எல்லா நாடுகளிலிருந்தும் நபிகளா? அல்லது ஆபிரகாமின் சந்ததியிலிருந்து மட்டும் நபிகளா?

குர்-ஆன் 29:27ல் கீழ்கண்ட விதமாக படிக்கிறோம்:

மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார். (குர்-ஆன் 29:27)*  

*அனைத்து மேற்கோள்களும் முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

மேற்கண்ட வசனத்தில் வரும் “அவருடைய சந்ததியிலே” என்ற சொற்றொடர் பற்றி பலர் பலவிதமாக கருத்து கூறுகின்றனர்:

1. கடைசியாக பெயர் குறிப்பிடப்பட்ட ”யாக்கோபு உடைய சந்ததியிலிருந்து நபித்துவமும், வேதமும் வரும்” என்று பொருள் கொள்ளவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். 

2. வேறு சிலர் “ஆபிரகாமின் சந்ததி அனைவரிலிருந்தும் நபித்துவமும், வேதங்களும் வரும்” என்று பொருள் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர்.  

நாம் இந்த இரண்டு விளக்கங்களில் எதனை அங்கீகரித்தாலும், “நபித்துவம்” என்பது ஆபிரகாமின் சந்ததியில் உள்ளவர்களுக்குத் தான் என்று ஏற்றுக் கொள்ளவேண்டும். 

குர்-ஆன் 29:27ன் படி, எல்லா நபிமார்களும் (தீர்க்கதரிசிகளும்) ஆபிரகாமின் சந்ததியிலிருந்து தான் வருவார்கள் என்றால், அதே குர்-ஆன் 16:36ம் வசனம் சொல்வது எப்படி சாத்தியமாகும்? அதாவது இந்த வசனத்தின் படி எல்லா நாட்டு மக்களுக்கும் அவர்களிலிருந்தே நபியை அல்லாஹ் அனுப்பியுள்ளார் என்பது எப்படி சாத்தியமாகும்?

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; . . . . .. (குர்-ஆன் 16:36)

இவ்விரு வசனங்களை ஒன்று சேர்த்து பார்க்கும் போது, எல்லா நாடுகளுக்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் அனைவரும் ஆபிரகாமின் சந்ததியிலிருந்து வந்தவர்கள் தான் என்று யாராவது சொல்லமுடியுமா?

இதில் எது சரியானது? குர்-ஆன் 29:27ன் படி, நபித்துவம் ஆபிரகாமின் சந்ததிக்கு மட்டும் கொடுக்கப்பட்டதா? அல்லது குர்-ஆன் 16:36ன் படி, நபித்துவம் என்பது எல்லா நாடுகளுக்கும் / சமூகத்தினருக்கும் கொடுக்கப்பட்ட ஒன்றா?

ஆபிரகாமின் சந்ததியிலிருந்து நபித்துவம் வந்தது என்ற குர்-ஆனின் வசனத்தில் உள்ள பிரச்சனையை இங்கு (ஆபிரகாமின் சந்ததி – அல்லாஹ் ஏன் ஆபிரகாமின் சந்ததி பட்டியலை தாறுமாறாக கூறுகிறார்) சொடுக்கி படிக்கலாம்.

மூலம்: http://www.answering-islam.org/Quran/Contra/qi038.html

இதர குர்-ஆன் முரண்பாடுகள்