நபீல் குறைஷி (1983-2017) - அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்

அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள் (யோவான் 5:35 )

நம் அன்பு சகோதரர் நபீல் குறைஷி அவர்கள் நேற்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார், அவருக்கு வயது 34. 

குறைந்த வயதில் நிறைவான ஊழியம் செய்தவர். ஒரு முஸ்லிமாக இருந்து, கிறிஸ்தவர்களோடு வைராக்கியமாக விவாதம் புரிந்தவர். சத்தியத்தை அறிந்துக்கொண்ட பிறகு கர்த்தருடைய ஊழியம் செய்து, தனக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்தை பொறுமையோடு ஓடி, விசுவாசத்தை காத்துக்கொண்டார். கர்த்தர் அவரது  குடும்ப நபர்களை ஆறுதல் படுத்துவாராக. 

என்னைப்போன்ற முஸ்லிம் பின்னணியிலிருந்து கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்களுக்கு, சகோதரின் வாழ்வும் ஊழியமும் ஒரு சவாலாகும். அவரது ஊழியத்தைக் கண்டு அனேக முறை நான் உற்சாகம் அடைந்துள்ளேன்.  அவர் விட்டுச் சென்ற ஊழியத்தை அவரது சகோதரர்களாகிய நாங்கள் தொடர்ந்து செய்வோம். அவரது குடும்பத்துக்காக ஜெபிக்கிறோம்.

உமர்

ஈஸா குர்-ஆன்

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்