர்களின் மகளார் ஜைனபிடம் அடைக்கலம் தேடினார். மேலும், தனது பொருட்களைத் திருப்பித் தருமாறு நபியவர்களிடம் கோரும்படி ஜைனபிடம் கேட்டுக் கொண்டார். அவரும் தனது கணவன் கோரிக்கையை நபியவர்களிடம் சொல்லவே, நபியவர்கள் பொருள்களை திரும்பத் தருமாறு மக்களிடம் கேட்டார்கள். ஆனால், எவரையும் அதற்காக நிர்பந்தப் படுத்தவில்லை.

நபியவர்களின் விருப்பத்திற்கிணங்க சிறிய பெரிய அனைத்து பொருட்களையும் நபித் தோழர்கள் திரும்பக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவற்றை எடுத்துக் கொண்டு மக்கா சென்று உரியவர்களிடம் அப்பொருட்களை ஒப்படைத்துவிட்டு இஸ்லாமை ஏற்று மதீனா திரும்பினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடம் கழித்துத் திரும்பிய தமது மருமகன் அபுல் ஆஸிற்குத் தனது மகள் ஜைனபை முதல் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.

இப்னு இஷாக்:

இப்னு இஷாக்கின் சீரத் ரஸூல் அல்லாஹ் புத்தகத்தில் பக்கம் 316, 317ம் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் என்னவென்றால், முஹம்மது முஸ்லிம்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைப்பதும்,  அதற்கு முஸ்லிம்கள் கொடுத்த பதிலுமாகும். அதாவது தன் மருமகனின் வியாபார பொருட்களை நீங்கள் விரும்பினால், அவருக்கு திருப்பித் தரலாம், அல்லது அவைகளை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த பொருட்களாகையால், உரிமையோடு வைத்துக்கொள்ளலாம் என்று முஹம்மது கூறினார்: இதனை இப்போது படியுங்கள்:

"This man is related to us as you know and you have taken property of his. If  you think well to restore it to him we should like that; but if you will not it is booty which God has given you and  you have the better right to it." (THE LIFE OF MUHAMMAD, A translation of IBN ISHAQ's Sirat Rasul Allah, by A Guillaume)

2) முஹம்மது ஒரு நல்ல அப்பா!

முஹம்மது தன் மகளுக்கு ஒரு நல்ல அப்பாவாக இந்த நிகழ்ச்சியில் காணப்படுகிறார்.  நீங்கள் இப்னு இஷாக்கின் சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சியை படித்தால்,  முஹம்மதுவின் மகள் ஜைனப் எல்லாருக்கும் முன்பாக தன்னிடம் பாதுகாப்புக்காக சேர்ந்து இருக்கும் தன் கணவர் பற்றி கூறுகிறார். இதனை கேட்ட முஹம்மது தொழுகை முடிந்ததும், தன் மகளின் விருப்பத்தின் படியே செய்தார். தன் மருமகனின் பொருட்களை திருப்பி தரும் படி முஸ்லிம்களிடம் பேசி, தன் மகளுக்கு நன்மையை செய்தார். அதாவது ஜைனப்பின் கணவர் திரும்ப வந்து தன் மனைவியோடு வாழ்க்கை நடத்துகிறார். ஆக, முஹம்மது ஒரு அருமையான அப்பாவாக இங்கு காணப்படுகிறார். தன் மகளின் வாழ்க்கையை திரும்ப கட்டிய நல்ல அப்பா முஹம்மது ஆவார். [ஆனால், பத்ரூ போருக்கு பிறகு தன் மகளையும், அவரது கணவரையும் பிரித்தவரும் இதே அப்பா தான்!]

3) முஹம்மது, ஒரு நல்ல மாமனார்:

முஹம்மது நல்ல அப்பாவாக மட்டுமல்ல, நல்ல மாமனாராகவும் நடந்துக்கொண்டார். தன் சகாக்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறார். இவரின் மீது வைத்த மரியாதையின் காரணமாக முஸ்லிம்கள்  எல்லா பொருட்களையும் திருப்பித் தருகின்றனர். இதனால், முஹம்மதுவின் மருமகனார் மக்கா சென்று, யார் யாருக்கு எவைகளை தரவேண்டுமோ அவைகளை கொடுத்துவிடுகிறார். இவர் ஒரு நல்ல வியாபாரி என்பதையும் நிருபித்துவிட்டார்.

4) முஹம்மது ஒரு நல்ல தலைவரா?

பி ஜைனுல் ஆபீதின் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் சில நேரங்களில் இன்றைய அரசியல் தலைவர்களோடு, முஹம்மதுவை ஒப்பிட்டு பேசுவார்கள். இன்றைய தலைவர்கள் தங்கள் சொந்த குடும்பத்திற்காக அனேக வசதிகளை சலுகைகளை அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றுக்கொள்வார்கள். சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார்கள். தங்களுக்காக, தங்கள் மகன், மகள் போன்றவர்களுக்காக அநீதியான முறையில் சொத்துக்களை குவித்துக்கொள்வார்கள். ஆனால், எங்கள் இறைத்தூதரோ, இப்படியெல்லாம் செய்யவே இல்லை என்று அழுத்தந்திருத்தமாக பீஜே அவர்கள் கூறுவார்கள்.  ஆனால், இந்த நிகழ்ச்சியை நாம் பார்த்தால், நமக்கு தெரிவது என்ன? ஒரு நல்ல தலைவராக முஹம்மது நடந்துக்கொண்டாரா?  உலக மக்களுக்கு ஒரு சட்டம் தனக்கு ஒரு சட்டம். தன் மகள் விரும்புகிறார் என்பதற்காக, தன் மருமகன் என்பதற்காக இவர் 'கொள்ளையிட்ட சொத்துக்களை' திரும்ப தன் மருமகனிடமே கொடுப்பதற்காக தன் சகாக்களோடு பேசுகிறார்.

தன் சகாக்களின் அனுமதியோடு தானே, முஹம்மது செயல்பட்டார் என்று சிலர் கேட்கலாம். ஆனால், கேள்வி என்னவென்றால், " இவர் தன் மகளுக்காக, மருமகனுக்காக சகாக்களிடம் கேட்டே இருக்கக்கூடாது, அப்போது தான் இவர் ஒரு நல்ல தலைவர், நீதியானவர்" என்று தெரியவரும். ஆனால், இவரோ, ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறார், பொதுவாக முஹம்மதுவின் மீது அன்புவைத்திருக்கும் நபர்கள் என்ன செய்வார்கள்? முஹம்மதுவிற்கு எது மகிழ்ச்சியைத் தருமோ அதையேச் செய்வார்கள்.  இதை அறிந்து தான் இவர் கேட்கிறார், இவர் கேட்டது போலவே நடந்தது. 

ஆக, முஹம்மது ஒரு நல்ல அப்பா ஆவார், நல்ல மாமனார் ஆவார், ஆனால் நல்ல தலைவர் அல்ல. தன் சொந்த மகளுக்காக தன் அதிகாரத்தை பயன்படுத்தி சலுகைகளை பெற்றுக்கொண்டார். இன்றைய அரசியல் தலைவர்களுக்கும் முஹம்மதுவிற்கும் இந்த விஷயத்தில், எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மது இப்படி தன் மகளுக்காக தன் அதிகாரத்தை துர்பிரயோகம் செய்தது இது இரண்டாவது முறையாகும். 

பத்ரூ போரும், முஹம்மதுவின் அதிகார துர்பிரயோகமும்:

பத்ரூ போர் நடக்கும் போது, அதில் இதே மருமகன் மக்காவினரின் சார்பாக பங்கு பெற்றார், மேலும் கைதியாக முஸ்லிம்களால் பிடிபட்டார். தன் கணவரை விடுவிக்க, முஹம்மதுவின் மகள் (அப்போது அவர்கள் மக்காவில் கணவரோடு இருந்தார்கள், ஹிஜ்ரா செய்யவில்லை) தனக்கு தன் தாய் கதிஜா அவர்கள் திருமண பரிசாக கொடுத்த நக்லெஸ்ஸை கொடுத்து அனுப்பி, அதை வைத்துக்கொண்டு, தன் கணவரை விடுவிக்கும் படி முஹம்மதுவிடம் அனுப்பினார்கள். அந்த நக்லெஸ்ஸை கண்டதும், முஹம்மதுவிற்கு தம்முடைய காலஞ்சென்ற மனைவி கதிஜா ஞாபம் மேலோங்க, தன் சகாக்களிடம் முஹம்மது விண்ணப்பம் வைத்த போது, அவர்கள் எந்த ஒரு பணத்தையும் (நக்லஸ்ஸையும்) எடுத்துக்கொள்ளாமல், அடிமையாக பிடிபட்ட முஹம்மதுவின் மருமகனை விடுவிக்க ஒப்புக்கொண்டார்கள். முஹம்மதுவின் மீது வைத்த அன்பின் அடிப்படையில் அவர்கள் இப்படி செய்தார்கள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முஹம்மது இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் மூலம் புறக்கணித்துள்ளார், தன் சகாக்களின் அன்பை தனக்கு சாதகமாக்கிவிட்டார்.  ஆக, முஹம்மது ஒரு நல்ல தலைவர் அல்ல, இன்றைய தீய அரசியல் தலைவர்களுக்கு இவர் எந்த வகையிலும் குறைவில்லை.

5) மாமனாரின் கொள்கையை கொள்ளையிட்ட மருமகன்

வியாபாரத்திற்கு கொண்டு வந்த அனைத்து பொருட்களையும் முஹம்மது திருப்பிகொடுக்க, இவர் அவைகளை மக்காவிற்கு கொண்டு வந்து, யார் யாருக்கு தரவேண்டுமோ அவர்களுக்கு கொடுத்துவிடுகிறார், அதன் பிறகு மதினாவிற்கு வந்து, தான் முஸ்லிமாக மாறுவதாக கூறுகிறார். முஹம்மது தன் மகளை மறுபடியும் இவருக்கு மனைவியாக தருகிறார்.  இப்படி முஹம்மதுவின் மருமகன் முஸ்லிமாக மாறுகிறார், இவர் ஒரு நல்ல வியாபாரி என்பதை நிருபித்துவிட்டார். ஒரு நல்ல வியாபாரி எந்த இடத்தில் அதிக லாபம் வருமோ அந்த இடத்தில் தானே வியாபாரம் செய்வார்?

[இந்த நிகழ்ச்சி நடந்து  ஒரு ஆண்டுக்கு பிறகு, முஹம்மதுவின் மகள் மரித்துவிட்டார்கள், அதன் பிறகு ஒரு ஆண்டில் இந்த மருமகனும் மரித்துவிடுகிறார்]

முடிவுரை: தம்பி, உன் இறைத்தூதர் ஒரு நல்ல அப்பாவாக இருந்தார், மாமனாராக இருந்தார், ஆனால் நல்ல நீதியான தலைவராக வாழ தவறிவிட்டார். தொண்டர்களின் அறியாமையை மூலதனமாக வைத்து வாழும் அரசியல் தலைவரைப் போல, இவரும் நடந்துக்கொண்டார்.  தன் குடும்பம், தன் மகள்கள் என்றால் முஹம்மதுவிற்கு அன்பு அப்படியே பொங்கிவிடும், ஆனால், மற்றவர்கள் என்றால் அல்லாஹ் குறுக்கே வந்துவிடுவார், இஸ்லாம் குறுக்கே வந்துவிடும், ஷரியா சட்டம் குறுக்கே வந்துவிடும்.  ஊருக்குத் தான் உபதேசம் உனக்கு இல்லையடி என்றுச் சொன்னானாம் ஒருத்தன், அது போல முஹம்மதுவின் சில விஷயங்களை பொறுத்தமட்டில் தனக்கு ஒரு நியாயம், ஊருக்கு இன்னொரு நியாயம். 

தம்பி, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கனும், அதாவது தாங்கள் மக்காவில் விட்டுவந்த சொத்துக்களை மீட்கத் தான் கொள்ளையிட்டார்கள் என்றுச் சொன்னால், எத்தனை ஆண்டுகள் இதனை தொடர்ந்தார்கள்? தொடர்ந்து கொள்ளையடித்துக்கொண்டே இருந்தார்களே! இவர்களுடைய சொத்துக்களுக்கு இணையான பொருட்களை கொள்ளையிட்ட பிறகும் ஏன் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் உன் இறைத்தூதர் ஈடுபட்டார்?  

தம்பி, இஸ்லாமின் கொள்ளை ஒரு தொடர் கதையாக தொடர்ந்துக்கொண்டே இருந்தது. உலகத்திலேயே கொள்ளையை ஒரு வழிமுறையாக பின்பற்றிக்கொண்டு, அது நல்லது என்றுச் சொல்லி இன்றுவரை மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்ற ஒரே மார்க்கம் 'இஸ்லாம்' என்றுச் சொன்னால் மிகையாகாது தம்பி.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.  அதுவரைக்கும் அடுத்த வழிப்பறி கொள்ளை எது? என்று சிறிது ஆய்வு செய்து பார்த்துக்கொள்.

இப்படிக்கு, 

உன் அண்ணன் 

உமர்

மூலம்

உமரின் ரமளான் மாத கட்டுரைகள்