புதிய கட்டுரைகள்

தேதி: 26th September 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

*   நாம் இருதயத்தில் குத்தப்பட்டு, உபவாசம் இருந்து நம் தவறுகளுக்காக தேவனிடம் ஒப்புறவாக விரும்புகிறோமா? உலகத்தில் நடக்கும் தீய செயல்களைக் கண்டும் காணாதவர் போல இருந்துவிடுவது சரியானதா? மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் கொடுமைகளையும், அமெரிக்கா போன்ற நாடுகளில் "கருக்கலைப்பு" என்ற பெயரால் மரித்துக்கொண்டு இருக்கும், இலட்சக்கணக்கான சிசுக்களையும் கண்டும் காணாமல் இருந்தோமானால், ஒரு நாள் நாம் இதன் வினையை அறுப்பது உறுதி, இதற்கு முடிவென்ன?  படிக்கவும்: இதயத்தில் உணர்ந்து கடைபிடிக்கும் உபவாசம் (நோம்பு) மற்றும் மனம் வருந்துதல் ( Heartfelt Fasting and Repentance by Roland Clarke)

*  மரணம் என்பதின் உண்மை அர்த்தமென்ன? மரணம் தான் மனிதனின் கடைசிப் பயணமா? மரணத்தின் மீது வெற்றிப் பெற்றவரோடு சேர்ந்து நாமும் நித்திய நித்தியமாய் வாழ வழி உண்டா? உண்டு என்றுச் சொல்கிறது பைபிள். இப்படிப்பட்ட நிச்சயத்தை இவ்வுலகில் வாழும் இந்த நாட்களிலேயே பெறுவது எப்படி? படிக்கவும்: நித்திய நம்பிக்கை  (ETERNAL HOPE by Roland Clarke)

* முகமது தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் முத்திரையானவர், அதாவது கடைசியானவர், இவருக்கு அடுத்து ஒரு தீர்க்கதரிசியும் வரப்போவது இல்லை என்பார்கள் இஸ்லாமியர்கள். ஆனால், அதே இஸ்லாம் சொல்கிறது, அந்த முத்திரை என்பது முகமதுவின் முதுகில் உள்ள ஒரு மச்சம் போன்ற ஒரு அடையாளமாகும், இந்த மச்சம் தான் "ஒருவர் நபி" என்பதற்கு அடையாளம் என்றும் கூறுகிறது. இந்த மச்சத்தை கண்டு தான் அனேகர் முகமது ஒரு நபி என்பதை நம்பினார்கள் என்று ஹதீஸ்கள் சொல்கின்றன. இந்த சரீர குறைபாடுள்ள மச்சம் எப்படி அவரை "ஒரு நபி" என்பதை நிருபிக்க உதவும்? இதனை இஸ்லாமியர் அல்லாதவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள், இதற்கு பதில் உண்டா? படிக்கவும்: முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா? (Muhammad and the Seal of Prophethood  - A Sign or A Physical Deformity?)

தேதி: 2nd September 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* உலமனைத்தும் உள்ள முஸ்லீம்கள் குர்‍ஆனைப் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்வார்கள். முகமதுவிற்கு இறக்கப்பட்ட குர்‍ஆன் அன்று எப்படி இருந்ததோ அதே போல இன்று கூட உள்ளது, ஒரு மாற்றமும் இல்லை, ஒரு எழுத்துகூட மாறவில்லை, அவ்வளவு ஏன் ஒரு புள்ளி கூட மாறவில்லை என்பார்கள். ஆனால், மூல அரபிக் குர்‍ஆன்களில் பல வித்தியாசங்கள் உள்ளன. இக்கட்டுரையில் தற்காலத்தில் நம் கைகளில் தவழும்   இரண்டு அரபி குர்‍ஆன்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு, முஸ்லீம்களின் இந்த வாதம் தவறானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது, படிக்கவும்: பல விதமான அரபி குர்‍ஆன்கள்.

*  மூல குர்‍ஆன் என்று இஸ்லாமியர்களால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் சமர்கண்ட் பிரதியோடு, தற்கால குர்‍ஆன் ஒப்பிடப்பட்டு, இவைகள் இரண்டிற்கும் உள்ள அதிக எண்ணிக்கையிலான வித்தியாசத்தை, படத்துடன் விளக்கும் கட்டுரை இது, படிக்கவும்: சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு (சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு).

* பாலியல்(செக்ஸ்) விஷயங்களில் முகமது ஒரு மனிதத் தன்மைக்கு மிஞ்சிய பலமுள்ளவர்(Superman) என்று இஸ்லாமிய பாரம்பரியம் தெரிவிக்கிறது. முகமதுவின் பாலியல் பற்றிய‌ ஹதீஸ் ஆதாரங்கள், குர்‍ஆனின் நம்பகத்தன்மையை பாதிக்கும் அளவிற்கு உள்ளது, படிக்கவும்: முகமதுவின் பாலியல் பலம்.

தேதி: 25th August 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* உலக முஸ்லீம்கள் அனைவரும் குர்‍ஆன் ஒன்று தான் உள்ளது, அதில் ஒரு எழுத்து கூட மாறவில்லை என்றுச் சொல்லி பெருமைப்படுவார்கள்.  முஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், "filohen mahfouz" or "in saved plates" என்றுச் சொல்லக் கூடிய “தாய் குர்‍ஆன்” என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை, படிக்கவும்:ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?! )

*  குர்‍ஆனில் ஒரு எழுத்து பிழையும் இல்லை, முகமதுவின் காலத்தில் எப்படி குர்‍ஆன் இருந்ததோ அப்படியே இப்போதும் உள்ளது, ஒரு எழுத்தும், அதன் ஒரு உருப்பும் மாறவில்லை என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். ஆனால், பல எழுத்துபிழைகள் குர்‍ஆனில் இருக்கின்றது, அதனை இவர்கள் எப்படி சரி செய்தார்கள் என்பதை அறிய படிக்கவும்:  குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் (Scribal errors in the Qur'an)

தேதி: 16th August 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* முகமதுவிற்கு "நம்பத்தகுந்தவர்" என்ற பட்டம் கொடுக்கப்பட்டு இருந்தது என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். ஆனால், உண்மையில் அவர் நேர்மையுள்ளவராக, பொய் சொல்லாதவராக நம்பத்தகுந்தவராக இருந்தாரா? ஒரு நல்ல மனிதரை அல்லா எப்படிப்பட்டவாராக மாற்றியுள்ளார் என்பதை அறிந்துக்கொள்ள படிக்கவும்: "முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்". 

* பைபிள் குறிப்பிடும் தேவனுக்கும் குர்‍ஆன் கூறும் அல்லாவுக்கும் இய‌ல்பு ம‌ற்றும் பண்பில் காணப்படும் அடிப்படை வேறுபாடு என்ன‌?  மனிதனுடன் தனிப்பட்ட அன்பான பரஸ்பர உறவு முறையை வைத்துக் கொள்ள முயற்சி எடுத்த இறைவன் யார்? தெரிந்துக் கொள்ள படிக்கவும்: "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்? தேவன் vs அல்லா?".

தேதி: 6th August 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட நான்கு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* முகமது காலத்து மக்கள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்? ஹதீஸ்கள் சொல்லும் சாட்சியை விட குர்‍ஆன் சொல்லும் சாட்சி அதிக வலிமைமிக்கது ஏனென்றால், அல்லா சொல்லும் சாட்சி உண்மையாக இருக்குமில்லையா? படிக்கவும் "முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராகக் கண்டனர்?

* இஸ்லாம் அமைதியான முறையில் தான் பரவியது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு / மக்களுக்கு இஸ்லாமை தழுவும் படி எழுதிய கடிதத்தை படித்தே ஆகவேண்டும். இக்கடிதத்தை படித்துவிட்டு, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் என்று உங்களால் சொல்லக்கூடுமா என்று சிந்தியுங்கள். படிக்கவும்  "ஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்".

* தேவன் ஏவாளுக்கு கொடுத்த சாபம் பற்றிய முஸ்லீம்களின் குற்றச்சாட்டு சரியா? தேவனின் சாபத்தினால் தான் பெண்கள் பிள்ளை பெறுகிறார்களா?  அல்லது பெண்கள் கர்ப்பமடைந்து பிள்ளைகள் பெறுவது ஒரு மகிழ்ச்சியான ஆசீர்வாதமா? இந்த நிகழ்ச்சிப் பற்றி  இஸ்லாம் என்னச் சொல்கிறது? அறிந்துக்கொள்ள படிக்கவும்  "இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1 : ஏவாளும் தேவனின் சாபமும்"

* உலக மக்களின் பாவங்களை மன்னிக்க இயேசு மரித்தே ஆகவேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் இந்த கட்டுரையில், படிக்கவும் "பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்கவேண்டுமா?"


தேதி: 5th July 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* இக்கட்டுரையில் கிறிஸ்தவம் என்றால் என்ன? ஆரம்பத்தில் தேவன் மற்றும் மனிதனின் உறவுமுறை எப்படி இருந்தது? பிறகு எப்படி மனிதன் வழிதவறினான்? மனிதனை தேவன் அப்படியே விட்டுவிட்டாரா அல்லது தன்னிடம் மனிதன் மறுபடியும் ஐக்கியம் கொள்ள என்ன செய்தார்? மற்றும் தேவன் கொடுக்கும் இரட்சிப்பு என்னும் பரிசை எப்படி நாம் பெற்றுக் கொள்ளமுடியும் போன்ற விவரங்களை காணலாம். படியுங்கள்: அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை(Outline of the Basic Christian Beliefs).

*  பொதுவாக, எல்லா அரபியர்களும் தீவிரவாதிகள் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உண்டு, அதே போல, எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்கள் என்ற தவறான கருத்தும் மக்களிடையே உண்டு. இக்கட்டுரையில் எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்கள் ஆவார்களா? இல்லையா? என்பதைப் பற்றி விவரமாக விவரிக்கப்பட்டுள்ளது. படிக்க: அமெரிக்கர்=கிறிஸ்தவர்? (American=Christian?)

தேதி: 12th June 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

* கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை என்ன? தேவனைப் பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்? போன்ற விவரங்களை இக்கட்டுரை விளக்குகிறது, படிக்கவும்: "கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்? - What Do Christian Believe?"

* ம‌னித‌ன் ந‌ற்ப‌ண்புள்ள‌வ‌னாக‌ வாழ‌முடியுமா? அறிவுபெருக்க‌ம், ந‌ல்லொழுக்க‌ம், ம‌த‌ம் ம‌ற்ற‌ம் ச‌ட்ட‌ம் போன்ற‌வைக‌ளை பின்ப‌ற்றுவ‌தால் ந‌ற்ப‌ண்பு ந‌ம்மில் தொட‌ர்ச்சியாக‌ வாழுமா? மனிதன் நற்பண்புள்ளவனாக வாழ்வதற்காக தேவன் ஏதாவது செய்துள்ளாரா? போன்ற கேள்விக‌ளுக்கு ப‌தில் இக்க‌ட்டுரையில் காணலாம், படிக்கவும்: "நற்ப‌ண்பு உங்க‌ளில் வாழ்கிற‌தா? - Does Goodness Live In You?"

தேதி:  11th May 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்படுகிறது. எங்கள் தமிழ் பகுதியை கீழ் கண்ட கட்டுரைகளோடு ஆரம்பிக்கிறோம்.

*  குர்ஆனை அல்லா பாதுகாத்தான் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களின் வாதம் சரியானது அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது இந்த கட்டுரை: குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா?

* முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க முஸ்லீம்கள் பயன்படுத்தும் உபாகமம் 18ம் அதிகாரத்தைக் கொண்டே "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்று நிருபிக்கும் ஆதாரபூர்வமான கட்டுரை இது: உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet).

* இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்து அல்லா செய்த குளறுபடியையும், அல்லாவின் அறியாமையையும் கேள்விக்குறியாக்கும் கட்டுரை: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (Deceptive God, Incompetent Messiah and Allah Starts Christianity ... by Accident).

* மாற்கு 16ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு சவாலை முன்வைத்த, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரை: மாற்கு 16ம் அதிகாரத்தின் சவால்.

* முகமது செய்த கொலைகள் பற்றிய ஒரு சிறு ஆய்வுக்கட்டுரை: முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)

* முகமது எப்படி மக்களை கொடுமைப்படுத்த அனுமதித்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை: முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

* பைபிளையும் குர்‍ஆனையும் எப்படி ஒப்பிடுவது? பைபிளோடு குர்‍ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியா? போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதில் அளிக்கிறது: பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

* பைபிள் திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டும் முஸ்லீம்கள், தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை முன்வைக்க முடியுமா? படியுங்கள்: முஸ்லீம்களின் யார்-எப்போது-எங்கே-எப்படி-என்ன-ஏன் என்ற பல பிரச்சனைகள்.