பத்து யூத அறிஞர்களும் முஸ்லிம்களின் திசை திருப்பும் யுக்தியும்

(இஸ்லாமிக் அவார்னஸ் தளத்துக்கு மறுப்புக்கள்)

குர்-ஆனின் அர்த்தமற்ற எழுத்துக்களும், பத்து யூத ஞானிகளும்” என்ற கட்டுரையை நான் முதன் முதலில் படிக்கும் போது, இதற்கு முஸ்லிம்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள் என்று எதிர்ப்பார்த்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. இஸ்லாமிக் அவார்னஸ் என்ற தளம் தங்களுடைய பாணியில் இதற்கு பதில் அளித்துள்ளார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள், தவறான விவரங்களை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி ஒரு பதிலை எழுதியுள்ளார்கள். குற்றம் சாட்டுவதும் கெலி செய்வதும் அவர்களின் பதில்களில் பொதுவாகவே அடங்கியிருக்கும் அம்சங்கள் என்ற போதிலும், அவர்களின் இந்த பதிலில் ‘திசை திருப்புதல் (ad hominem – Logical Fallacy)’ என்ற தர்க்க பிழையையும் அவர்கள் செய்துள்ளார்கள். மேலும் மறைமுகமாக குர்-ஆனின் ஒரு ‘திசை திருப்புதல்’ பிழையை வெளிப்படுத்தி மாட்டிக்கொண்டுள்ளார்கள். (குர்-ஆனின் தர்க்க பிழைகளைப் பற்றி அறிய இக்கட்டுரையை படிக்கவும் – Logical Fallacies in the Quran).

இந்த ”பத்து யூத ஞானிகள்” என்ற கதை “கட்டுக்கதை” என்ற நிலையில் உள்ளது என்பதை நான் அறிவேன். இதனை நாம் எப்படி அறியலாம் என்று பார்த்தால், அந்த கதையின் படி, யூத ஞானிகள் தங்கள் பெயர்களை சில குர்-ஆனின் அத்தியாயங்களுக்கு கொடுத்துள்ளார்கள் என்ற விவரத்திலிருந்து அறியலாம். ஆனால், குர்-ஆனின் எந்த ஒரு அத்தியாயத்திற்கும் அந்த யூத ஞானிகளின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும், இந்த யூத ஞானிகளின் கதை குர்-ஆன் 113 மற்றும் 114 அத்தியாயங்களைக் காட்டிலும் அதிகமான கட்டுக்கதை அம்சங்களை கொண்டுள்ளது எனலாம். முஹம்மதுவின் படி, அவர் மீது சூன்யம் செய்யப்பட்டதாம். அதாவது தன் மனைவிகளோடு உடலுறவு கொள்ளவில்லையென்றாலும், தான் உடலுறவு கொண்டுவிட்டோம் என்ற பிரமையில் முஹம்மது ஒரு வருடம் இருந்தாராம்.

குர்-ஆனை படிப்பவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துக்கொள்வார்கள், அது என்னவென்றால், முஹம்மது ”பல பழமைவாய்ந்த கட்டுக்கதைகளை சொல்பவர்” என்ற குற்றச்சாட்டு அவர் மீது பல முறை வைக்கப்பட்டது என்பதாகும் (இவ்வசனங்களை பார்க்கவும்: குர்-ஆன் 6:25; 8:31; 16:24; 23:83; 25:5; 27:68; 46:17; 68:15; and, 83:13). 

குர்-ஆன் 16:103 ஒரு விசேஷித்த வசனம் என்றுச் சொல்லலாம்:

குர்-ஆன் 16:103

16:103. “நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்.) 

கூர்ந்து கவனிக்கவும், இந்த வசனத்தில் தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முஹம்மது மறுக்கவில்லை, அதாவது ஒரு நபர் முஹம்மதுவிற்கு குர்-ஆனைச் சொல்லித்தருகின்றார் என்ற குற்றச்சாட்டை முஹம்மது மறுக்கவில்லை. அதற்கு பதிலாக அவர் “திசை திருப்பதல் (Fallacy of Distraction) என்ற தர்க்கப்பிழையை இங்கு செய்கிறார்”. மேற்கண்ட குற்றச்சாட்டிற்கு முஹம்மது கொடுத்த பதில் இது தான், “அதாவது எனக்கு கற்றுத்தருகிறார் என்றுச் சொல்லும் நபர், வேற்று மொழி பேசுபவர், அவருக்கு தூய அரபியில் வசனங்களை எழுத வராது என்பதாகும்”. அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டு வேறு, அவர் கொடுத்த பதில் வேறு, ஏனென்றால் அவர் கையில் உள்ள குற்றச்சாட்டை பார்க்காமல் அதனை திசை திருப்ப முயன்றுள்ளார்.  

ஸைஃபுல்லாவும் அவரது குழுவும்ம (இஸ்லாமிக் அவார்னஸ் தளம்) தங்கள் நபி செய்த அதே தர்க்கப்பிழையை செய்துள்ளார்கள். மக்களை திசை திருப்புதவற்காக, முஹம்மது “மொழி” என்ற வாதத்தை முன்வைத்தார். முஹம்மது மீது வைத்த குற்றச்சாட்டு, அவரது ”வெளிப்பாடுகள்” பற்றியது, அது எந்த மொழியில் இறங்கியது, அந்த மொழியின் சிறப்பு என்ன? அவருக்கு சொல்லிக்கொடுப்பவருக்கு அரபி மொழி தெரியுமா? தெரியாதா? என்பது பற்றியது அல்ல. 

இதைப் போலவே, முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு பதில் கொடுப்பதை விட்டுவிட்டு, இஸ்லாமிக் அவார்னஸ் என்ற குழுவும், விஷயத்தை திசை திருப்பும்படி பதில் கொடுத்துள்ளார்கள். இவர்கள் கொடுத்த பதில் ”இப்னு இஷாக்கின் மூல பிரதி தற்போது நம்மிடம் இல்லை” என்பதாகும். தங்கள் நபியைப் போலவே இவர்களும் தர்க்கபிழை (திசை திருப்பும் பிழையை) செய்துள்ளார்கள்.

முஹம்மதுவிற்கு மற்றவர்கள் கற்றுக்கொடுத்தார்கள் என்று தியோபன்ஸ் முன்வைத்த விவரம் மிகவும் சுவாரசியமானது. இதைவிட அதிக சுவாரசியமான விவரம், குர்-ஆன் சொல்லும் விவரமாகும், ஏனென்றால், தியோபன்ஸை விட, குர்-ஆனின் விவரம் இன்னும் பழமையானது. கர்த்தருக்கு சித்தமானால், குர்-ஆனின் விரிவுரை என்ற தலைப்பில் எந்தெந்த யூத மூலத்திலிருந்து விவரங்கள் எடுக்கப்பட்டு குர்-ஆனில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை காண்போம்.  முஹம்மது எந்தெந்த மூலங்களிலிருந்து விவரங்களை சேகரித்துள்ளார் என்பதை முஹம்மதுவை விமர்சித்தவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அதாவது ஹக்காட மற்றும் யூத கிறிஸ்தவ நூல்களிலிருந்து அவர் எடுத்த விவரங்கள் பற்றி அனேகருக்கு தெரிந்திருந்தது.

ஆசிரியர்: ஆண்ட்ரு வார்கோ


குர்‍ஆன் மூலம் பற்றிய இதர கட்டுரைகள்

குர்-ஆன் பற்றிய கட்டுரைகள்