அறிவு ஒரு பாவமா?

Is Knowledge Sin?

கேள்வி:

பல விஷயங்களின் நம்பகத்தன்மை இக்கேள்வியில் உள்ளது. உலகிலேயே மிக முழுமையான ஒரு நூல் குர்‍ஆன் ஆகும். ஆனால், பைபிள் தன்னில் தான் முரண்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஆதாம் ஏவாளின் கதை, பைபிளை நம்பகத்தன்மையற்றதாக‌ ஆக்குகிறது. பைபிளில் ஆதாமும் ஏவாளும் ஞானத்தின் கனியை சாப்பிட்டதால் ஏதேனில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எனவே பைபிள் அறிவு, கல்வி ஆகியவை பாவம் என்கிறது. ஆகையால் நீங்களே பைபிளுக்கு முரண்படுகிறீர்கள். பைபிளின்படி அறிவின் வளர்ச்சியால் நாம் அனைவரும் பாவிகளாகிறோம். எனக்கு இன்னும் இதைப் பற்றிய சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

பதில்:

இந்தக் கேள்விக்கு நான் புரிந்துகொண்ட கோணத்தில் பதிலளிக்கிறேன்.

குர்‍ஆனிலும் பைபிளிலும் பல இடங்களில் கடவுள் "வானத்தையும் பூமியையும்" படைத்தார் என்று உள்ளது. ஆனால், கடவுள் "அனைத்தையும் படைத்தார்” என்பதற்கும் கடவுள் "வானத்தையும் பூமியையும் படைத்தார்" என்பதற்கும் வேறுபாடு உள்ளது. இருந்தபோதிலும், "கடவுள் அனைத்தையும் படைத்தார்" என்பதை சுருக்கமாக சொல்ல, இப்படி "வானத்தையும் பூமியையும் படித்தார்" என்று சொல்லப்படுகிறது. ஒரு விருந்திற்கு வரும்படி "செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும்" அழைப்புவிடுத்தால், இதில் நடுத்தர மக்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று பொருள் கொள்ளக்கூடாது, அதற்கு பதிலாக எல்லா மக்களையும் அழைக்கும் அழைப்பாகவே கொள்ளவேண்டும். அதுபோலவே ஆதாம் ஏவாள் கதையில், "நன்மை தீமையின் ஞானம்" என்பது, “அனைத்தையும் அறிந்துக்கொள்ளும்” ஞானமாக உள்ளது. (ஆதியாகமம் - அதிகாரங்கள் 2-3).

மனிதன் தன் ஆணவத்தினாலும், தான் இறைவனைப் போல மாறவேண்டும் (ஆதியாகமம் 3:5) என்ற ஆசையினாலும், இறைவனை விட்டு தனியாக வாழு முயற்சிக்கிறான் (தனக்கு தானே இறைவனாக மாற முயற்சிக்கிறான்), இதைத் தான் பைபிள் பாவம் என்று சொல்கிறது.

ஞானத்தை ஆண்டவர் மீதுள்ள அச்சத்துடன் தேட பைபிள் உத்தரவிடுகிறது. தேவனின் வார்த்தை பல இடங்களில் இவ்வாறு கூறுகிறது, நீதிமொழிகள் 9:10, நீதிமொழிகள் 2,3 ஆகிய அதிகாரங்களை படிக்கவும்.

ஆங்கில மூலம்: Is Knowledge Sin?

இதர கேள்வி-பதில்களை படிக்கவும்