இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு என்றுச் சொன்ன நபி யார்?

முஸ்லிம்கள் எப்போதும் “இயேசு சிலுவையில் அறையப்பட்டு துன்பம் அனுபவிக்கவில்லை, அவர் சிலுவையில் மரிக்கவில்லை” என்றுச் சொல்வார்கள். இயேசு துன்பம் அனுபவிப்பதிலிருந்து காக்கப்பட்டார் மேலும் அவருடைய இடத்தில் இன்னொரு நபர் (யூதாஸ் ஸ்காரியோத்து அல்லது இன்னொரு இயேசுவின் சீடர்) துன்பத்தை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு மரித்தார் என்று முஸ்லிம்கள் சொல்வார்கள்.

நான் புகாரி ஹதீஸை வாசித்துக்கொண்டு இருக்கும் போது, கீழ்கண்ட ஹதீஸ் கண்களில் பட்டது. 

3477. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் 

(முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. 'அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, 

'இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்' 

என்று சொல்லிக் கொண்டிருந்தார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். Volume :4 Book :60

இது ஒரு விசித்திரமான ஹதீஸ் என்று எனக்குத்  தோன்றுகிறது, அதாவது லூக்கா 23:34ல் கீழ்கண்டவாறு இயேசு சொல்லியுள்ளதை படிக்கவும்.

அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். . . . (லூக்கா 23:34)

இஸ்லாமிய ஹதீஸில் படித்தபடி, “தம் மக்களால் இவ்விதமாக காயப்படுத்தப்பட்ட அந்த தீர்க்கதரிசி யார்?” என்று முஸ்லிம்களிடம் கேட்டால்.

இறைவன் அனுப்பிய ஆயிரக்கணக்கான தீர்க்கதரிசிகளில் இவர் ஒருவர் ஆனால், இவர் இயேசு அல்ல என்று முஸ்லிம்கள் பதில் அளிப்பார்கள். ஏனென்றால், இஸ்லாமின் படி இயேசு சிலுவையில் அறையப்படவில்லை. ஆனால், லூக்காவிலும், புகாரி ஹதீஸிலும் அந்த தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகளை கவனித்தால், இவ்விருவரும் ஒருவர் தான் என்று நமக்குத் தோன்றும்.

ஒருவேளை ஒருவர் திறந்த மனதுடன் புகாரி ஹதீஸையும், லூக்காவின் வசனத்தையும் படித்தால், உடனடியாக என்ன நினைப்பார்? இவ்விருவரும் ஒரே நபர் என்றும் மேலும் அந்த நபர் இயேசு என்றும் நினைப்பார். இயேசு சிலுவையில் நம் அனைவரின் குற்றங்களை தாம் சுமந்து மரித்து நமக்கு மன்னிப்பைக் கொடுத்தார். 

இப்போது கேள்வி என்னவென்றால், இயேசு கொடுத்த மன்னிப்பை நாம் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா? அல்லது அதனை புறக்கணிக்கிறோமா? என்பது தான். 

மூலம்: http://www.answering-islam.org/Cross/hadith.html


இயேசு பற்றிய இதர கட்டுரைகள்

முஹம்மது பற்றிய இதர கட்டுரைகள்